Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?

1. முதலில் கருவுற்ற பெண்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. அதிலும் தலைக்குக் குளித்தால், நீண்ட நேரம் ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உண்ணும் உணவில் அதிக காரம் அல்லது புளிப்பு உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அதிலும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். உண்ட உடனே தூங்கக் கூடாது, வேண்டுமென்றால் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
3. மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்க்க வேண்டும். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து, மற்ற பழங்களை சாப்பிடலாம்.
4. தண்ணீரை நன்கு காய்ச்சியே குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரானது குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
5. இடி, மழை, மின்னல் போன்றவை ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது. அதே போல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது.
6. கர்ப்பக்காலத்தில் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுவதால் சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பர். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
7. அதிக சப்தம் போட்டு பேசுதல், மனதை பாதிக்கும் காட்சிகளை பார்த்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் குழந்தையானது எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மிதமான வேலை, மிதமான உடற்பயிற்சி, மிதமான நடை, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படி என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
