For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

By Maha
|

எப்படி கர்ப்ப காலத்தில் உணவுகளில் பெண்கள் கவனம் செலுத்த வேண்டுமோ, அதேப் போல் பிரசவம் முடிந்த பின்னும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பிரசவம் முடிந்த பின் குழந்தையின் உணவான தாய்ப்பாலைக் கொடுப்பதால், அப்போது எந்த உணவுகளை தாய் உட்கொண்டாலும், அது குழந்தையையும் அடையும்.

சில நேரங்களில் தாய்மார்கள் உட்கொள்ளும் உணவுகளால் குழந்தைகளுக்கு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே பிரசவத்திற்கு பின்னும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இங்கு பிரசவம் முடிந்த பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூபெர்ரி பழங்கள்

ப்ளூபெர்ரி பழங்கள்

ப்ளூபெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் வளமாக உள்ளது. ஒருவேளை உங்களுக்கு ப்ளூபெர்ரி பழங்கள் சாப்பிட கிடைக்காவிட்டால், வைட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்களான் நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும். எனவே சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. மேலும் இப்பழங்கள் உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

ஒருவேளை நீங்கள் சைவ உணவாளர்களாக இருந்தால், பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்கும். இவை செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

நட்ஸ்

நட்ஸ்

கர்ப்ப காலத்திலும் சரி, பிரசவத்திற்கு பின்னும் சரி, நட்ஸை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுப்பதால், அதில் உள்ள சத்துக்கள் கிடைத்து, உடலுக்கு வேண்டிய ஆற்றலும் கிடைக்கும். எனவே பாதாம், வால்நட்ஸ், ஆளி விதை போன்றவற்றை தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள். ஆனால் முந்திரி, உப்பு சேர்த்து வறுத்த பிஸ்தா போன்றவற்றை உட்கொள்ளாதீர்கள்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

மீன், முட்டை, சிக்கன் போன்றவை தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்க உதவுவதோடு, அதில் அதிகப்படியான தெர்மோஜெனிக் அளவு உள்ளதால், அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும். அதுமட்டுமின்றி, மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிகலம் உள்ளது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்

பால் பொருட்களைப் பிரசவத்திற்கு பின் பெண்கள் உட்கொண்டால், அதனால் தாய்ப்பாலில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும். முக்கியமாக மோரை அதிகம் குடிக்கவும் மற்றும் நீர்ச்சத்துடன் இருக்க தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் சோர்வு நீங்கி, கொழுப்புக்களும் வேகமாக கரையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods New Moms Should Eat After Delivery

Here are some foods that you must include in your diet after delivering your baby.
Desktop Bottom Promotion