Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பெற்றோர்களே! உங்க ஆண் குழந்தையை நீங்க பெண்ணிய சிந்தனையுள்ளவரா வளர்க்க என்ன செய்யணும் தெரியுமா?
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் அழுகிறார்கள். ஆனால், சிறுகுழந்தைகளிலிருந்து அவர்கள் வளர ஆரம்பிக்கும் போதுதான் சிறுவர்கள் அடிக்கடி அழுவதை குறைத்து கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் மகள்களை வளர்ப்பதில், சற்று முற்போக்காக சிந்தித்து செயல்படுகிறார்கள். தங்கள் மகள் விரும்பும் எதையும் செய்ய சொல்லும் பெற்றோராக மாறி இருக்கிறார்கள். ஆனால், அதையே நீங்கள் உங்கள் மகன்களுக்கு செய்கிறீர்களா? என்றால், பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். உங்கள் ஆண் குழந்தையை வளர்ப்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாரும் சமம், பெண்களை எவ்வாறு பார்க்க வேண்டும்? அவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கற்பிக்க வேண்டியது அவசியம்.

ஒரு பெண்ணிய சிந்தனை கொண்ட மகனாக உங்கள் மகனை வளர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் உறுதிமொழி எடுத்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியான, புத்திசாலியான மற்றும் விவேகமான பையனை வளர்ப்பதற்கான சில ஆரோக்கியமான பெற்றோருக்குரிய பழக்கவழக்கங்கள் பற்றியும் ஆண் பிள்ளை எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

ஆண் குழந்தை அழட்டும்
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் அழுகிறார்கள். ஆனால், சிறுகுழந்தைகளிலிருந்து அவர்கள் வளர ஆரம்பிக்கும் போதுதான் சிறுவர்கள் அடிக்கடி அழுவதை குறைத்து கொள்கிறார்கள். அவர்கள் அழுவதைவிடுத்து கோபப்படத் தொடங்குகிறார்கள். இந்த சமூகம் ஆண் குழந்தைகள் அழகக்கூடாது என்று சொல்லி வளர்க்கிறது. ஆனால், பெண்ணியம் பேசும் பெண்களிடம் வளரும் குழந்தைகள் அவர்களுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார்கள். சிறுவயதிலேயே இவ்வாறு உணர்ச்சிகளை அடக்குவது, உங்கள் மகனின் உணர்ச்சிகளைத் தழுவுவதிலிருந்தோ அல்லது மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதையோ கட்டுப்படுத்தலாம்.

‘பெண்’ என்பதை அவமானமாக கருத வேண்டாம்
ஒரு பெண்ணாக இருப்பதையோ அல்லது ஒரு பெண்ணைப் போல எதையும் செய்வதையோ ஒருபோதும் தாழ்வாகக் கருத வேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லிக்கொடுப்பீர்கள். உங்கள் மகன் வளரும் போது, எல்லா வகையான விளையாட்டுகளையும் விளையாட அனுமதிக்கிறீர்கள். சிறுவனாக இருந்தாலும் அல்லது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி ஒரே மாதியாக வளர்க்கிறீர்கள். பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு பாலின பேத்தை கற்றுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். ஆண், பெண் அனைவரும் சமம் என்று நினைக்க வேண்டும்.

பெற்றோராக வேலையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
செயல்கள் வார்த்தைகளை விட அதிகம் பேசுகின்றன. உங்கள் குடும்பத்தில் உள்ள பாலின வேறுபாடுகளை நீங்கள் உடைத்தால், உங்கள் குழந்தைகள் பின்பற்ற வாய்ப்புள்ளது. ஆண்கள் வீட்டுவேலை செய்வதும், பெண்கள் வேலைக்குச் செல்வதும் அடிப்படை என்று சொல்லி கொடுப்பீர்கள். வீட்டு வேலை மற்றும் அலுவலக வேலை என அனைத்தையும் பகிர்ந்து செய்ய கற்றுக்கொடுங்கள். இதனால், உங்கள் மகன் பெரியவர்களாக வளரும்போது வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகளைப் பராமரிப்பதில் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

மற்றவர்களைக் கவனித்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள்
உங்கள் மகனுக்கு தனது சொந்த விஷயங்களை மட்டுமல்ல, செல்லப்பிராணிகள் அல்லது இளைய உடன்பிறப்புகள் போன்ற மற்றவர்களையும் கவனித்துக் கொள்ள கற்றுக்கொடுங்கள். சிறுவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை அவர்கள் வளரும்போது கவனித்துக்கொள்வதற்கும், அதே போல் அவர்கள் வயதானபோது தங்கள் பெற்றோருக்கும் சமமான பொறுப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்களை கவனித்துக் கொள்வது என்பது ஒரு நல்ல மனிதனை இந்த சமூகத்திற்கு உருவாக்கி கொடுப்பது போன்றது.

‘இல்லை என்றால் இல்லை’ என்று கற்றுக்கொடுங்கள்
ஒரு பெண்ணிய மகனை வளர்ப்பதில் சம்மதத்தை மதிக்கக் கற்றுக்கொள்வது ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது. இதற்கு உங்கள் பிள்ளைக்கு வாய்மொழியாகக் கற்பிப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் அதைப் பயிற்சி செய்வதும் அவசியம். எனவே, குறுநடை போடும் குழந்தையாக உங்கள் மகன் இருக்கும்போது கூச்சலிடும் போது அல்லது 'இல்லை' என்று ஏதாவது செயலுக்கு உங்கள் மகன் சொன்னால், அதை நிறுத்திவிட்டு அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கவும். இது அவன் வாழ்க்கையில் நிறைய பாடத்தை கற்றுக்கொடுக்கும்.



Click it and Unblock the Notifications