For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்திற்கு பின்னாடி மனைவியை பத்திரமாக பாத்துக்கங்க!

By Mayura Akilan
|

Postpartum mood disorder
பிரசவம் என்பது பெண்களுக்கு மறு ஜென்மம் போன்றது. சுகப்பிரசவமோ, சிசேரியனோ எந்த முறையிலாவது குழந்தையை பெற்றெடுத்த உடன் அப்பாடா என்ற நிம்மது பிறக்கும். சில சமயம் டெலிவரி ஆனாவுடன் மனதில் பாரம் குடியேறும் ஒரு வித மன அழுத்தம் ஏற்படும். இது அனைத்துப் பெண்களுக்கும் இயல்பாக ஏற்படுவதுதான். எனவேதான் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள். பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் மருத்துவர்கள் கூறுவதைக் கேளுங்களேன்.

அழுகையும் ஆர்பாட்டமும்

பிரசவமானதும் மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் பெண்கள் பெண்கள் தாங்களாகவே காரணமின்றி அழுவார்கள். குழந்தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத்தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிகளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்கு பேபி ப்ளூஸ் Baby Blues என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். பிரசவித்த ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.

மனநோய் கோளறுகள்

சிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டுள்ளனர் மருத்துவர்கள். இது ஏற்கெனவே மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.

இந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட பெண்ணைத் தனியாக விடுவது நல்லதல்ல. காரணம், அவர்களுக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இந்தச் சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பதுதான் நல்லது.

ஆவேச நிலை

சில பெண்கள் ஆவேசத்தின் உச்சியில் தங்களையும் அறியாமல் குழந்தையைப் பாதிக்கக் கூடிய அளவுக்கேகூடச் செல்வார்கள்!

தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்துவர, மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இதுபோன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படுவது இயற்கைதான் என்றாலும் அவர்களை பத்திரமாக பாதுகாத்து ஆறுதல் படுத்தவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.

English summary

Postpartum mood disorder : Stress after delivery | பிரசவத்திற்கு பின்னாடி மனைவியை பத்திரமாக பாத்துக்கங்க!

Between 50% and 80% of all new mothers experience what is known as the "baby blues." Because the baby blues are so common, it is not classified as a postpartum mood disorder. But the feelings a woman may experience during the baby blues may still cause her worry.
Story first published: Monday, April 30, 2012, 11:49 [IST]
Desktop Bottom Promotion