Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
தம்பதிகளே! நீங்க விவாகரத்து செய்ய போறீங்களா? அப்ப உங்க குழந்தைகள எப்படி சமாளிக்கணும் தெரியுமா?
விவாகரத்துக்கான உண்மையான காரணத்தைப் பற்றி பெரும்பாலும் குழந்தைகளுக்கு கூறப்படாததால், நீங்கள் பிரிந்ததற்கு குழந்தைகள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுகிறார்கள்
இன்றைய நாளில், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தம்பதிகள் இருவரும் ஒப்புக்கொண்டு தங்கள் திருமண உறவை முறித்துக்கொள்ள விவாகரத்து செய்கிறார்கள். ஆனால், விவாகரத்து செய்யும் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தைகளின் நிலை என்னவாக இருக்கும்? அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? பெற்றோர்கள் பிரிவை அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள்? என்ற பல கேள்விகள் எழும். இது குழந்தையின் எதிர்காலத்தையும், அவர்களின் மனநிலையையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் எப்போது விவாகரத்துக்குத் திட்டமிடுகிறீர்களோ, அதிலிருந்து குழந்தைகளை விலக்காதீர்கள். பெரியவர்களின் நெருக்கடிகளை குழந்தைகள் கவனிக்க மாட்டார்கள் என்று தவறாக எண்ண வேண்டாம். பெரியவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கடிகளைச் சமாளிக்க குழந்தைகளிடம் உணர்ச்சித் திறன் உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் அவர்களைப் புறக்கணிக்கக் காரணம், அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், நமக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒரு இடைவெளியை உருவாக்குவதும், அவர்களுடன் உணர்ச்சிகளைப் பேசாததும் ஆகும். தம்பதிகள் இருவரும் விவாகரத்து செய்ய திட்டுமிடுகிறீர்கள் எனில், உங்கள் குழந்தையிடம் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பெற்றோரின் அன்பை அவர்களுக்கு உறுதிப்படுத்துங்கள்
நேரடியாக காவல் நிலையத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம். மாறாக குழந்தைகளிடம் மனம்விட்டு பேசுங்கள். பொது இடங்களுக்கு அழைத்து சென்று பேசுங்கள். நீங்கள் இருவரும் பிரிந்தாலும் பெற்றோரின் அன்பு அப்படியே இருக்கும் என்று அவர்களுக்கு எப்போதும் உறுதியளிக்க வேண்டும். உங்கள் விவாகரத்து மற்றும் கசப்பான உறவின் ஆரம்பம் நிச்சயமாக குழந்தைகளை பாதிக்கலாம். ஆனால் குழந்தைகள் மீதான உங்கள் இருவரின் ஒருங்கிணைந்த அன்பு, அந்த பாதிப்பை ஓரளவிற்கு குறைக்கும்.

புரிந்துகொள்ள நேரம் கொடுங்கள்
உங்கள் உணர்ச்சிகளை குழந்தைகள் மீது குவிக்காதீர்கள். அதற்கு பதிலாக, ஒரு உறவின் நன்மை தீமைகள் மற்றும் ஏன் விவாகரத்து இறுதி தீர்வு என்பதை அவர்களுக்கு புரியும்படி நீங்கள் குறை வேண்டும். இல்லையெனில், குழந்தைகள் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே உள்ள விஷயங்களைச் சரிசெய்ய உங்கள் குழந்தை முயற்சி செய்யலாம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

விவாகரத்துக்கான காரணத்தைப் பற்றி பேசுங்கள்
விவாகரத்துக்கான உண்மையான காரணத்தைப் பற்றி பெரும்பாலும் குழந்தைகளுக்கு கூறப்படாததால், நீங்கள் பிரிந்ததற்கு குழந்தைகள் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டுகிறார்கள். இந்த எண்ணம் உங்கள் குழந்தையின் மனதில் வர அனுமதிக்காதீர்கள். உங்கள் மனைவியுடன் ஏன் பிரிந்து செல்ல முடிவு செய்தீர்கள் என்பதைப் பற்றி உங்கள் குழந்தையுடன் விவேகமான முறையில் பேசுங்கள்.

நீங்கள் சொல்வதில் கவனமாக இருங்கள்
உங்கள் விவாகரத்து பற்றிய தகவலை குழந்தைகளிடம் வெளிப்படுத்தும் போது, நீங்கள் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். எதைச் சொல்ல வேண்டும், பின்னர் எதற்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளால் புரிந்து கொள்ள முடிந்ததை மட்டும் சொல்லுங்கள். இதற்கு மேலே உள்ள எதுவும் அவர்களைக் குழப்பலாம். இதனால், குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படலாம்.

மற்ற பெற்றோரைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்
விவாகரத்துக்கான காரணம் பெற்றோரில் ஒருவராக இருப்பார்கள். இதனால், பெரும்பாலும் பங்குதாரர்கள் ஒருவரையொருவர் தவறாகப் பேசுவதைக் காணலாம். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு மாற்றத்தை எளிதாக்குவதற்கு, குழந்தையின் இன்னொரு பெற்றோரைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள் மற்றும் குழந்தையின் முன் அவரது உருவத்தை எப்படி முன்வைக்கிறீர்கள் என்பதில் நீங்கள் சுயக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications