Latest Updates
-
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
தினமும் நீங்க இத்தனை முறை உடலுறவு கொண்டால்... சீக்கிரம் கர்ப்பம் ஆகலாமாம் தெரியுமா?
இன்றைய பெரும்பலான தம்பதிகள் சந்திக்கும் ஓர் முக்கிய பிரச்சனை கருவூறாமை பிரச்சனை. இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள், உடல் பருமன் என பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் நீங்கள் உடலுறவு கொள்ளும் நேரம் மற்றும் நிலை.
திருமணமான புதிதில் எல்லா தம்பதிகளும் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்குகிறார்கள். சிலர், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர், பல் வருடங்கள் கடந்தும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிர்க்கிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே, உடலுறவை ஒரு வேலை போல பல தம்பதிகள் செய்வதாக கூறப்படுகிறது.

ஒரு ஆய்வில், 158 நாட்களுக்கு தம்பதிகள் சராசரியாக 78 முறை உடலுறவு கொள்ளத் தொடங்கினர். அவர்கள் முயற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து நேர்மறையான முடிவு கிடைக்கும் வரை உடலுறவு கொண்டனர். சுமார் 6 மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளபட்டது.
1,194 தம்பதிகளிடம் நடத்திய ஆய்வில், பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது மாதத்திற்கு 13 முறை உடலுறவு கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. பல உடலுறவு வேடிக்கையாகத் தோன்றினாலும், கர்ப்பம் தரிக்க முயற்சிப்பதில் சில கவலைகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கருத்தரிக்க முயற்சிக்கும்போது உடலுறவு கொள்வது ஒரு வேலையாக உணர்வதாக பலர் கூறுகிறார்கள். 43 சதவீத மக்கள் கருத்தரிப்பதற்கான அழுத்தத்தை உணர்ந்துள்ளதாகவும் மற்றும் அவர்களால் அதை செய்ய முடியாது என்று பலர் பயந்ததாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
இதனால், கருத்தரிப்பது என்பதை தம்பதிகள் கடின உழைப்பு மற்றும் மன அழுத்தமாக உணருக்கிறார்கள். எனவே நீங்கள் குழந்தையின் மீது கவனம் செலுத்தும்போது, ஒருவரையொருவர் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாது, நீங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்தோடும் மகிழ்ச்சியோடும் சேர்ந்து இணைய வேண்டும்.
கருத்தரிக்க சிறந்த நிலை
கருத்தரித்தல் பாலின நிலையைப் பொறுத்தது என்று சிலர் நம்புகிறார்கள். தம்பதிகள் உடலுறவு கொள்ளும் நிலை, அவர்களின் கருவுறுதலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெரும்பலான தம்பதிகள் பயன்படுத்தும் மிஷனரி நிலை மிகவும் பிரபலமான நிலை. அதைத் தொடர்ந்து 36 சதவீத மக்களால் பயன்படுத்தப்படும் நாய் பாணி நிலையும் சுவாரஸ்யமானதாகக் கூறபட்டது.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உடலுறவு கொள்ளக்கூடாது. அதிக உடலுறவு என்பது கர்ப்பமாக இருப்பதற்கான சிறந்த வாய்ப்புகளை குறைக்கலாம். உண்மையில் அடிக்கடி உடலுறவு கொள்வது ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு கொள்ளும் தம்பதிகளில் கருத்தரிப்பு விகிதம் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கர்ப்பமாக உடலுறவு கொள்ள மாதத்தின் சரியான நேரம்
பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அவர்களுக்கு சில நாட்கள் மிகவும் வளமானதாக கருதப்படுகிறது. இந்த வளமான நாட்கள் என்பது அண்டவிடுப்பின் ஐந்து நாட்கள். நீங்கள் அண்டவிடுப்பின் இரண்டு நாட்களும் மற்றும் அண்டவிடுப்பின் நாளிலும் கருத்தரிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நாட்களில் நீங்கள் உடலுறவு கொண்டால், நிச்சயமாக கருத்தரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கருத்தரிக்க வேண்டாம் என்று நினைப்பர்கள், இந்த நாட்களில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது நல்லது. அல்லது தகுந்த பாதுகாப்பு வழிகளுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.
அண்டவிடுப்பு நாட்கள்
அண்டவிடுப்பின் போது, உங்கள் கருப்பை ஒரு முதிர்ந்த முட்டையை வெளியிடுகிறது. இந்த முட்டை கருப்பைக்கு செல்லும் வழியில் ஃபலோபியன் குழாயில் இறங்குகிறது. இந்த வழக்கத்தில், விந்து பெரும்பாலும் கருவுற்ற முட்டையுடன் சந்திக்கும். இந்த நிலையில்தான் கருத்தரித்தல் நிகழ்கிறது.
விந்தணு ஒரு பெண்ணின் உடலில் சுமார் ஐந்து நாட்கள் வாழக்கூடியது. எனவே, கருத்தரிக்க முயலும்போது, கருமுட்டை வெளிவரும் போது உங்கள் ஃபலோபியன் குழாய்களில் உயிருள்ள விந்தணுக்கள் இருக்க வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அண்டவிடுப்பு நாட்களை எப்படி அறிந்து கொள்வது?
நீங்கள் ஒரு பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும் காலெண்டரை வைத்திருக்கலாம். ஒவ்வொரு சுழற்சியும் உங்கள் மாதவிடாயின் முதல் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக முடிவடையும்.
உங்கள் மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்கு 28 நாட்கள் சுழற்சி இருந்தால், 14ஆவது நாளில் கருமுட்டை வெளிப்படும். எனவே, இந்த நேரங்களில் மகிழ்ச்சியான உடலுறவு கொண்டு கருத்தறிவதற்கான வாய்ப்பை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications

