Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
பிரசவத்திற்கு பின் ஒல்லியாகணுமா? கொஞ்சம் கவனிங்க!

கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.
ஓய்வு அவசியம்
பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
சிசேரியனுக்குப் பின்னர் தையல் போட்ட காயம் குணமாக வேண்டும் என்பதற்காகவே ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதையும் மீறி வேலை செய்தால் தையல் மீண்டும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது. இந்த ஓய்வே மேலும் எடை கூட வழி வகுத்து விடுகிறது.
தொப்பையை தடுக்கலாம்
அதேசமயம் பிரசவத்திற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன.
பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். பிரசவத்திற்குப்பின் கவனச் சிதறல் பிரசவத்திற்குப்பின் சரியான கவனிப்பின்மையே அநேக தாய்மார்களின் உடல் எடை கூடுவதற்கும் தொப்பை போடுவதற்கும் காரணமாகும். குறைந்தது இரண்டு பிரசவங்களுக்குப் பிறகு 10 முதல் 20 கிலோ எடை கூடி விடுகிறது.
சத்தான உணவுகள்
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.
தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை தவிர்க்கக் கூடாது. மூன்று வேளை உண்பதற்குப் பதிலாக சிறிது சிறிதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம்.
இயற்கை வைத்தியம்
பிரசவத்திற்குப்பின்னர் ஆயில் மசாஜ், வென்னீர் குளியல், நாட்டு மருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர். மேற்கத்திய நாடுகளில் பிரசவத்திற்குப்பின்னர் பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சரியான உணவு முறைகள் மற்றும் சரியான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகின்றனர். ஆனால் நம் நாட்டில் பெரும்பாலான மருத்துவமனைகளில் இதைப்பற்றி சொல்லித்தருவதில்லை. எனவே இயற்கை வழியை பின்பற்றி முன்னோர்கள் கூறியவைகளை பின்பற்றி நடந்தால் கர்ப்பத்திற்கு முந்தைய உடல் அமைப்பை பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications











