For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது அம்மா எப்படி ஸ்லிம் ஆவாங்க?

By Mayura Akilan
|

7 ways for new mums to get back in shape
கர்ப்பகாலத்தில் சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.

தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள். இதுதான் உடல் இளைக்காமல் போவதற்கு காரணமாகிறது. எனவே பெண்கள் கண்டிப்பாக ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். இதனால் உடல் கண்டிப்பாக இளைக்கும்.

ஜும்பா டான்ஸ் ஆடுங்க

நடனமாடுவது ஒருவகை உடற்பயிற்சிதான். லத்தின் நடனமான ஜும்பா நடனத்தை ஒருமணி நேரம் ஆடுவதன் மூலம் உடலில் 500 கலோரிகள் வரை குறைகிறதாம். இதனால் உடலும், மனமும் ரிலாக்ஸ் ஆகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாப்பாடு சரியா இருக்கணும்

கர்ப்பகாலத்தில் எந்த அளவிற்கு உணவில் கவனம் செலுத்தினோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட் புட், எண்ணெயில் பொறித்த உணவுகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். காய்கறிகள், மீன் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், தண்ணீர் அதிகம் குடிக்கவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை.

குட்டீஸ் உடன் வாக்கிங்

வீட்டுக்கு அருகாமையில் பார்க் அல்லது பீச் இருந்தால் குழந்தையை அழைத்துக் கொண்டு வாக்கிங் போகலாம். அந்த வசதி இல்லாதவர்கள் வீட்டு மொட்டை மாடியில் நன்றாக ரவுண்ட் அடிக்கலாம். இதனால் உடல் மெலியும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீச்சல் அடிங்களேன்

கிராமங்களில் இருப்பவர்களுக்கு ஆறு, குளம் என நன்றாக நீந்திக்குளிக்க இடம் இருக்கும். ஆனால் நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வசதி குறைவுதான். எனவே கண்டிப்பாக நீச்சல் குளத்திற்குச் சென்று நன்றாக நீந்தி பயிற்சி செய்யுங்கள். இது உடல் அமைப்பை பழைய நிலைக்கு மாற்றும்.

தூக்கம் அவசியமானது...

பிறந்த குழந்தையை வைத்திருப்பவர்கள் சில மாதங்கள் வரை தூக்கத்தை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் 6 மாதங்களுக்குப் பின்னர் தாய்மார்கள் கண்டிப்பாக நன்றாக தூங்கவேண்டியது அவசியம். இதனால் செல்கள் புதுப்பிக்கப்படுவதோடு தேவையற்ற இடங்களில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புகள் கரையும். உடலும் பழைய நிலைக்குத் திரும்பும்.

ரிலாக்ஸ்சா இருங்களேன்

பிரசவத்திற்குப் பின்னர் பெண்களுக்கு ஒருவித மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். உடல் இளைக்காமல் போவதற்கு இந்த மனஅழுத்தமும் ஒருவகையில் காரணமாகிவிடும். எனவே தியானம், மெடிடேசன் செய்து மனஅழுத்தத்தை போக்குங்கள். ரிலாக்ஸ் ஆக இருந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்கின்றனர் நிபுணர்கள்.

English summary

7 ways for new mums to get back in shape | புது அம்மா எப்படி ஸ்லிம் ஆவாங்க?

As your pregnancy began there was nothing you could do to stop your body changing as your little one grew inside you. From your breasts growing and changing shape, to your ankles swelling and, of course, you baby bump. Now that you have your bundle of joy in your arms, you may feel you want to regain your pre-pregnancy body.
Story first published: Tuesday, November 6, 2012, 14:06 [IST]
Desktop Bottom Promotion