For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எளிதில் கர்ப்பம் தரிக்க மன அமைதி முக்கியம்!

By Mayura Akilan
|

Yoga
திருமணமான தம்பதியர்கள் ஜாலியாக ஊர் சுற்றி மண வாழ்க்கையை கொண்டாடினாலும், சில மாதங்களிலேயே ஏதாவது தகவல் இருக்கா என சொந்த பந்தங்கள் கேட்கத் தொடங்கிவிடுவர்.

குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழலில் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே எளிதில் கருத்தரிக்கவும், அதனை பாதுகாக்கவும் ஏற்ற ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள்.

சரியான சுழற்சி அவசியம்

பெண்ணின் உடற்கூற்றில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமையவேண்டும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே அந்த நேரத்தில் சரியான திட்டமிடல் இருந்தால் கரு உருவாவது நிச்சயம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கரு உருவாக சரியன உடல் பயிற்சியோடு மனப் பயிற்சியும் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. முதலாவதாக தாய்மை அடைவதை விரும்பவேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.

எளிய உடற்பயிற்சி

எளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சியை தவிர்க்லாம். காற்றாட நடக்கலாம். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். நடப்பதன் மூலம் கருத்தரித்தல் எளிதாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.

தசைகளை வலுவாக்கும் சைக்கிள்

சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். இது கால்கள், தொடைகளின், தசைகளை வலுவாக்கும். ரத்த ஓட்டம் சீராகும். உடல் எடை குறைவதோடு, மாதவிலக்கு சுழற்சி சரியான முறையில் நிகழும் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன அமைதி தரும் யோகா

யோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். ரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.

உற்சாகம் தரும் நீச்சல்

நீச்சலானது கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற எளிதான உடற்பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சியை கர்ப்பம் தரித்த பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையோடு தொடரலாம்.

English summary

Exercises To Get Pregnant | எளிதில் கர்ப்பம் தரிக்க மன அமைதி முக்கியம்!

When you try to conceive, all you think about is lifestyle changes and diet to get pregnant fast. However, there are exercises which can help you conceive fast and have a healthy gestation too! Healthy body makes it easy to conceive and also controls your body weight. Weight is one of the major concerns when you try to conceive. You should exercise regularly before conceiving to have a healthy baby. Take a look at the exercises to get pregnant fast.
Story first published: Thursday, January 26, 2012, 10:42 [IST]
Desktop Bottom Promotion