Latest Updates
-
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க! -
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம்
பெற்றோர்களே உஷார்... இந்த விஷயங்களை உங்க குழந்தை முன் பண்ணாதீங்க!
குழந்தைகள் இயல்பாகவே கள்ளம் கபடமற்றவர்கள். அவர்கள் மற்றவர்களிடம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களை அப்படியே செய்வார்கள். எனவே, அவர்கள் முன் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக செய்ய வேண்டும். அந்தவகையில், குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத விஷயங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
குழந்தையின் முன் சண்டையிடுதல் : உங்கள் குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். குழந்தையின் முன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குழந்தையின் மன அமைதியை பாதிப்பதோடு, அவர்களை கடின உள்ளம் கொண்டவர்களாக மாற்றும். நாம் செய்யும் அனைத்து செயலையும் அவர்கள் அப்படியே வெளியுலகத்தில் பிரதிபலிக்கலாம்.

கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துதல் : உங்கள் குழந்தையின் முன் நாகரீகமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். குழந்தைகளின் முன்பு நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். எனவே, அதை அவர்கள் மற்றவர்களிடம் கூறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
குழந்தையின் முன் மது பழக்கம் : உங்கள் குழந்தைகளின் முன் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டாம். ஏனென்றால், நமது குழந்தைகள் பல விஷயங்களை நம்மை பார்த்து கற்றுக்கொள்வார்கள். அதுமட்டும் அல்ல, நம் தந்தை செய்யும் பழக்கம் சரி தான் என நம்ப நேரிடும். எனவே, குழந்தைகளின் முன் தீய பழக்கங்களில் ஈடுபட வேண்டாம்.
மற்றவரை பற்றி இழிவாக பேசுதல் : குழந்தைகளின் முன், மற்றவர்களை பற்றி தவறாகவோ அல்லது இழிவாகவோ பேச வேண்டாம். அப்படி செய்வதால், அந்த நபர் பற்றி, குழந்தைகள் தங்கள் மனதில் தவறான கருத்துக்களை வளர்த்துக்கொள்ள இயலும்.
மற்றவர்களுடன் ஒப்பிடுதல் : மற்றவர் முன் உங்கள் குழந்தைகளையோ அல்லது மற்றவர் பற்றி உங்கள் குழந்தைகளின் முன் ஒப்பிட்டு பேசுவது தவறான விஷயம். இவ்வாறு செய்வது அவர்களை மனதளவில் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே, உங்கள் குழந்தைகள் முன் அவன் அப்படி.. இவன் இப்படி என ஒப்பிட வேண்டாம். இது, குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.
எலக்ட்ரானிக் பயன்பாடு : ஸ்மார்ட்போன், மடிக்கணினி, ஹெட்போன், வீடியோ கேம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகளின் முன் அதிகம் பயன்படுத்த வேண்டாம். இவ்வாறு பயன்படுத்துவது அவர்களை தனிமையாக உணர வைக்கும்.
துன்புறுத்துதல் : பொதுவாகவே கணவன் மனைவியை அடிப்பதும் , மனைவி கணவரை அடிப்பதும் தவறு. இருப்பினும் இதுபோன்ற விஷயங்களை குழந்தைகள் முன் செய்யாமல் இருப்பது நல்லது. அதேபோல் அடிக்கடி திட்டுவதும் தவறு. இதனால் குழந்தைக்கும் அவரை பற்றிய தவறான கருத்தை மனதில் பதியக் கூடும்.
பொய் சொல்லாமல் இருத்தல்: பொய் சொல்லாமல் ஒரு நாளை கடத்துவது என்பது முடியாது என்கிற நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனாலும், இயன்றவரை குழந்தைகளின் முன் பொய் பேசுவதைத் தவிர்க்கவும். நிறைவேற்ற முடிகிற வாக்குறுதிகளை மட்டுமே கொடுங்கள். வீண் ஆசைகளை உருவாக்கும் பொய்களைக் கூற வேண்டும்.
விதி மீறாதீர்: சாலையில் செல்லும்போதோ அலுவலகத்துக்குச் செல்லும்போதோ அங்குள்ள விதிகளை மீறாதீர்கள். இது குழந்தைகளுக்கான அடிப்படைப் பண்புகளை உருவாக்குவதில் பிரதானமான இடம் பிடிப்பவை. எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும்.
ஜங்க் ஃபுட்: உடலுக்கு ஒவ்வாத ஜங்க் ஃபுட் சாப்பிடக் கூடாது என்கிற அறிவுரையைக் குழந்தைகளுக்குச் சொல்வதோடு பெற்றோர் கடமை முடிந்துவிடுவதில்லை. நீங்களும் அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதுவும் குழந்தைகளின் முன் சாப்பிடவே கூடாது.



Click it and Unblock the Notifications