For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தைக்கு எதையும் பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? அப்ப இது உங்களுக்கானது?

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்கள். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள்.

|

குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. நீங்கள் ஒரு பெற்றோராக நடக்க நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு நல்ல பெற்றோராக நீங்கள் இருக்க வேண்டும் என்று எவ்வளவு உங்களை தயார்படுத்தினாலும் குழந்தை வளர்ப்பு உங்களை குழப்பத்திலும், கஷ்டத்திலும் ஆழ்த்தி விடும். அதுவே நீங்கள் புதிய பெற்றோராக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மற்ற சக பெற்றோரின் உதவி அவசியம்.

Everything You Need To Know About Conscious Parenting

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருப்பார்கள். குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்ப்பார்கள். அப்படி உங்க குழந்தைக்காக ஒவ்வொரு விஷயத்தை பார்த்து பார்த்து செய்யும் பெற்றோரா நீங்கள்? நீங்கள் இப்படி நடந்து கொள்வதால் என்ன நன்மைகள் உண்டாகிறது என்பதை பற்றி எல்லாம் இங்கே காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விழிப்புடைய பெற்றோர்கள்

விழிப்புடைய பெற்றோர்கள்

விழிப்புடைய பெற்றோர்கள் எப்பொழுதும் தங்கள் குழந்தைகளின் மீது கவனத்துடன் நடந்து கொள்வர் என்று பல்வேறு மனநல மருத்துவர்கள் கருதுகின்றனர். விழிப்புணர்வு உடைய பெற்றோரின் மனப்பாங்கு சிறந்தது. அவர்கள் தங்களுடைய சுய பிரதிபலிப்பு, ஒருமித்த மனம் இரண்டையும் ஒன்றாக கொண்டு வருகின்றனர்.

விழிப்புடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தும் போது அவர்களையும் அவர்கள் அறிகின்றனர். குழந்தைகள் தனிப்பட்ட மனிதர்கள் என்பதை உணர்கின்றனர். இத்தகைய போக்கின் மூலம் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சொந்த கருத்துக்களை அவர்கள் விட்டு விடுகிறார்கள். தங்கள் சொந்த கருத்துக்களை குழந்தைகளின் மீது அவர்கள் திணிப்பதில்லை. தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை குழந்தைகள் மீதும் வைத்து துன்புறுத்துவதை நிறுத்துகிறார்கள். இதனால் இவர்களின் கீழ் வளரும் குழந்தை தங்கள் சொந்த அடையாளத்தை கண்டறிய சுதந்திரமாகிறது. மேலும் குழந்தைகள் பெற்றோருடன் நெருக்கமாக வளர்கிறார்கள்.

விழிப்புடைய பெற்றோரின் முக்கிய கூறுகள்:

விழிப்புடைய பெற்றோரின் முக்கிய கூறுகள்:

ஒரு பெற்றோராக உங்கள் அனுபவங்கள் எப்பொழுதும் தனித்தன்மை உடன் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல பெற்றோரின் முக்கிய தூண்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

* பெற்றோர் குழந்தைக்கு ஒரு உறவாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனித்துவமான நபராக கருத வேண்டும். அவர்கள் உங்களுக்கு ஏதேனும் விஷயங்கள் கற்பித்தால் அதையும் ஏற்றுக் கொள்ள மனம் திறந்திருக்க வேண்டும்.

* ஒரு பெற்றோராக உங்கள் ஈகோ, ஆசைகள் மற்றும் இணைப்புகளை விட்டு விட வேண்டும்.

* உங்க குழந்தைகள் மீது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நடத்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது. ஒரு பெற்றோராக அதை எப்படி சொல்லிக் கொடுக்கலாம் மற்றும் எதிர்பார்ப்புகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

* நேரத்திற்கு முன்னால் திட்டமிட்டு நேர்மறையான எண்ணங்களை உங்க குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.

* குழந்தைகள் அவர்கள் போராட்டத்தின் மூலமே வளர வேண்டும். பெற்றோரின் நோக்கம் உங்கள் குழந்தையை மகிழ்விப்பது மட்டுமல்ல.

விழிப்புடைய பெற்றோராக இருந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள்:

விழிப்புடைய பெற்றோராக இருந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள்:

விழிப்புடைய பெற்றோர்கள் எப்பொழுதும் நினைவாற்றலுடனும், சுய பிரதிபலிப்புடனும் நடந்து கொள்வார்கள். இது பெற்றோரின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும். இது உங்க குழந்தைகள் மீது கவனத்தை அதிகரித்து நினைவிழப்பை குறைக்கும். தியானம் போன்றவற்றை மேற்கொண்டு உங்களை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளலாம். நன்றாக தூக்கம் வரும்.

நீங்கள் எவ்வளவு நிதானமாகவும் மையமாகவும் இருக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பெற்றோரின் திறன்கள் மாறும். விழிப்புடைய பெற்றோர்கள் குறைவான எரிச்சலைக் கொண்டு குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவழிக்க முன் வருவார்கள். விழிப்புடைய பெற்றோர்கள் குழந்தைகளுடான தகவல் தொடர்புகளை கூடுதலாக வைத்து இருப்பார்கள். குழந்தைகளை தனிபட்ட நபராக ஏற்றுக் கொள்ளும் பெற்றோர்கள் குழந்தையுடன் ஒரு குறிப்பிட்ட மரியாதையையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இது குழந்தைக்கு ஆரோக்கியமான உறவு பழக்கத்தை உருவாக்க உதவுகிறது. இது அவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற உதவி செய்கிறது.

விழிப்புடைய பெற்றோரின் குறைபாடுகள்:

விழிப்புடைய பெற்றோரின் குறைபாடுகள்:

இருப்பினும் நீங்கள் இப்படி இருப்பது எல்லா நேரங்களிலும் சிறந்த தீர்வாக இருக்காது. நீங்கள் ஒரு சுய பிரதிபலிப்பு மற்றும் கட்டுப்பாட்டை அடைய நிறைய நேரம் ஆகலாம். உங்கள் குழந்தை சுயமாக நடந்து கொள்வது என்பது ஒரே நாளில் நடக்காது.

விழிப்புடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தாங்கள் செய்த தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அனுமதிக்கின்றனர். இருப்பினும் குழந்தையை தோல்வியடைய அனுமதிப்பது சில நேரங்களில் அது பெற்றோரை கடினமாகவும் குழப்பமாகவும் மாற்றும். குழந்தை தோல்வியை அனுபவிப்பதை பார்ப்பது பெற்றோருக்கு கடினம் தான்.

விழிப்புடைய பெற்றோர்கள் உண்மையில் எப்படி இருப்பார்கள்?

விழிப்புடைய பெற்றோர்கள் உண்மையில் எப்படி இருப்பார்கள்?

விழிப்புடைய பெற்றோர்களை பற்றி பேசுவது எளிது. ஆனால் அந்த குணநலன்களை நடைமுறையில் கடைபிடிப்பது சற்று கடினம். நீங்களும் விழிப்புடைய பெற்றோராக இருக்க என்ன செய்யலாம்? ஆத்திரத்துடன் செயல்படாதீர்கள். உடனடி தண்டனையை வழங்குவதற்கு பதிலாக அல்லது குழந்தையின் மீது பழியை சுமத்தும் முன் ஒரு நொடி மூச்சு விடுங்கள். ரிலாக்ஸ் ஆகி கொள்ளுங்கள்.

உங்கள் சொந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும். உங்க குழந்தைகளை அவர்கள் சொந்தமாக கண்டறிய அனுமதிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Everything You Need To Know About Conscious Parenting

No matter how much you prepare yourself, parenting can leave you confused and unprepared. We often look for support in fellow parents that give rise to newer parenting techniques.
Desktop Bottom Promotion