கர்ப்பத்தால் ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்குளைப் போக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

பிரசவம் முடிந்த பின், திடீரென்று பெண்களின் வயிறு சுருங்குவதால், பெண்களுக்கு வயிற்றில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் ஏற்படும். இது சுகப்பிரவமாகட்டும் அல்லது சிசேரியன் ஆகட்டும், இப்பிரச்சனையை ஒவ்வொரு பெண்ணும் சந்திப்பார்கள்.

Get Rid Of Pregnancy Stertch Marks

இப்படி கர்ப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க சில கை வைத்தியங்கள் உள்ளன. ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் திடீர் உடல் பருமன் அல்லது எடை இழப்பால் கூட ஏற்படும். இப்போது இக்கட்டுரையில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க உதவும் சில டிப்ஸ்களைப் பற்றி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை ஈஸியாக போக்கும். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதிகளில் தினமும் தடவி காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்க உதவும். அதற்கு விளக்கெண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதிகளில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் நனைத்த காட்டன் துணியால் மூடி வைத்து, சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.

தேன்

தேன்

ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியை வெதுவெதுப்பான நீரால் கழுவி, தேனை அப்பகுதியில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் எளிதில் நீங்கும்.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

விளக்கெண்ணெய் போன்றே லாவெண்டர் எண்ணெயும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்கும். அதற்கு லாவெண்டர் எண்ணெயை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய நல்ல பலனை விரைவில் காணலாம்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏராளமாக உள்ளது. முட்டையில் உள்ள வைட்டமின்கள், இரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை விரைவில் மறையச் செய்யும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Get Rid Of Pregnancy Stertch Marks

How to get rid of stretch marks after pregnancy? Well, here are some remedies to get rid of pregnancy stretch marks...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter