தங்களின் பொறுப்புகளை மாற்றி கொண்ட தம்பதியர் பற்றிய ஒரு சுவாரசியமான கதை!

குடும்பம் என்பது ஒரு மிக அழகான விஷயம்; இந்த பதிப்பில் தங்களின் பொறுப்புகளை மாற்றி கொண்ட தம்பதியர் பற்றிய ஒரு சுவாரசியமான கதையை படித்து அறியலாம்.

குடும்பம் என்பது ஒரு மிக அழகான விஷயம்; இந்த அழகான விஷயம் உருவாக ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு உயிரை படைப்பது தான் அடிப்படையாக உள்ளது. குடும்பம் என்ற அமைப்பின் தலைவனாக ஆணும், தலைவியாக பெண்ணும் வழி நடத்துகின்றனர். இந்த நிலை சற்று தலைகீழாக மாறினால் எப்படி இருக்கும் என்று நீங்கள் யோசித்தது உண்டா? அப்படிப்பட்ட தலைகீழ் சூழல் ஒரு தம்பதியரின் வாழ்வில் நிகழ்ந்து உள்ளது.

Real Life Story: Role Reversal Of Parents In A Family

இந்த பதிப்பில் தங்களின் பொறுப்புகளை மாற்றி கொண்டு, அப்பவாய் மாறிய அம்மா; அம்மாவாய் மாறிய அப்பா பற்றிய ஒரு சுவாரசியமான கதையை படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யார் அந்த தம்பதியர்?

யார் அந்த தம்பதியர்?

கேட்டி மற்றும் பால் என்ற இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்; நண்பர்களாக வாழ்வில் அறிமுகமான இவர்கள், விரைவிலேயே காதலர்களாக மாறினார்கள். காதலர்களாக மாறியதோடு மட்டும் அல்லாமல், வாழ்க்கை முழுதும் இருவரும் சேர்ந்து இருந்து குடும்பம் குழந்தை குட்டி என்று வாழ தீர்மானித்து திருமணம் புரிந்து கொண்டார்கள்!

வாழ்க்கை அழகானது!

வாழ்க்கை அழகானது!

இவர்களின் வாழ்க்கை எண்ணியதை விட மிக அழகாக, ஆழமான அன்பு கொண்டதாகவே இருந்தது. இந்த தம்பதியரின் அழகான வாழ்க்கைக்கு மேலும் அழகு சேர்க்க குழந்தைகள் பிறந்தனர். இந்த தம்பதியர் 3 குழந்தைகளை பெற்று எடுத்து, எல்லா வளமும் பெற்று குழந்தை செல்வம் கொழிக்க வாழ்ந்து வந்தனர்.

வருடங்கள் ஓடின!

வருடங்கள் ஓடின!

வருடங்கள் கடந்து கேட்டியும் பாலும் இளமை ததும்பும் தம்பதியர் நிலையில் இருந்து மாறி, பொறுப்பும் கடமையும் கூடிய முழு நேர பெற்றோர் ஆகி, தங்கள் குடும்பத்தை கவனிக்க தொடங்கினர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆகி கொண்டு வந்தார்கள். இவர்தம் மூன்று குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை 11 ஆம் வகுப்பிலும், மற்றோரு ஆண் குழந்தை 8 ஆம் வகுப்பிலும், பிறிதொரு குழந்தை 3 ஆம் வகுப்பிலும் படித்து வந்தனர்.

மனஅழுத்தம் அதிகமாகியது.!

மனஅழுத்தம் அதிகமாகியது.!

திடீரென ஒரு நாள் கேட்டி தனது வாழ்க்கையை தான் வாழவில்லை என்று யோசிக்க நேர்ந்தது; இந்த யோசனை சட்டென தோன்றி மறையும் யோசனையாய் இல்லாமல், விஸ்வரூபம் எடுக்கும் விருட்சமாக கேட்டியின் மனதில் வளர்ந்து வந்தது.

இந்த மனஅழுத்தம் உருவாக காரணமாக இருந்த விஷயம் என்னவென்று பார்த்தால், தான் மட்டும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு, வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும், தனது கணவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை எந்த வித தொல்லையும் இன்றி வாழ்வதாகவும் எண்ணியது தான்.

எண்ணியது உண்மையா?

எண்ணியது உண்மையா?

ஆம் கேட்டி தனது மூன்று குழந்தைகள், கணவர், குடும்பம் போன்ற அனைத்து விஷயங்களின் தேவையை அறிந்து அவற்றை செய்து கொடுத்து யாருக்கும் எந்த குறையும் இன்றி கவனித்து வந்தார். வேலைக்கு ஆள் கூட வைக்காமல் தானே முன்னின்று அனைத்தையும் மன நிறைவுடனேயே செய்து வந்தார். கேட்டிக்கு அவ்வப்போது பால் உதவினாலும், கேட்டி செய்யும் வேலைகளின் அருமையை பால் உணர்ந்ததில்லை. அதை அவருக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டி மிகுந்த இச்சை கொண்டாள்!

பொறுப்பு மாற்றம்!

பொறுப்பு மாற்றம்!

இவ்வாறு தான் மனதில் எண்ணிய விஷயங்களை ஒளிவு மறைவு இன்றி தனது கணவரிடம் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார் கேட்டி. இதைக் கேட்டு பொறுப்புகளை மாற்றி கொள்வதற்கு வெகு சுலபமாக பால் ஒப்புக்கொண்டார்; எவ்வளவோ விஷயங்களை செய்யும் தன்னால் இந்த வீட்டு வேலைகளை செய்ய முடியாதா என்று யோசித்தே பால் இதை ஒப்புக் கொண்டார்.

இந்த ஒப்பந்தம் ஒரு மாதம் நடக்க வேண்டும்; வாழ்க்கை போகும் போக்கை பார்த்து பிறகு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் தம்பதியர்.!

ஒப்பந்தம் நடக்க தொடங்கியது!

ஒப்பந்தம் நடக்க தொடங்கியது!

கணவன் மற்றும் மனைவியர் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி வாழ்க்கையை நகர்த்த தொடங்கினர்; ஒப்பந்தத்தின் படி பால் தொழில் மற்றும் வீடு இரண்டையும் கவனித்து கொள்ள வேண்டும். கேட்டி தனது வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்வார்; பாலுக்கு எந்த ஒரு உதவியும் புரிய மாட்டார். குழந்தைகள் ஏதேனும் வேண்டுமெனில் அதை தந்தையிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்ற முறையில் வாழ்க்கையை நகர்த்த தொடங்கினர்.

 நிகழ்ந்த கொடூரங்கள்!

நிகழ்ந்த கொடூரங்கள்!

பால் நினைத்த வகையில் வீட்டை கவனித்து கொள்ள முடியவில்லை; குழந்தைகளையும் சரியாக பார்த்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் பள்ளிக்கு எடுத்து செல்லும் பொருட்களை மறந்து சென்று பனிஸ்மென்ட் வாங்கினார்கள்; நடன வகுப்பு போன்ற கூடுதல் வகுப்புகளில் தேவையான ஆடைகள் ஆபரணங்கள் இன்றி சென்று அங்கும் பெருத்த அவமானம் மற்றும் திட்டுக்களை வாங்கி கொண்டனர்.

கொடூரத்தின் உச்சம்!

கொடூரத்தின் உச்சம்!

11 ஆம் வகுப்பு படிக்கும் மகள் படிப்பில் ஆர்வத்தை இழந்து, தன்னை கட்டுப்படுத்த யாரும் இன்றி தான் தோண்றியாக மாற தொடங்கினாள்; இவ்வாறு பல விரும்பத்தகாத மாற்றங்கள் நிகழ தொடங்கின. ஒவ்வொரு நாளும் வீட்டின் தூய்மை மிகவும் மோசமாகி கொண்டே வந்தது; மேலும் வெளியில் இருந்து தான் உணவுகள் வரவழைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகள் எதையும் கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் இருப்பது போல் ஜாலியாகவே பால் இருந்து வந்தார்.

கேட்டியின் மனக்குமுறல்!

கேட்டியின் மனக்குமுறல்!

ஆனால் கேட்டிக்கு தான் மனம் பொறுக்கவில்லை. அவள் ஒப்பந்தத்தை உடைக்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள். மேலும் கேட்டியின் வேதனையை கூட்டும் வகையில் வேலைக்காரி நியமிக்கப்பட்டாள். தன் வீட்டு பணம், மகிழ்ச்சி, குழந்தைகளின் சந்தோசம் மற்றும் அவர்களின் வாழ்க்கை தன் கண் முன்னே அழிவதை பார்த்து எந்த தாயால் மகிழ்ச்சியாய் ஜாலியாக இருக்க முடியும்.

தம்பதியர் பேச்சு வார்த்தை!

தம்பதியர் பேச்சு வார்த்தை!

கேட்டி தனது கணவருக்கு அவர் செய்து வரும் தவறை உணர்த்த விரும்பினாள்; கணவரை தனியாக அழைத்து அவரிடம் தாங்கள் ஒப்பந்தம் தொடங்கிய நாள் முதலாக இன்று வரை நிகழ்ந்த நிகழ்வுகளையும், கணவர் நிகழ்ந்த விஷயங்களை கையாண்ட விதத்தையும் ஒப்பிட்டு எடுத்து உரைத்தாள். குழந்தைகள் இந்த நாட்களில் அடைந்த இன்னல்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை மாறிய விதத்தையும் எடுத்துரைத்தாள்.

எல்லாவற்றையும் கேட்டு மனம் உடைந்தான் பால்; தனது தவறை திருத்த வேண்டும் என்று முடிவு செய்தான்.

கேட்டிக்கு நிம்மதி!

கேட்டிக்கு நிம்மதி!

பால் தான் இனி சரியாக நடந்து கொண்டு தனது எல்லா தவறுகளையும் திருத்தி கொள்வதாக வாக்கு அளித்தான்; நீ சற்று நாள் ஜாலியாக இரு. நான் குடும்பத்தை பார்த்து கொள்கிறேன் என்று உறுதி அளித்து அதன்படி நடக்கவும் செய்தான். நடந்த இந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர், தான் செய்த தவறுகள் எல்லாவற்றையும் சரி செய்ய பால் முயன்றான்; தந்தையின் மாற்றத்தை கண்டு பிள்ளைகள் மகிழ்ந்தனர். கேட்டியும் பாலுக்கு அவ்வப்போது உதவி, வீட்டை கவனித்து கொண்டாள்.

ஒப்பந்தம் தந்த பலன்!

ஒப்பந்தம் தந்த பலன்!

பால் இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக பெண்ணின் அருமையை, குடும்பத்தின் அருமையை நன்கு உணர்ந்து கொண்டான். இதன் பிறகு தனது தான் தோன்றி செயல்களை முட்டை கட்டி வைத்து விட்டு, பொறுப்பான குடும்ப தலைவனாக இருப்பது என்று முடிவு செய்து கொண்டான். கேட்டிக்கு நல்ல கணவனாக, நல்ல நண்பனாக, குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பது என்று முடிவு செய்தான்.

தம்பதியர் இருவரும் ஒன்று இணைந்து தங்களின் குடும்ப மேம்பாட்டிற்காக உழைத்தனர்; வழிமாறிய தங்கள் குழந்தையை நல்வழிப்படுத்தினர்; மற்ற குழந்தைகளையும் நன்கு கவனித்து கொண்டனர். வீடு இன்பமயமாக மாறியது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, October 3, 2018, 11:40 [IST]
Desktop Bottom Promotion