Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
பிரசவத்திற்கு பின்னும் மாதவிடாய் தாமதமாக உள்ளதா?

* குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படும். ஏனெனில் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதால், உடல் நிலையானது பழைய நிலைக்கு திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். ஏனெனில் புரோலாக்டின் என்னும் தாய்ப்பாலை சுரக்கும் ஹார்மோனானது அண்டவிடுப்பினால், மாதவிடாய் நடைபெறுவதை குறைக்கிறது. இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், மாதவிடாய் முறையாக நடைபெறும். சிலருக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தும் வரை கூட தாமதம் ஆகும்.
* நிறைய ஆய்வுகளில் போதிய உடல் எடை இல்லாமல் இருந்தாலோ அல்லது பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரித்தாலோ, மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஆகும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடலில் போதிய ஊட்டசத்துக்கள் இல்லாலிட்டாலும், இந்த பிரச்சனை ஏற்படும். எனவே பிரசவத்திற்கு பின் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டால் தான் ஆரோக்கியமாக, பிட்டாக இருக்க முடியும். எனவே காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவதோடு, உடல் எடை அதிகரிக்காமல் இருக்க பிரசவத்திற்கு பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை செய்து வர வேண்டும். இதனால் மாதவிடாய் சுழற்சியை சரியாக நடைபெற வைக்க முடியும்.
* பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சரியான நேரத்திலோ அல்லது சில மாதங்கள் வரையிலோ மாதவிடாய் சுழற்சியானது தடைபடும். ஏனெனில் தாய்ப்பாலை சுரக்கும் புரோலாக்டின் ஹார்மோனானது, பிரசவத்திற்கு பின் நடைபெறும் மாதவிடாய் சுழற்சியை தாமதமாக்கும். சொல்லப்போனால் பொதுவாகவே அண்டவிடுப்பு சுழற்சி மாதவிடாய் சுழற்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அண்டவிடுப்பு சுழற்சியானது சரியாக நடைபெறாவிட்டால், மாதவிடாய் சுழற்சியும் சரியாக நடைபெறாது.
அதிலும் சில சமயம் பிரவத்திற்கு பின் இரத்த வடிதல் ஏற்படும். இவை முற்றிலும் வித்தியாசமானது. இதை மாதவிடாய் சுழற்சி என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் சிலருக்கு பிரசவத்திற்கு பின், ஒரு வாரம் அல்லது மாதம் வரை இரத்தம் வடியும்.
ஆகவே பிரசவத்திற்கு பின் ஒரு வருடம் ஆன பின்பும் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அவ்வாறு மருத்துவரை அணுகி ஒரு முறை மாதவிடாய் சுழற்சி நடைபெற்றால், பின் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. சொல்லப்போனால், மாதவிடாய் சுழற்சி தாமதமானால், அதற்கு உடலில் போதிய சத்துக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு, நன்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே சரிசெய்துவிடலாம்.



Click it and Unblock the Notifications
