மார்பகத்தின் அளவிற்கும் தாய்பால் சுரப்பிற்கும் தொடர்பு உண்டா? அறியாத தகவல்கள்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

மார்பங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சிறிய மார்பகங்களை உடைய பெண்கள் குழந்தைக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்குமா சுரக்காதா என்பதை பற்றி கவலைப்படுவார்கள். பெரிய மார்பங்களை கொண்ட பெண்களுக்கு குழந்தை எவ்வாறு தன் மார்பகத்தோடு இணைத்து பால் தருவது என்ற கவலை இருக்கும்.

பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ள பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட சில வழிமுறைகள்

இதில் நல்ல செய்தி என்னவென்றால் மார்பகங்களின் அளவை பொருத்து பால் சுரக்கும் அளவு வேறுபடாது என்பது தான். நீங்கள் மார்பங்களையும் தாய்பால் கொடுப்பதையும் பற்றி மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கர்ப்ப காலம்

1. கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தின் போதே பெண்களின் மார்பகங்கள் பால் கொடுப்பதற்கு தயாராகுகின்றன. சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் அறிகுறியாக மார்பகத்தில் வலி உண்டாகும். இது கர்ப்ப கால ஹார்மோன்கள் சரியான விதத்தில் இயங்குகின்றன என்பதை குறிக்கிறது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்கள் பெரிதாவதையும், காம்புகள் அடர்ந்த நிறத்தை அடைவதையும் உணர்ந்து இருப்பார்கள். இது மார்பங்கள் தாய்பாலை சுரக்க தயாராவதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

2. மார்பகத்தின் அளவும் தாய்ப்பாலும்

2. மார்பகத்தின் அளவும் தாய்ப்பாலும்

மார்பகத்தின் அளவை பொருத்து பால் சுரக்கும் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. எனவே சிறிய அளவு மார்பகங்கள் கொண்ட பெண்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

3. மார்பகத்தின் அளவு

3. மார்பகத்தின் அளவு

மார்பகங்களில் உள்ள கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்து தான் ஒருவரின் மார்பக அளவு உள்ளது. எனவே மார்பக அளவிற்கும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

4. தேவையான அளவு பால்

4. தேவையான அளவு பால்

உங்கள் குழந்தைக்கு தேவையான அளவு பாலை கொடுப்பது அவசியம். பசிக்கும் போது பால் தருவதும் அவசியம்.

5. அதிகமாக பால் சுரக்க காரணம்

5. அதிகமாக பால் சுரக்க காரணம்

தாய் பால் குழந்தையை பொருத்தும் வேறுபடும். குழந்தை அதிகமாக பால் குடித்தால் தாய்க்கு அதிகமாக பால் சுரக்கும் வாய்ப்புள்ளது.

6. பெரிதாகும் மார்பகங்கள்

6. பெரிதாகும் மார்பகங்கள்

தாய்பால் அதிகரிக்கும் போது மார்பகத்தின் அளவு பெரிதாகும். கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் மார்பக அளவில் சிறிதும் மாற்றம் இல்லாவிட்டால், அப்பெண்ணிற்கு போதுமான சுரப்பி திசுக்கள் இல்லை என்று அர்த்தம். அத்தகைய பெண்களுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இப்பிரச்சனையை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

7. பால் சுரக்காததற்கு காரணம்

7. பால் சுரக்காததற்கு காரணம்

பெண்ணிற்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கு அதிகமாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்தது, மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவைகள் காரணங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are Milk Production and Breast Size Related

Here are the some unknown things about breast size and milk production
Story first published: Wednesday, June 14, 2017, 15:00 [IST]