For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகள் மதிய உணவுகளை சாப்பிடவே மாட்டேங்குறாங்களா ? இந்த உணவுகளை எல்லாம் முயற்சி பண்ணுங்க

|

குழந்தைகளுக்கு என்னதான் சுவையாக மதிய உணவு சமைத்துக் கொடுத்தாலும் அவர்களின் மதிய உணவு பாக்ஸில் உணவு அப்படியே மீதம் இருக்கும். இன்றைய கால சூழலில் குழந்தைகளை ஏமாற்றுவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதுவும் உணவு விசயத்தில் அவர்களை ஏமாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வீண் தான். அதே சமயத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவையும் சமைத்துக் கொடுக்க வேண்டும் அல்லவா? உங்கள் சங்கடங்களை எல்லாம் இந்தக் கட்டுரை தீர்த்து வைக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதே இட்லி அதே சட்னியா

அதே இட்லி அதே சட்னியா

குழந்தைகளுக்கு மதிய உணவைத் தயாரிப்பது என்பது மிகுந்த சவலான விசயமாகும். என்னத் தான் குழந்தைக்கு பிடிக்கும் என்பதற்காக ஒரே உணவை மீண்டும் மீண்டும் தயாரித்துக் கொடுத்தால் அவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும்.

Most Read : உங்கள் குழந்தை எப்பப் பாத்தாலும் சேட்டை பண்றானா.. அவனோட ஜாதகம் இங்க இருக்கு படிங்க

ஊட்டச்சத்து ஏன் தேவை

ஊட்டச்சத்து ஏன் தேவை

நாம் பெரும்பாலு உண்கிற சாதம் மாவுச் சத்தை மட்டுமே உள்ளடக்கியது. குழந்தைப் பருவம் என்பது மிக முக்கியமான வளர்சிதை மாற்றங்களை கொண்டது. எனவே மாவுச்சத்து அல்லாமல் பிற ஊட்டச்சத்துகளும் மிகவும் அவசியமாகிறது.

மதிய உணவு ஏன் அவ்வளவு அவசியம்

மதிய உணவு ஏன் அவ்வளவு அவசியம்

காலையில் உங்கள் குழந்தையை கிழப்புவது என்பது தாய்மார்களுக்கு மேலுமொரு சவால். இதனால் அதிரிபுதிரியாக மென்றது பாதி சிந்தியது பாதி உள்ளே சென்றது மீதி என காலை உணவு குழந்தைகளுக்கு முறையாக நாம் தருவதில்லை. துறுதுறுவென்று சுற்றும் குழந்தைக்கு நாள் முழுவதும் ஆற்றல் வேண்டுமல்லவா... உங்கள் குழந்தையின் மதிய உணவில் புதுவகையான உணவுகளில் ஊட்டச்சத்துகளை அழகாக ஊட்டுங்களேன்.

ஓட்ஸ் இட்லி

ஓட்ஸ் இட்லி

தினமும் நம் குழந்தை அரிசியால் ஆன உணவுப் பொருட்களைத் தான் உணவாக உண்கிறான். அவனுக்கு ஒரு மாற்றாக ஓட்ஸால் ஆன இட்லியை உணவாக அளியுங்கள். பிறந்து உணவு என்று குழந்தை உண்ண ஆரம்பத்ததிலிருந்து இட்லி குழந்தைக்கு பழக்கப்பட்ட பிடித்தமான உணவாகும்.

என்ன பயன்:

என்ன பயன்:

வெறும் ஓட்ஸ் உடன் நில்லாமல் கீரைகளை உடன் சேர்க்கும் போது ஊட்டச்சத்துகளின் கூட்டாக இது கிடைக்கிறது.

ஓட்ஸில் கனிமச்சத்து, வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் முழுமையாக நிறைந்துள்ளது.

குழந்தைகளுக்கு பிடிக்குமா?

குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டச்சத்தை உள்நுழைத்திருக்கிறீர்கள் என்பது தெரிய வாய்ப்புகள் குறைவு.

காளான் பர்க்கர்

காளான் பர்க்கர்

பர்க்கர் உடல்நலத்திற்கு நல்லது இல்லை என்பதை நாம் அறிவோம். ஆனால் அதில் பயன்படுத்தும் துணை உணவுப் பொருட்களைக் கொண்டு அதை மாற்றலாம். பருப்புகள் அல்லது காளானைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது சரியாக இருக்கும்.

ஊட்டச்சத்தின் அளவு

ஊட்டச்சத்தின் அளவு

கலோரி - 301

புரதம் - 10கி

கார்போஹட்ரேட் - 45கி

இரும்புச் சத்து - 7கி

கொழுப்பு - 9 கி

வைட்டமின்கள் -

கனிமச்சத்துகள் - 163 கி

Most Read : உங்கள் குழந்தைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களா? இந்த உணவுகளைக் கொடுத்து சரி பண்ணலாம்.

பன்னீர் சால்சா டார்டில்ஸ்

பன்னீர் சால்சா டார்டில்ஸ்

புரதம் நிறைந்த ப்ரெட் ர்ராப்களில் பன்னீர் சால்சா டார்டில்ஸ் முக்கியத்துவம். வாய்ந்தது. பன்னீர் பச்சைக் காய்கறிகள், வறுத்த சோளம் ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கும் இந்த உணவை குழந்தைகள் நிச்சயம் ஒதுக்க மாட்டார்கள்.

நூடுல்ஸ்

நூடுல்ஸ்

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் அவ்வளவு அதீத பிரியம் அவர்களுக்கு நூடுல்ஸை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் உண்பார்கள். காளான், எலுமிச்சைச் சாறு, மொற்மொறு வேர்க்கடலை, கொஞ்சம் கொத்தமல்லி என கமகமக்க சமைத்துக் கொடுங்கள். குறிப்பாக இந்தக் காய்கறிகளில் எல்லா வகையான சாஸ் தரும் சுவை இருப்பதால் மிகவும் ஆரோக்கியமானது.

முட்டை ஃப்ரைடு சாதம்

முட்டை ஃப்ரைடு சாதம்

காலையில் நீங்கள் எழுந்திருக்க நேரமாகிவிட்டால் வெறும் 25 நிமிடத்திலே உருவாகி விடக்கூடிய முட்டை சாதத்தை மதிய உணவாக அளியுங்கள். இந்த முட்டை சாதத்தில் வறுத்த முட்டையுடன் பூண்டு, வெங்காயம், சாதம், போன்றவை இடம்பெறுவதால் உடல் ஆரோக்கியத்திற்கான உணவாகத் தான் இருக்கும். இங்கு எதுவும் அரைகுறையாக வேகாமல் இருப்பது மேலுமொரு நல்ல விசயமாகும்.

பாஸ்தா சாலட் (ப்ரோகோலி, சோளம்)

பாஸ்தா சாலட் (ப்ரோகோலி, சோளம்)

இவ்வகை பாஸ்தாக்கள் குழந்தைகளை சுண்டி இழுக்கக் கூடியவை. பாஸ்தாவுடன் ப்ரோக்கோலி, சோளம் போன்ற காய்கறிகள் சேரும் போது ஊட்டச்சத்துள்ள உணவாக மாறுகிறது. குழந்தைகளுக்கு பிடித்த வண்ணம் இதை டிபன் பாக்ஸில் கட்டும் போது காலி டிபன் பாக்ஸ் தான் மாலை வீட்டிற்கு வரும்.

பல்தானிய பீட்சா

பல்தானிய பீட்சா

பீட்சாவின் அடிப்பகுதியை கோதுமை மாவு, ஓட்ஸ், மக்காச்சோள மாவு மற்றும் ஊட்டச்சத்து அடர்த்தியான தானியங்களை கொண்டு உருவாக்கும் போது பீட்சாவும் ஆ ரோக்கியமாக மாறுகிறது. இதன் மேல்பகுதியை காளான் அல்லது உங்கள் குழந்தைகள் எதை விரும்புகிறதோ அதைக் கொண்டு நிரப்புங்கள்.

சான்ட்விஜ்

சான்ட்விஜ்

சைவ அல்லது அசைவ சாண்ட்விஜ் என்பது குழந்தைகளால் எல்லா நேரங்களிலும் விரும்பக்கூடியது. இவ்வகை சாண்ட்வெஜ்களில் காய்கறிகள் மற்றும் மூலிகைகளை சேர்க்கும் போது சிறப்பானதாக இருக்கும். உதாரணமாக கீரை அல்லது சுரைக்காய் ஆகியவற்றை பயன்படுத்துவது ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குகிறது.

Most Read: பெண்கள் கட்டிப்பிடிக்கிறதுல இவ்வளவு அர்த்தம் இருக்கா? ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்க

பச்சைப்பயறு சில்லா

பச்சைப்பயறு சில்லா

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மூங்தால் எனப்படும் வறுத்த பச்சைப்பயறுகளை குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். அதைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சமைத்து தரும் போது அவர்கள் உண்ணாமலா போய்விடுவார்கள். மொறுமொறுவென்று ஸ்நாக்சைப் போல் விரும்பி உண்ணுவார்கள்.

ஊட்டச்சத்தின் அளவு

ஊட்டச்சத்தின் அளவு

கலோரி 212 / ஒரு கப்

கொழுப்பு 0.8 கி

கார்போஹைட்ரேட் 14.2 கி

இரும்புச் சத்து - 15.4 கி

மேலும் வைட்டமின் பி-2,பி-3, பி-5, பி-6, செலேனியம், துத்தநாகம், காப்பர், மக்னீசியம் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

உப்புமா

உப்புமா

உப்புமா என்றால் நம் குழந்தைகள் முகம் சுழிக்கத் தான் செய்வார்கள். ஆனால் அதை செய்கிற முறையில் சில மாற்றங்களை செய்யும் போது அவர்களுக்கு பிடித்தமாதிரியாக நாம் மாற்றி விட முடியும்.

ஊட்டச்சத்தின் அளவு

ஊட்டச்சத்தின் அளவு

கலோரி 209/100கி

கொழுப்பு 3.15 கி

கார்போஹைட்ரேட் 38.06

புரதம் - 6.76 கி

பிரட் போஹா

பிரட் போஹா

பிரெட்டில் பச்சைப் பட்டாணி வேர்க்கடலையும் கொஞ்சம் மசாலா சேர்க்கும் போது மொறுமொறுவென்ற பிரட் போஹா உருவாகிறது. இதை டோஸ்ட் செய்யும் போது இன்னும் மொறுமொறுப்புத் தன்மை கூடுகிறது. பிரட் போஹாவை மிக விரைவாக செய்து முடித்துவிட முடியும். இதை காலை மற்றும் மதிய உணவு இரண்டிற்கும் சரியானதாக இருக்கும்.

Most Read: முன் ஜென்மக் காதல் தான் இந்த ஜென்மத்திலும் தொடருதா ? அதிர்ச்சியடையாமல் படியுங்கள்

ஊட்டச்சத்தின் அளவு

ஊட்டச்சத்தின் அளவு

கலோரி 281

புரதம் 5.8 கி

கார்போஹட்ரேட் 38.1 கி

இரும்புச் சத்து 1.6 கி

கொழுப்பு 11.7 கி

வைட்டமின்கள் ~ 400மிகி

கனிமச்சத்துகள் ~ 300 மிகி

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy Lunch Ideas Nutritionists Pack for Their Kids

No matter what delicacies the children cook, lunch will remain in their lunch box. In today's world, cheating children is not an easy task. So make lunch packs of nutritious foods such as Oats Idli, Mushroom Burger, Pasta Salad, Multigrain Pizza
Story first published: Thursday, August 8, 2019, 13:15 [IST]