குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பிறந்த குழந்தைக்கு மிகவும் ஊட்டச்சத்துமிக்க ஒரு உணவு தான் தாய்ப்பால். அதனால் தான் உடல்நல நிபுணர்கள் தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால், அது குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல வழிகளில் உதவும்.

How Breast Milk Changes With Time

மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள சத்துக்களும் மாற்றமடையும். குறிப்பாக குழந்தை பிறந்த ஒரு வருட காலத்தில் தான், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு தாய்ப்பாலில் குறிப்பிட்ட மாற்றங்களும் ஏற்படும். சரி, இப்போது அந்த மாற்றங்கள் குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாற்றம் #1

மாற்றம் #1

பிரசவித்த 2 மணிநேரத்திற்குள் குழந்தைக்கு ஏன் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று சொல்கிறார்கள் எனத் தெரியுமா? அதுமட்டுமின்றி, இந்த பால் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்த பால் தான் உலகிலேயே மிகவும் சத்து நிறைத்தது. இதில் கொலஸ்ட்ரோம் உள்ளது.

மாற்றம் #2

மாற்றம் #2

குழந்தை பிறந்த 3 மணிநேரத்திற்குப் பின், தாய்ப்பால் மிகவும் நீர்மமாக இருக்கும். ஆனால் 2-3 நாட்கள் கழித்து தாய்ப்பாலின் அடர்த்தி சற்று அதிகரித்திருக்கும்.

மாற்றம் #3

மாற்றம் #3

ஆறு வார காலத்திற்கு பின், குழந்தையின் உடலைப் பாதுகாக்க தாய்ப்பாலில் ஆன்டி-பாடிகள் அதிகரித்திருக்கும்.

மாற்றம் #4

மாற்றம் #4

குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்குப் பின், குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு தாய்ப்பாலில் கலோரிகள் சற்று அதிகமாகி இருக்கும்.

மாற்றம் #5

மாற்றம் #5

ஆறு மாத காலத்திற்குப் பின், தாய்ப்பாலில் ஒமேகா அமிலங்கள் அதிகமான அளவில் இருக்கும். இந்த சத்து குழந்தையின் ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவி புரியும்.

மாற்றம் #6

மாற்றம் #6

12 மாதங்களுக்கு பின் ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுத்தால், அந்த பாலில் ஒமேகா அமிலங்கள் மற்றும் கலோரிகள் இரண்டுமே அதிகளவில் இருக்கும். இந்த நிலையில் குழந்தைக்கு தாய்ப்பாலைக் கொடுக்கும் போது, அது குழந்தையின் தசை மற்றும் மூளை வளர்ச்சியை வேகமாக்கும்.

எனவே தான் அழகு பாழாகிறது என்று குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என கூறுகிறார்கள். இதைப் புரிந்து, உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், குறைந்தது ஆறு மாத காலமாவது குழந்தைக்கு தாய்ப்பாலைத் தவறாமல் கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Breast Milk Changes With Time

Most of us dont know that breast milk changes during the first few months of the feeding. It changes color and later, the nutrients in it keep changing.
Story first published: Monday, January 16, 2017, 17:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter