பிரசவத்திற்கு பிறகு பெண்களிடம் ஏற்படும் மாற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

குழந்தை பிறந்த பிறகு பெண்கள் வெளிப்படையாக பேசாதிருக்கும் விஷயங்கள் பலவன இருக்கின்றன. அதில், மாதவிடாயும் ஒன்று. குழந்தை பிறந்த பிறகு தற்காலிகமாக மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள் தென்படலாம்.

ஓரிரு மாதத்தில் இது சரியாகிவிடும். இல்லை என்றால் நீங்கள் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். கர்ப்பமான பிறகும், குழந்தை பிறந்த பிறகும் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதனால், மாதவிடாய் சுழற்சியில் மற்றம் ஏற்பட வாய்புகள் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பமாக இருக்கும் போது இரத்தப்போக்கு?

கர்ப்பமாக இருக்கும் போது இரத்தப்போக்கு?

கர்ப்பம் தரித்த பிறகு மாதவிடாய் நிற்க வேண்டும் ஆயினும், 25% பெண்கள் மத்தியில் பெண்ணுறுப்பு வழியாக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது, கர்ப்பக் காலத்தின் ஆரம்பக்கட்டதிலும், இறுதிக் கட்டத்திலும் சிலருக்கு ஏற்படுகிறது.

கர்ப்பமாக இருக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுவது ஏன்?

கர்ப்பமாக இருக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுவது ஏன்?

கர்ப்பத்தின் முதல் 13 வாரங்களுக்குள் கர்ப்பப்பை வாய் மூலமாக இரத்தப்போக்கு ஏற்படுலாம். இது ஒருவேளை கருச்சிதைவு என்ற அச்சம் அளிக்கலாம்.

இல்லையேல் கருச்சிதைவாக கூட இருக்கலாம். இது 15 - 20% கருச்சிதைவிற்கான வாய்ப்பாக அமையலாம். எனவே, நீங்கள் ஆரம்பத்திலேயே மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

குழந்தை பிறந்த பிறகு மாதவிடாய் எப்போது ஏற்படும்?

குழந்தை பிறந்த பிறகு மாதவிடாய் எப்போது ஏற்படும்?

குழந்தை பிறந்த பிறகு தாய்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு, மாதவிடாய் சுழற்சியில் சில மாற்றங்கள், நாட்கள் தள்ளி போவது ஏற்படலாம். தாய் பால் ஊட்டும் ஆறு மாதங்கள் வரை இது இருக்கலாம்.

இதற்கு காரணம் அதிக அளவில் சுரக்கும் புரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் என கூறப்படுகிறது. இந்த புரோலேக்ட்டின் ஹார்மோன் தான் தாய் பால் சுரக்க காரணமாகும்.

தாய் பால் ஊட்டாமல் இருந்தால் என்னவாகும்?

தாய் பால் ஊட்டாமல் இருந்தால் என்னவாகும்?

தாய் பால் ஊட்டினாலும், ஊட்டாவிட்டாலும் இந்த மாதவிடாய் பிரச்சனை 4 - 8 வாரங்களுக்கு இருக்க தான் செய்யும்.

மேலும், தாய் பால் ஊட்டாமல் இருப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதகமாக அமையும்.

பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் வராமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் வராமல் போனால் என்ன செய்ய வேண்டும்?

வெளிப்படையாக கூற வேண்டும் எனில், பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் தள்ளி போவது அல்லது, ஓர் மாதம் வராமல் இருப்பது சாதாரணம்.

பிரசவத்திற்கு பிறகு மூன்று மாதங்கள் கழித்தும் மாதவிடாய் வராவிடில் மகப்பேறு மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

எப்போது மருத்துவரை காண வேண்டும்?

எப்போது மருத்துவரை காண வேண்டும்?

பிரசவம் முடிந்த 6 வாரங்கள் கழித்தும் இரத்தப்போக்கு ஏற்படுவது, இரத்தப்போக்கில் அடர்த்தியான கட்டிகள் போன்று வெளிப்படுவது போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை காண்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What To Expect From Your Period After Pregnancy

What To Expect From Your Period After Pregnancy, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter