Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிகளே, நார்ச்சத்து உணவுகளை நிறைய சாப்பிடுங்க!

மலச்சிக்கல் பிரச்சினை
கர்ப்பமான நான்காவது மாதம் பொதுவாக அனைவருக்கும் வரும் பிரச்னை மலச்சிக்கல். அப்போது சிரமப்பட்டு மலம் கழிக்கக்கூடாது. எனவேதான் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர்
நிறைய கீரை சாப்பிடுவதும், பழங்கள் சாப்பிடுவதும்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு. பழச்சாறு சாப்பிடுவதைவிட பழமாக சாப்பிடுவது நல்லது.அதிலிருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கும்.
மேலும் பாதாம் பருப்பு, பீன்ஸ், கீரைகள், பூசணிக்காய், பேரிக்காய், ப்ளாக் பெரிஸ், பயறுவகைகள், வேகவைத்த உருளைக்கிழங்கு, வாழைப்பழம், ஆரஞ்சு, போன்றவைகள் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவற்றை கர்ப்பிணிகள் தவறாமல் தங்கள் உணவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இது மலச்சிக்கலை நீங்கும்.
கால்சிய உணவுகள்
15 வாரங்கள் ஆனதும் நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். கால்சியம் சத்து நிறைய தேவைப்படுகிறது என்பதால், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு லிட்டர் பால் அருந்த வேண்டும். கால்சியம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும், மாத்திரையைவிட பால் நல்லது. மேலும் தயிர், பால்பொருள்கள், கொண்டக்கடலை, பட்டாணி சாப்பிடலாம். அதில் புரதம், கால்சியம், தேவையான தாது உப்புகள் இருக்கின்றன.
உப்பு, காரம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் காரமான, மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது ஏனெனில் மலச்சிக்கல், ஜீரணமாகாமல் ஏற்படும் நெஞ்சு எரிச்சல் போன்றவற்றிர்க்கு அதுவே காரணமாகிவிடும். எனவே எண்ணெய் குறைவான காரம் இல்லாத உணவாக இருப்பது நலம். ஊறுகாய் சாப்பிடவேண்டும் போல் இருந்தாலும் அதில் இருக்கும் அதிகப்படியான உப்பும் எண்ணெயும் உடலுக்கு ஏற்றதல்ல. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக உப்பு ஆகாது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
கால் வீக்கம் கவனிங்க
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால் வீங்கும். வீக்கம் இருப்பின் சிறிது உயரமான ஸ்டூலில் கால்களைத் தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் கர்ப்பிணிகளுக்கு வரும் சாதாரண பிரச்னைதான். பயப்பட வேண்டாம். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஸ்கேன் செய்வதும் அவசியம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.



Click it and Unblock the Notifications