Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைப்பதற்கான சில டிப்ஸ்...
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருணங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது உடல் எடை அதிகரிக்க வேண்டும் தான். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப்பதுடன், எரிச்சலூட்டும்.
பொதுவாக பெண்கள் பிரசவத்திற்கு பின்னர் சற்று எடை அதிகரிப்பார்கள். இது ஒரு இயற்கையான நிகழ்வு. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது அதிகரிக்கும் உடல் எடையானது, பிரசவத்திற்கு பின் குறைவதற்கு சற்று நாட்கள் ஆகும். ஆகவே அப்போது உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருத்தப்படாமல், பொறுமையாக இருந்து, உடல் எடையை குறைப்பதற்கான சில இயற்கை வழிகளில் ஈடுபட்டால், நிச்சயம் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
இப்போது பிரசவத்திற்கு பின், உடல் எடையை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றினால், விரைவில் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆரோக்கியமான டயட்
பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது, கடுமையான டயட்டை மேற்கொள்ளக்கூடாது. ஏனெனில் அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால், உடல் எடையை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் எடையானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தாய்ப்பால் கொடுப்பது
ஆய்வு ஒன்றில் தாய்ப்பால் கொடுத்தால், பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று சொல்கிறது. ஏனெனில் பாலானது உற்பத்தியாகும் போது, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் எடையானது குறையும்.

உடற்பயிற்சி
உடல் எடையை குறைக்க வேண்டுமென்று எந்நேரமும் உடற்பயிற்சியில் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் பிரசவத்தினால் உடலில் ஏற்பட்ட காயங்கள் குணமாவதற்கு சில நாட்கள் ஆகும். எனவே காயங்கள் குணமாவதற்கு முன்பே உடற்பயிற்சியின் ஈடுபட்டால், அது வேறு சில விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும். ஆகவே மருத்துவரை ஆலோசித்தப் பின்னரே உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

யோகா
பிரசவத்திற்கு பின்னர் உடலானது மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்கு சற்று தாமதமாகும். ஆகவே அப்போது பொறுமையுடன் இருந்து, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மேலும் அத்துடன் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், யோகாவில் ஈடுபடுவதும் மிகவும் சிறந்தது. இதனால் மனம் ரிலாக்ஸ் அடைவதுடன், உடல் எடையும் ஆரோக்கியமாக குறையும்.

போதுமான தூக்கம்
பிரசவத்திற்கு பின்னர் உடல் எடையைக் குறைப்பதில் போதுமான தூக்கமும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எப்படியெனில் சரியான அளவில் தூங்கத்தை மேற்கொள்வதால், உடலானது ரிலாக்ஸ் அடைந்து, ஹார்மோன்கள் சீராக இருக்கும். அதிலும் இந்த செயலை குழந்தை தூங்கும் போது சரியாக மேற்கொள்வது நல்லது.

தண்ணீர் குடிப்பது
தாய்ப்பால் கொடுக்கும் போது, பெண்கள் அதிகப்படியான தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதோடு, பாலின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். மேலும் தண்ணீர் அதிகம் குடித்தால், வயிறு நிறைவதால், ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்கலாம்.



Click it and Unblock the Notifications











