குழந்தை பிறந்த 24 மணிநேரத்தில் என்னவெல்லாம் நடக்கும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

முதல் முறையாக கருத்தரித்துள்ளீர்களா? அப்படியெனில் பிரசவத்திற்கு பின் நிச்சயம் நீங்கள் பல ஆச்சரியமான மற்றும் வித்தியாசமான அனுபவங்களைப் பெறுவீர்கள். கர்ப்ப காலம் பெண்களுக்கு பல வித்தியாசமான உணர்வுகளை வழங்கியிருக்கலாம்.

ஆனால் பிரசவ காலம் நெருங்கும் போது, உடலானது பழைய படி மாறுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கும். இந்த தருணத்தில் ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் அச்ச உணர்வு மனதில் எழும். ஆகவே இக்காலத்தில் ஒவ்வொரும் கணவரும் தன் மனைவிக்கு ஆறுதலாக இருக்க வேண்டியது அவசியம்.

சரி, கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம். பிரசவம் முடிந்த ஒரு மணிநேரத்திற்குள் பெண்களின் உடலில் பல மாற்றங்களும், விஷயங்களும் நிகழும். இங்கு அவை என்னவென்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உபரி நீர் எடை

உபரி நீர் எடை

பிரசவத்தின் போது ஏற்கனவே உடல் 10-13 கிலோ எடையை இழக்கும். இருப்பினும் உடலில் இன்னும் உபரி நீரின் எடையை சுமக்க வேண்டியிருக்கும். இந்த உபரி நீரானது சிறுநீர் வாயிலாக குழந்தை பிறந்த 7 நாட்களில் வெளியேறிவிடும்.

இடுப்புப் பகுதியில் பிடிப்புகள்

இடுப்புப் பகுதியில் பிடிப்புகள்

மற்றொரு முக்கியமான ஒன்று இடுப்புப் பகுதியில் கடுமையான பிடிப்புக்களை உணரக்கூடும். குழந்தை பிறந்த பின் கர்ப்பப்பை பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கும். அதுவும் 2 பவுண்ட் முதல் 2 அவுன்ஸ் வரை இந்த சுருக்கம் இருக்கும். எனவே கட்டாயம் பிரசவத்திற்கு பின், முக்கியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இடுப்புப்பகுதியில் கடுமையான பிடிப்புக்கள் ஏற்படும். ஆனால் ஒரு வாரத்திற்கு பின் இந்த பிடிப்புக்கள் மெதுவாக குறைந்துவிடும்.

இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு

சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் முடிந்த பின், பெண்களுக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்படும். இத்துடன் சளி, எஞ்சிய இரத்தம் மற்றும் கருப்பை புறணியில் இருந்து திசுக்களும் வெளியேற்றப்படும். பெரும்பாலான பெண்களுக்கு பிரவசத்திற்கு பின் 3-10 நாட்கள் கடுமையான இரத்தப்போக்கு இருக்கும். இது சாதாரணம் தான் மற்றும் சில வாரங்களில் இது குறைந்துவிடும்.

மனநிலை மாற்றம்

மனநிலை மாற்றம்

பிரசவத்திற்கு பின் 24 மணிநேரத்தில் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம். இதற்கு திடீரென்று உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், தூக்கமின்மை போன்றவைகள் காரணமாக இருக்கும். இதனை குடும்பம் மற்றும் நண்பர்களின் உதவியுடன் சரிசெய்யலாம். மேலும் நல்ல ஓய்வு அவசியம்.

காயங்கள்

காயங்கள்

சுகப்பிரசவத்திற்கு பின், பிறப்புறுப்பின் வாய் பெரிதாகியிருப்பதோடு, அப்பகுதியில் தையல் போட்டிருப்பதால் கடுமையான வலியை உட்கார்ந்து எழும் போதொல்லாம் சந்திக்க நேரிடும். இதனை சரிசெய்ய ஐஸ் பேக் கொண்டு அப்பகுதிக்கு ஒத்தடம் கொடுக்கவும்.

சிசேரியன் செய்தவர்களுக்கு, அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், அவ்விடத்தில் உள்ள வெட்டுக்காயங்களால் வலியை சந்திக்கக்கூடும். இந்த வலியை மருத்துவர்கள் பரிந்துரைத்த வலி நிவாரணிகளை எடுப்பதன் மூலம் தடுக்கலாம்.

மார்பகங்களில் மாற்றம்

மார்பகங்களில் மாற்றம்

மற்றொரு முக்கியமான ஓர் நிகழ்வு, பிரசவத்திற்கு பின் 24 மணிநேரத்தில் மஞ்சள் நிறத்தில் சற்று கெட்டியான சீம்பால் உருவாகும். இப்பாலை பிரசவம் முடிந்த 2 மணநேரத்திற்குள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் மார்பக காம்புகள் மிகவும் மென்மையாக இருப்பதால், குழந்தை பால் குடிக்கும் போது வலியை உணரக்கூடும். நாட்கள் செல்ல செல்ல அது சரியாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens In The First 24 Hours After Giving Birth

After delivering the baby, there are several changes that happen to the body of the women. Read to know more.
Story first published: Friday, March 4, 2016, 16:34 [IST]
Subscribe Newsletter