Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகள்!!!
ஒவ்வொரு பெண்ணுக்கும், பிரவசத்திற்கு பின்னர் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான், குழந்தை பிறப்பிற்கு பின்னர் உடலில் இருக்கும் தழும்புகள். அதுமட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகள் பெரிய தொந்தரவைத் தருவதாக இருக்கும்.
சில புதிய அம்மாக்களுக்கு, அந்த பிரச்சனைகள் தெரியாமல் இருக்கும். ஆகவே அத்தகையவர்களுக்காக பிரசவத்திற்கு பின் ஏற்படக்கூடிய சில பொதுவான உடல் நலப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை, அனுபவசாலிகளிடமிருந்து கேட்டு, அவற்றை பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, இத்தகைய பிரச்சனைகள் வரும் போது கஷ்டப்படாமல் எளிதில் போக்கி, குழந்தையுடன் சந்தோஷமாக இருங்கள்.

முதுகு வலி
பிரசவத்திற்கு பின் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தான் முதுகு வலி. அது சிசேரியனாக இருந்தாலும் சரி, சாதாரண பிரசவமாக இருந்தாலும் சரி, தண்டுவடத்தின் அடிப்பகுதியில் குறைந்தது 6 மாதத்திற்கு முதுகு வலியானது இருக்கும். இத்தகைய வலியை போக்குவதற்கு, தினமும் அதற்கேற்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், விரைவில் குணமாக்கலாம்.

மூட்டு வலி
கர்ப்பமாக இருக்கும் போதே உடலில் போதிய கால்சியம் சத்துக்கள் இல்லாவிட்டால், குழந்தை பிறப்பிற்குப் பின் எலும்புகள் வலுவிழந்துவிடும். அதிலும் பொதுவாக இந்த பிரச்சனை 30 மற்றும் 40 வயதுகளில் கர்ப்பமாகும் பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படும். எனவே கர்ப்பமாக இருக்கும் போதே, நல்ல கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை சேர்த்து வருவது நல்லது.

பித்தக்கற்கள்
கர்ப்பமாக இருக்கும் போது, புரோஜெஸ்ட்டிரோன் என்னும் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கப்படும். இந்த ஹார்மோன் பித்தப்பையில் சுரக்கும் பித்த நீர் வெளியேறும் பகுதிகளில் அடைப்பை ஏற்படுத்தும். இந்த பித்த நீர் முறையாக வெளியேறாமல் இருப்பதால், அவை கற்களாக பித்தப்பையில் உருவாகிவிடும். ஆகவே பித்தக்கற்களை கரைக்கும் உணவுகளை நன்கு சாப்பிட்டு வந்தால், அவை பித்தக்கற்களை கரையச் செய்யும்.

குடலிறக்கம்
சிசேரியன் பிரசவம் உள்ளவர்களுக்கு, அந்த காயங்கள் மறையும் வரை போதிய ஓய்வு எடுக்க வேண்டும். இல்லையெனில் காயம் உள்ள பகுதியில் சிறு புடைப்பு அல்லது கொழுப்புள்ள திசு வளர ஆரம்பிக்கும். எனவே நன்கு ஓய்வு எடுப்பது மிகவும் இன்றியமையாதது.

மன இறுக்கம்
பெரும்பாலான பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாவார்கள். ஏனெனில் திடீரென்று ஹார்மோன்களின் அளவு குறைந்து, கூந்தல் உதிர்தல் அதிகரித்து, எடை அளவுக்கு அதிகமாவது போன்றவை மனதை ஒருவித இறுக்கத்திற்கு உட்படுத்துகிறது. எனவே மன இறுக்கத்தை தவிர்க்க, வீட்டில் உள்ளோரிடம் மனம் விட்டு பேசுதல், மனதிற்கு ஆறுதல் தரும் செயல்களை செய்தல், உடற்பயிற்சி செய்தல், வேண்டுமெனில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

முலை அழற்சி
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை தான் முலை அழற்சி/மடி வீக்க நோய். இது காய்ச்சல் மற்றும் வலியின் காரணமாக ஏற்படும். இந்த பிரச்சனை இருந்தால், அப்போது குழந்தைக்கு பால் கொடுக்கக்கூடாது. இந்த பிரச்சனை எளிதில் குணமாகக்கூடியது. ஆகவே அதற்கேற்ற மருந்துகளை மருத்துவரை ஆலோசித்து உட்கொண்டு சரிசெய்யலாம்.



Click it and Unblock the Notifications