Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
குழந்தை பெற்ற பின்னும் அம்மாவுக்கு கவனம் தேவை!

பிரசவித்த பெண்களின் உடலில் நீர்ச்சத்து எப்பொழுதும் சமமாக இருக்க வேண்டும். எனவே நன்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை அதிக அளவு குடிக்க கொடுக்கலாம். இதனால் தாய்பால் சுரப்பதில் குறைபாடு ஏற்படாது. இது உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கவும் உதவும்.
உண்ணும் உணவு ஜீரணமாகவில்லை எனில் அந்த உணவை கண்டிப்பாக தவிர்த்திடுங்கள். அதோடு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் நிறைந்த புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற உணவுகளை கொடுக்கலாம். அதேபோல் உயர்தர வைட்டமின்கள் அடங்கிய கேரட், பீட்ரூட், சேனை, போன்றவைகளை கட்டாயம் உண்ணக்கொடுக்கலாம்.
பச்சை நிற உணவுகளை கட்டாயம் உண்ணக்கொடுக்க வேண்டும். வெந்தயக்கீரை, வெள்ளைப்பூண்டு போன்றவைகளை பிரசவித்த பெண்கள் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதேபோல் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளையும் நன்றாக மென்று சாப்பிடவேண்டும்.
புரதச்சத்து நிறைந்த முட்டையை தினசரி காலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல் அன்றாட உணவில் நெய் சேர்த்துக்கொள்வது சோர்வடையாமல் தடுக்கும்.
பிரசவித்த பெண்கள் பாலூட்டுவதனால் அடிக்கடி பசிக்கும் அந்த நேரத்தில் பழங்கள், காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். பசிக்கிறதே என்பதற்காக எண்ணெயில் பொரித்த காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் உபயோகப்படுத்தும் இடங்களில் மிளகினை உபயோகிக்கலாம். குழந்தை பிறந்த உடன் தாய்மார்கள் சாப்பிடும் சரியான உணவுதான் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை பாதுகாக்கும் என்கின்றனர்
மகப்பேறு மருத்துவர்கள்.
பிரசவமான பெண்களுக்கு வயிறு பெரிதாகவே இருக்கும். இவர்கள் பிரசவம் ஆனவுடன் வயிற்றின் சதையைக் குறைக்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக ஆறு மாதம் பயிற்சி செய்தால் வயிற்றுச் சதை குறைந்துவிடும்.
அதேப் போல வயிற்றில் உப்பியப் பகுதியில் மென்மையான துணியை பெல்ட் போல மடித்து லேசாக இறுக்கி அணிவதும், பெல்ட் வாங்கி அணிவதும் நல்லதுதான். பல மருத்துவமனைகளிலும், வயிற்றில் சதையைக் குறைக்க பயிற்சிகளை சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதனை கவனித்து சரியான முறையில் பயிற்சியை செய்து வந்தால் பெரிதான வயிறு படிப்படியாக குறையும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் குழந்தை பிறந்ததும் இழந்த சத்தினை திரும்ப பெறவேண்டும் என்பதற்காக கண்டபடி சாப்பிட்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும் வழக்கத்தையும் மாற்றுங்கள் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.



Click it and Unblock the Notifications