குழந்தையை 35-வது வாரத்தில் பிரசவிப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல் அபாயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் குதூகலமான காலமாகும். ஆனாலும் கூட கர்ப்பமாக இருக்கும் வேளைகளில் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

குறைமாத பிரசவம் என்பது கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான மிக ஆபத்தான ஒன்றாகும். பொதுவாக, முழு கர்ப்ப காலம் என்பது 40 வாரங்கள் வரை நீடிக்கும்.

37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் பிரசவங்கள் அனைத்தும் குறைமாத பிரசவமாகவே கருதப்படும். குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பிறக்கும் போதும், பிற்காலத்திலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டு அவதிப்படலாம் என பல ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

35 வாரங்களுக்கு முன்னதாக பிறந்த குழந்தைகளுக்கு பல குறுகிய கால மற்றும் நீண்ட கால சிக்கல்கள் ஏற்படும். இது குழந்தைக்கு மட்டுமல்லாது தாய்க்கும் பொருந்தும்.

இவைகள் போக, குறைமாத பிரசவ அனுபவம் ஏற்படும் போது, தாய்க்கு உணர்ச்சி ரீதியான அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

குறைமாத பிரசவத்தை பொறுத்த வரையில், குழந்தைக்கும் தாய்க்கும் உடனடி மருத்துவ கவனிப்பு அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைந்தபட்ச மருத்துவ தலையீட்டுடன் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிசேரியன் அறுவை சிகிச்சை

சிசேரியன் அறுவை சிகிச்சை

நஞ்சுக்கொடி முன் வருதல் நிலை அல்லது கூடுதல் இரத்த அழுத்தம் போன்ற இடர்பாடு ஏற்படும் நிலையில், குறைமாத பிரசவம் ஏற்படும். அப்போது மருத்துவர்கள் சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையையே விரும்புவார்கள். 35-வது வாரத்தில், கருவில் உள்ள சிசு சுகப்பிரசவத்திற்கு தயாராக இருக்காது. 35-வது வாரத்தில் குழந்தையைப் பிரசவிப்பதால் ஏற்படும் உடல்நல ஆபத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

சுவாச கோளாறுகள்

சுவாச கோளாறுகள்

கர்ப்ப காலத்தின் முடிவின் போது தான் நுரையீரல் முழுமையான வளர்ச்சியைப் பெறும். அதனால் 35-வது வாரத்திற்கு முன்னதாக பிறந்த குழந்தைகளுக்கு பல்வேறு சுவாச கோளாறுகள் ஏற்படலாம். சில சூழலில், குறைமாத பிரசவம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தால், நுரையீரலின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த மருத்துவர்கள் மருந்து கொடுத்து வருவார்கள்.

 மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் மற்றொரு பொதுவான அறிகுறி தான் உடலியல் மஞ்சள் காமாலை. இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை. சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் இதனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடலாம். குழந்தையை 35 வாரத்திற்கு முன்பாகவே பெற்றெடுப்பதில் ஏற்படும் உடல்நல அபாயங்களில் இதுவும் ஒன்றாகும்.

இதய நோய்கள்

இதய நோய்கள்

நிலைத்த நாளத் தமனி (Patent Ductus Arteriosus) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற சில நிலைகள் உள்ளது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை அளித்து வந்தால், பொதுவாக இத்தகைய இதய பிரச்சனைகள் தானாக சரியாகிவிடும். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால், இதயம் மூலமாக அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்படும். இதனால் பின்னாட்களில் இதய செயலிழப்பு ஏற்படும்.

மூளை பிரச்சனைகள்

மூளை பிரச்சனைகள்

குறைமாத குழந்தைகளுக்கு இன்ட்ராவெண்ட்ரிகுலர் ஹெமரேஜ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக இது தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், இத்தகைய சூழலில் உடனடி மருத்துவ கவனிப்பு தான் மிகவும் முக்கியம். 35 வாரங்களுக்கு முன் குழந்தைப் பிறப்பதால் ஏற்படும் உடல் நல ஆபத்துக்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

வெப்பநிலை கட்டுப்பாட்டு பிரச்சனைகள்

வெப்பநிலை கட்டுப்பாட்டு பிரச்சனைகள்

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் 35 வாரங்களுக்கு முன்னதாகவே பிறப்பதால், அவர்கள் உடலில் கொழுப்பின் சேமிப்பு குறைவாகவே இருக்கும். அவர்களின் உடலில் வெப்பம் மிக வேகமாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த தாழ்வெப்பநிலை சுவாச கோளாறுகள் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளையும் ஏற்படுத்தும். 35 வாரத்திற்குள் குழந்தையைப் பெற்றேடுப்பதால் ஏற்படும் இடர்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தொற்றுக்கள்

தொற்றுக்கள்

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதிராத நோய் எதிர்ப்பு அமைப்பு இருக்கக்கூடும். அதனால் அவர்களுக்கு எளிதில் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால், மிதமாக இருக்கும் தொற்று, சீழ்ப்பிடிப்பு ஏற்படும் அளவிற்கு மோசமான நிலையை அடையும். 35 வாரங்களுக்கு முன்பாகவே குழந்தைப் பிறப்பதல் ஏற்படும் ஆபத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Possible Health Risks Of Delivering Baby At 35th Week

Read to know what are the health risks of delivering a baby at the 35th week. These risks might occur after the delivery.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter