Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தாய்ப்பாலூட்டும் பெண்கள் மார்பகத்தை அழுத்துவது மார்பகத்தில் கட்டியை ஏற்படுத்துமா?
தாய்ப்பால் என்பது குழந்தையின் வளர்ச்சியில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஷயம். தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் மார்பகங்களை அழுத்திவிடுவது ஏன் என்று இங்கு படிக்கலாம்.
கர்ப்பம் அடைந்த பின் பெண்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை; தனது வயிற்றில் உருவான கருவிற்காக பெண்கள் பார்த்து பார்த்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவர். பெண்கள் பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்ற குழந்தையை பிரசவித்த பின்னும் கூட, குழந்தைகளை வளர்க்கும் கடமை பெண்களுக்கு பல மடங்காகுமே தவிர குறையாது; குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வளர்க்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

குழந்தை வளர்ப்பின் முதல் அடியாக திகழ்வது தாய்ப்பால் அளித்தல் தான்; இந்த உன்னதமான பணியில் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் அளிக்கும் பொழுது மார்பகங்களை அழுத்தி விட வேண்டுமா? அது அவசியமா? இதனால், பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் ஏதும் ஏற்படுமா போன்ற விஷயங்கள் குறித்து இங்கு படிக்கலாம்.

ஏன் அழுத்தம் தேவை?
தாய்ப்பால் அளிக்கும் பெண்கள் குழந்தையை சரியாக மடியில் இருத்திக் கொண்டு, கைகளால் சரியாக குழந்தையை பிடித்துக் கொண்டு, குழந்தையின் வாயில் மார்பின் முலைக்காம்பை வைத்த பின் அவ்வப்போது மார்பகத்தில் சற்று அழுத்தம் கொடுத்து அதாவது மார்பகத்தை அமுக்கி விட்டு மார்பகத்தில் பால் சுரப்பு சரியாக நிகழ்வதற்கு உதவ வேண்டும்.
மேலும் குழந்தைக்கு தொடர்ந்து பால் கிடைக்க, அதிகமான மற்றும் போதுமான பால் குழந்தையை சென்றடைய தாய்மார்கள் மார்பகத்தில் அழுத்தம் கொடுத்தால் நல்லது. இப்பொழுது இவ்வாறு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள் மார்பகத்தில் அழுத்தம் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

குழந்தைக்கு நல்லது!
தாய்ப்பால் கொடுக்கும் பொழுது குழந்தைகள் உறங்காமல் இருக்க, குழந்தைகளின் வாய் சரியாக தாயின் மார்பு முலைக்காம்பில் பொருந்த, தாய்ப்பால் சரியாக குழந்தையை சென்றடைய மற்றும் தாய்ப்பால் சுரப்பு அதிகமாக நடைபெற தாய்மார்கள் மார்பில் கொடுக்கும் அழுத்தம் உதவும். எப்படி என்று கேட்கிறீர்களா?

எப்படி நல்லது?
தாயின் மார்பகத்தில் பால் காலியானால் தான் அடுத்து பால் சுரக்கும், அதற்கு மார்பகத்தில் இருக்கும் பாலை அழுத்தம் கொடுத்து வெளியேற்ற வேண்டும்; பால் தொடர்ந்து கிடைத்தால் தான் குழந்தை தூங்காமல் போதிய அளவு பால் குடித்து நன்கு பசியாறும்; இதனால் குழந்தையின் பசி மற்றும் பால் குடிக்கும் போதான தூக்கம் தடுக்கப்படுகிறது.
தாய் அவ்வப்போது அழுத்தம் கொடுக்க முயல்வதால் தாயின் கவனம் குழந்தையின் மீதே இருக்கும்; குழந்தையின் வாய் மார்பை விட்டு விலகாமல் இருக்க தாயின் கவனம் உதவும்.

தாய்க்கு என்ன நன்மை?
குழந்தைக்கு பால் அளிக்கும் பொழுது மார்பில் அழுத்தம் தருவதால் தாய்க்கு என்ன நன்மை என்று பார்த்தால், தாய் அவ்வப்போது மார்பை அழுத்தி விடுவதால், தாயின் மார்பில் பால் கட்டிக் கொள்ளாமல் இருக்கும். மேலும் தாயின் மார்பு புண்ணாகாமல் இருக்க இந்த அழுத்தம் உதவும்; அதாவது குழந்தைக்கு தொடர்ந்து பால் கிடைப்பதால், குழந்தை குறைந்த நேரத்திலேயே பால் குடித்து விடுகிறது, இதனால் அதிகநேரம் குழந்தையின் வாய் மார்பில் இருந்து தாயை காயப்படுத்துவது தடுக்கப்படுகிறது.
மேலும் தாயின் உடலில் தாய்ப்பால் சுரப்பு அதிகம் நடைபெற, பெண்கள் மார்பில் கொடுக்கப்படும் அழுத்தம் உதவுவதால், பெண்கள் குழந்தைக்கு போதிய அளவு ஆரோக்கியமான உணவு அளித்த நிம்மதியை பெறுகின்றனர்.

எப்படி அழுத்த வேண்டும்?
தாய்மார்கள் சரியான நிலையில் அமர்ந்து கொண்டு, குழந்தையை மிகச்சரியான முறையில் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும். பின்னர் குழந்தையின் வாயை சரியாக மார்பின் முலைக்காம்பை பற்றிக் கொள்ளுமாறு வைத்துவிட்டு குழந்தையை பால் குடிக்க விட வேண்டும்.
குழந்தையை கூர்ந்து கவனித்து வர வேண்டும்; குழந்தைக்கு பால் கிடைக்காதது போல் தோன்றினால், அந்த சமயங்களில் மார்பகங்களை அமுக்கி விட வேண்டும். இது போல், அவ்வப்போது மார்பகங்களை அமுக்கி சிறிது நொடிகள் பிடித்திருந்தது பின் விட்டுவிட வேண்டும். தொடர்ந்து அமுக்கிக் கொண்டே இருக்க கூடாது. இது மாதிரி குழந்தை முழுமையாக பால் குடிக்கும் வரை செயல்பட்டு வர வேண்டும்.

அனைவரும் இதை செய்யலாமா?
இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை; அனைத்து பெண்களும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது தாய்ப்பால் சரியாக குழந்தையை சென்றடைய இது போன்று மார்பகத்தில் அழுத்தம் கொடுக்கலாம். மேலும் தாயின் உடலில், முக்கியமாக மார்பகத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை பெற்று இச்செயல் புரிவது நல்லது.

கட்டிகள் உருவாகுமா?
குழந்தையை சரியாக கையில் ஏந்தி, சரியாக செயல்பட்டால் எந்த தீங்கும் நேராது; பால் கட்டிக் கொள்ளாமல் இருக்க தான் இந்த அழுத்தம் கொடுக்கும் முறை உதவும். ஆனால், மார்பகத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாலோ அல்லது மார்பகத்தில் தவறான முறையில் அழுத்தம் கொடுத்தாலோ அந்த சமயத்தில் நீங்கள் செய்த தவறால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை.

வேகம் அவசியமா?
தாய்ப்பால் அளிக்கும் பொழுது மார்பகத்தை அழுத்தி விட வேண்டும் என்ற காரணத்திற்காக அதிக வேகத்துடன், மார்பகங்களை அழுத்துதல் கூடாது; ஒரு பூவை அமுக்கி எடுப்பது போல், மிருதுவாக மார்பகத்தை கையாள வேண்டும். மெதுவாக பால் வெளியேறும் வண்ணம் அழுத்தி, மெதுவாக விட்டுவிட வேண்டும். அதிக அழுத்தமோ, தொடர்ந்த அழுத்தமா கூடாது.



Click it and Unblock the Notifications
