For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு சளி பிடிச்சா டாக்டர்கிட்ட போறதுக்கு முன்னாடி இத பண்ணிடுங்க...

அமெரிக்க குழந்தைகள் நல அகாடமி கருத்துப்படி அடிக்கடி சலதோஷத்திற்காக மருந்து எடுக்கும் போது அது 6 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளின் உடல் நிலையை பாதிக்கிறது என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர். சரி அப்போ இதற

|

குழந்தைகளை பேணிக் காப்பது அவ்வளவு ஒன்றும் எளிதல்ல. அடிக்கடி இருமல், காய்ச்சல், ஜலதோஷம் என்று அவர்களை துரத்திக் கொண்டே தான் இருக்கும். இப்படி அடிக்கடி ஜலதோஷம் காய்ச்சல் வர முக்கிய காரணம் அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம். அமெரிக்க குழந்தைகள் நல அகாடமி கருத்துப்படி அடிக்கடி ஜலதோஷத்திற்காக மருந்து எடுக்கும் போது அது 6 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளின் உடல் நிலையை பாதிக்கிறது என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர்.

சரி அப்போ இதற்கு என்ன தான் வழி என்று யோசிக்கிறீர்களா. நாங்கள் கூறும் சில வழிகளை கடைபிடித்து வந்தாலே போதும் உங்கள் குழந்தையின் உடல் நலனை பேணிக் காக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

குழந்தைகளை அடிக்கடி விரும்பி தாக்கும் பிரச்சினைகளில் ஒன்று இந்த ஜலதோஷம். அதிலும் மழை மற்றும் குளிர்காலங்களில் இந்த வைரஸ் எளிதாக குழந்தைகளை தாக்கி விடுகிறது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 6-10 தடவை குழந்தைகள் இந்த ஜலதோஷத்தை சந்திக்கின்றனர். கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட வைரஸ்கள் இது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரியவர்கள் வருடத்திற்கு 2-3 முறை மட்டுமே ஜலதோஷ பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே குழந்தைகளை தினமும் கவனிப்பது மிகவும் முக்கியம்.

கண்டுபிடித்தல்

கண்டுபிடித்தல்

உங்கள் குழந்தைக்கு வந்திருப்பது சாதாரண ஜலதோஷமா அல்லது ப்ளூ காய்ச்சலா என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டும். ஜலதோஷம் வருவதற்கு முன்னால் மூக்கிலிருந்து மஞ்சள் கலரில் மியூக்கஸ் சளி வெளியேறும். மிதமான நிலையில் உடம்பு சுடும். இருமல் இருக்கலாம். ஆனால் ப்ளூ காய்ச்சலாக இருந்தால் வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

அழற்சி அறிகுறிகள்

அழற்சி அறிகுறிகள்

கண்கள் மற்றும் மூக்கில் நீர் வடிதல்

கண்களில் எரிச்சல்

தும்மல் சில நாட்களுக்கு நீடித்தல்

மூக்கில் மஞ்சள் கலரில் கெட்டியாக இல்லாமல் தண்ணீராக மியூக்கஸ் திரவம் ஒழுகுதல், பெரும்பாலும் காய்ச்சல் வராமல் இருத்தல்

ஜலதோஷம் அறிகுறிகள்

ஜலதோஷம் அறிகுறிகள்

  • இருமல்
  • காய்ச்சல்
  • சிவந்த கண்கள்
  • மூக்கு ஒழுகுதல்
  • தொண்டை புண்
  • உடல் சோர்வு, எரிச்சல்
  • பசியின்மை
  • நிணநீர் முடிச்சுகளில் வீக்கம்
  • நிமோனியா

    நிமோனியா

    உங்கள் குழந்தைக்கு மூக்கடைப்பு போன்றவை இருந்தால் உடனடியாக அதை சரி செய்யுங்கள். இல்லையென்றால் பால் குடிக்கும் போது மூச்சு விட முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி விடுவார்கள். மேலும் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஜலதோஷத்தின் சாதாரண அறிகுறிகள் தென்பட்டால் கூட மருத்துவரிடம் உடனே செல்லுதல் நல்லது. இல்லையென்றால் நிமோனியா போன்ற பெரிய தாக்குதல்களை அது உண்டாக்க கூடும்.

    மருத்துவரை அணுகுதல்

    மருத்துவரை அணுகுதல்

    மூன்று மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையாக இருந்தால் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    உடம்பின் சூடு 100.5 Fக்கு அதிகமாக இருந்தால், சிறுநீர் குறைந்த தடவை மட்டும் கழித்தால், தீராத இருமல் அல்லது சிவந்த கண்கள், பச்சை கலரில் கெட்டியாக சளி மூக்கிலிருந்து வெளியேறுதல், தாய்ப்பால் குடிக்காமல் இருத்தல், மூச்சு விட சிரமம்

    அடிக்கடி அழுதல், எரிச்சலுடன் இருத்தல்

    பரவும் விதம்

    பரவும் விதம்

    இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஜலதோஷம் பரவுகிறது. அதிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளை இது எளிதாக தாக்குகிறது. அவர்களுக்கு அருகில் யாராவது தும்மினாலோ அல்லது இரும்பினாலோ போதும் காற்றில் பரவி அந்த காற்றை அவர்கள் சுவாசிக்கும் போது எளிதாகத் தொற்றிக் கொள்கிறது. எனவே ஜலதோஷம் சமயங்களில் வாய் மற்றும் மூக்கிற்கு துணியால் கவர் செய்தல், மூக்கை சீந்திய பிறகு கைகளை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவுதல் மூலம் பரவுவதை தடுக்கலாம். பாதிக்கப்பட்ட நபர் உங்கள் குழந்தையின் வாயையோ மூக்கையோ, அல்லது கண்களையோ தொடும் போது இது எளிதாக பரவுகிறது. சில வைரஸ்கள் நீண்ட நேரம் தரையில் வாழும். இதனால் உங்கள் குழந்தை பொம்மைகளை தொடும் போதோ தரையில் தொட்டு விளையாடும் போதோ அது பரவுகிறது.

    விளைவுகள்

    விளைவுகள்

    நோயெதிர்ப்பு சக்தி - பெரியவர்கள் மாதிரி குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி பெரிதாக வளர்ச்சி அடைந்து இருக்காது. எனவே இந்த வைரஸ்கள் எளிதாக அவர்களை அண்டுகிறது. பருவநிலை - பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் தான் இந்த சலதோஷ வைரஸ்கள் நம்மளை தாக்கும்

    பரவுதல் - குழந்தைகள் மற்ற பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் விளையாடும் போது இது எளிதாக பரவி விடுகிறது.

    ஜலதோஷத்திற்கான இயற்கை வழிகள்

    ஜலதோஷத்திற்கான இயற்கை வழிகள்

    உங்கள் செல்லக் குட்டியை இந்த ஜலதோஷ பிரச்சினையிலிருந்து காக்க சில இயற்கை முறைகளை கையாளலாம். நீங்கள் ஆன்டி பயாடிக் எடுக்கும் போது அது வைரஸை கொல்லுமே தவிர ஜலதோஷத்தின் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்காது. உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் நான்கு வயது கீழே இருக்கும் குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது என்கின்றனர்.

    இஞ்சி டீ

    இஞ்சி டீ

    இந்த இஞ்சி டீ குழந்தையின் நெஞ்சில் உள்ள சளியை இழக்கச்ச் செய்து எளிதாக அதை வெளியேற்றி விடுகிறது. இதை சூடாக இல்லாமல் வெதுவெதுப்பாக கொடுப்பது முக்கியம். 24 மணி இதை நீங்கள் ஸ்டோர் செய்து கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    இஞ்சி துருவியது - 6-8 டீ ஸ்பூன்

    பட்டை - கொஞ்சம் (விருப்பத்திற்கேற்ப)

    லெமன் ஜூஸ் - சில துளிகள் (விருப்பத்திற்கேற்ப)

    தேன் - 1/2 டீ ஸ்பூன் (விருப்பத்திற்கேற்ப)

    கொதித்த தண்ணீர் - 2 கப்கள்

    பயன்படுத்தும் முறை

    ஒரு கிளாஸில் இஞ்சி மற்றும் பட்டை துருவலை எடுத்து கொள்ளுங்கள். கொதித்த நீரை ஜாரில் கவனமாக ஊற்றுங்கள். அதை நன்றாக மூடிக் கொள்ளுங்கள். அப்படியே 30-40 நிமிடங்கள் வைத்து இருங்கள். ஓரு துணியை கொண்டு வடிகட்டி கொள்ளுங்கள். அதை ஒரு டம்ளரில் ஊற்றுங்கள். அதில் லெமன் மற்றும் தேன் சேர்த்து கொள்ளுங்கள். சூடாக வேண்டுமென்றால் மறுபடியும் சூடுபடுத்தி கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு 3 முறை என தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஹெர்பல் சிரப்

    ஹெர்பல் சிரப்

    சிரப் என்றாலே அதன் சுவை கண்டிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும். இதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்க்காமல் முழுவதும் மூலிகை கொண்டு செய்யப்படும் ஒரு அற்புதமான சிரப். இதில் அதிமதுரம் வேர்கள், மார்ஷ்மெல்லோ வேர்கள் போன்றவை இருமல் மற்றும் தொண்டை புண்ணை குணமாக்குகிறது. மியூக்கிலேஜ் சளியை இழகச் செய்கிறது. இஞ்சி மற்றும் பட்டை வலி மற்றும் ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது

    தேவையான பொருட்கள்

    அதிமதுர வேர்கள் - 1 டீ ஸ்பூன்

    மார்ஷ்மெல்லோ வேர்கள் - 1 டீ ஸ்பூன்

    நறுக்கிய இஞ்சி - 1 டீ ஸ்பூன்

    பட்டை பொடி - 1 டீ ஸ்பூன்

    தேன் - 1 கப்

    தண்ணீர் - 4 கப்

    கண்ணாடி ஜார் மூடியுடன்

    வடிகட்டி

    பயன்படுத்தும் முறை

    இந்த மூலிகைகளை இஞ்சி மற்றும் பட்டையுடன் கலந்து கொள்ளவும். இப்பொழுது பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்து கொள்ளவும். இப்பொழுது இதை மிதமான தீயில் வைத்து தண்ணீர் பாதியாக வற்றும் வரை சூடுபடுத்த வேண்டும். இப்பொழுது இதை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள். மிதமான சூட்டில் தேன் சேர்த்து 10 நிமிடங்கள் நன்றாக கலக்க வேண்டும். ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள்

    தினமும் ஒரு நாளைக்கு 3 வேளை 1- 2 டீ ஸ்பூன் சிரப்பை குழந்தைக்கு கொடுத்து வர நல்ல ஜலதோஷத்திலிருந்து நல்ல ரிலீவ் கிடைக்கும். இதை உங்கள் பிரிட்ஜில் வைத்து 3-4 வாரங்கள் கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

    வெங்காயம்

    வெங்காயம்

    வெங்காயமும் நெஞ்சில் உள்ள சளியை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு சில வெங்காய துண்டுகளை ஒரு தட்டில் வைத்து உங்கள் குழந்தைகள் படுக்கும் அறையில் வைத்து விட்டாலே போதும் வெங்காயத்தில் உள்ள சல்பர் சளியை இளகச் செய்து எளிதாக வெளியேற்றி விடும். மூக்கு ஒழுகுதல், நெஞ்சில் சளி கட்டியிருத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது.

    முள்ளங்கி தெரபி

    முள்ளங்கி தெரபி

    முள்ளங்கி காயில் நிறைய விட்டமின்கள் மற்றும் மினரல்கள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. இதில் குதிரை வடிவ காட்டு முள்ளங்கி சளியை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இருப்பினும் நாம் தோட்ட முள்ளங்கியை கொண்டும் இந்த பலனை அடையலாம்.

    தேவையான பொருட்கள்

    1 முள்ளங்கி

    பயன்படுத்தும் முறை

    முள்ளங்கியை துண்டுகளாக நறுக்கி உங்கள் குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரண்டு தடவை சாப்பிட கொடுங்கள். இவை சளியை வெளியேற்றி நிவாரணம் அளிக்கிறது.

    நீங்கள் இதை 30 நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதன் டேஸ்ட் சுவையாக இருக்கும்.

    ஆவி பிடித்தல்

    ஆவி பிடித்தல்

    சூடான ஆவி நெஞ்சில் உள்ள சளியை இழகச் செய்து உடனடி நிவாரணம் அளிக்கும். இதற்கு சில எஸன்ஷியல் ஆயில்களான மிளகுக்கீரை எண்ணெய், யூகாப்லிட்டஸ் ஆயில், டீ ட்ரி ஆயில் போன்றவற்றை சில துளிகள் வெந்நீரில் கலந்து தலையை போர்வையை கொண்டு மூடி ஆவி பிடிக்கும் போது நிவாரணம் கிடைக்கிறது. டீ ட்ரி ஆயிலில் உள்ள ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் வைரஸ்க்கு எதிராக செயல்படுகிறது. சளியையும் இளகச் செய்து வெளியேற்றி விடுகிறது.

    தேவையான பொருட்கள்

    வெப்பத்தை தாங்கும் ஒரு கனமான பாத்திரம்

    ஒரு துண்டு

    வெந்நீர்

    செய்யும் முறை

    முதலில் எஸன்ஷியல் ஆயிலை பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும். இப்பொழுது சூடான தண்ணீரை ஊற்றவும். இப்பொழுது உங்கள் குழந்தையை குறிப்பிட்ட தூரத்தில் அமர்த்தி முகத்தில் நன்றாக படும் படி ஆவி பிடிக்க வேண்டும். இப்பொழுது துண்டை கொண்டு மூடிக் கொள்வதன் மூலம் ஆவி வெளியேறாமல் இருக்கும். கொஞ்சம் இடைவெளியில் குழந்தையை அமர்த்துவது முக்கியம்.

    நன்றாக மூச்சை உள்ளே இழுத்து விட வேண்டும். அதிகமான சூடு தென்பட்டால் சிறிது விநாடிகள் ரிலாக்ஸ் செய்து விட்டு மறுபடியும் ஆரம்பிக்கவும். இதை ஒரு நாளைக்கு 2-3 தடவை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம். உங்கள் தேவைக்கேற்ப எஸன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குழந்தை ஆவி பிடிக்க விரும்பவில்லை என்றால் ஒரு ஆவி குளியலை ஏற்படுத்துங்கள். இதுவும் இருமல் சலதோஷத்திற்கு நல்ல பலனை கொடுக்கும்.

    கவனத்தில் வைக்க வேண்டியவை

    கவனத்தில் வைக்க வேண்டியவை

    பாத்திரம் சூடாக இருக்கும் போது அதை குழந்தை தொடாதவாறு பார்த்து கொள்ளுங்கள். அதிகப்படியான ஆவி உங்கள் கண்களை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக மேற்கொள்வது முக்கியம். உங்கள் குழந்தைக்கு ஆவி பிடிக்க தெரியவில்லை என்றால் வேறொரு முறையை கையாளுங்கள்.

    லெமன்

    லெமன்

    சில சமயங்களில் சலதோஷம் காய்ச்சலை ஏற்படுத்தும். இதனால் குழந்தைகள் மிகவும் சோர்ந்து இருப்பது பெற்றோர்களை கவலைப்படச் செய்யும். காய்ச்சல் என்பது அவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படுவதை குறிக்கிறது. எனவே இதற்கு பயப்படத் தேவையில்லை. காய்ச்சலை குறைக்க மிகச் சிறந்த வழி லெமன்

    பயன்படுத்தும் முறை

    லெமனை துண்டுகளாக்கி ஒரு பெளலில் உள்ள வெதுவெதுப்பான நீரில் போடுங்கள்.

    ஒரு காட்டன் துணியை எடுத்து அதில் நனைத்து கொள்ளுங்கள்.இந்த தண்ணீர் மற்றும் துணியை கொண்டு குழந்தையை துடைத்து எடுங்கள். இந்த வெதுவெதுப்பான நீரும் லெமனின் குளிர்ச்சி தன்மையும் காய்ச்சலை காணாமல் செய்து விடும். ஆனால் சூடான அல்லது குளிர்ந்த நீரை பயன்படுத்தாதீர்கள்.

    பால்

    பால்

    குழந்தைகளுக்கு பால் தினமும் கொடுப்பது வழக்கம். ஆனால் சளி பிடித்தால் நாம் இதைச் செய்வோமா என்றால் இல்லை. காரணம் பால் குடித்தால் சளி அதிகமாகும் என்பது வெறும் கட்டுக்கதை தான். ஆனால் உண்மை என்னவென்றால் பாலுடன் இஞ்சி மற்றும் மஞ்சள் சேர்த்து குடிப்பது சளி தொல்லையைக் குறைக்கும்.

    தேவையான பொருட்கள்

    மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்

    இஞ்சி பொடி - 1/2 டீ ஸ்பூன்

    பால் - 1 கப்

    செய்யும் முறை

    பாலை நன்றாக கொதிக்க வையுங்கள். இப்பொழுது இஞ்சி பொடி மற்றும் மஞ்சள் பொடி சேருங்கள். நன்றாக ஆறிய பிறகு குடிக்கவும். இல்லாவிட்டால் வாயில் எரிச்சலை உண்டாக்கிவிடும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் நல்லது. படுக்க போவதற்கு முன் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஆப்பிள் சீடர் வினிகர்

    ஆப்பிளில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் உள்ளன. மேலும் நமது உடல் அமிலத்தன்மையில் இருக்கும் போது தான் இந்த நோய்க்கிருமிகள் நம்மை தொற்று கொள்கின்றன. எனவே ஆப்பிள் சிடார் வினிகர் அல்கலைன் என்பதால் நமது உடலின் pH அளவை சரி சமமாக்கி ஜலதோஷத்திலிருந்து விடுதலை தருகிறது.

    தேவையான பொருட்கள்

    ஆப்பிள் சிடார் வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

    லெமன் ஜூஸ் - 1 டீ ஸ்பூன்

    தேன் - 1 டீ ஸ்பூன்

    சூடான நீர் - 1 கிளாஸ்

    செய்யும் முறை

    குழந்தை தாங்கும் அளவிற்கு மட்டும் தண்ணீரை சூடுபடுத்திக் கொள்ளவும்.

    ஆப்பிள் சீடர் வினிகர், லெமன் ஜூஸ், தேன் இவற்றை அதில் சேர்க்கவும். ஒரு நாளைக்கு 2-3 தடவை கொடுக்கவும். உங்கள் குழந்தை ஆப்பிள் சிடார் வினிகரை கொண்டு தொண்டையில் படும்படி கொப்பளித்தால் விரைவான பலன் கிடைக்கும்.

    உப்பு நீர் குளியல்

    உப்பு நீர் குளியல்

    உப்பு மற்றும் தண்ணீர் கலந்த கலவை சலதோஷத்திற்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.

    தேவையான பொருட்கள்

    எப்சம் உப்பு - 1 கப்

    யூகாப்லிட்டஸ் ஆயில் - 3 சொட்டுகள்

    மிளகுக்கீரை - 3 சொட்டுகள்

    லாவண்டர் எண்ணெய் - 3 சொட்டுகள்

    ஒரு சிறிய டிஷ் (தட்டு)

    காற்று புகாத டப்பா

    செய்யும் முறை

    ஒரு காற்று புகாத டப்பாவில் எப்சம் உப்பை சேர்க்கவும். தட்டில் எஸன்ஷியல் ஆயிலை தடவிக் கொள்ளவும். இப்பொழுது இதை உப்புடன் சேர்க்கவும். நன்றாக ஸ்பூனைக் கொண்டு கிளறவும். பாத் டப்பில் பாதியளவு வரை சூடான நீர் ஊற்றி 2 - 3 டீ ஸ்பூன் உப்பு கலந்த கலவையை சேர்க்கவும். பிறகு முழு டப்பும் தண்ணீரால் நிரப்பவும். உங்கள் குழந்தையை 5-10 நிமிடங்கள் அதில் நனைக்கவும். அவர்களை தனியாக விடாமல் உடனிருந்து கவனித்து கொள்ளுங்கள்.

    மஞ்சள்

    மஞ்சள்

    மஞ்சள் தூளில் உள்ள குர்குமின், ஆன்டி வைரல், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் இருமல், ஜலதோஷத்திற்கு எதிராக செயல்படுகிறது.

    பயன்படுத்தும் முறை

    ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்

    இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை உங்கள் குழந்தை குடித்தாலே போதும் நல்ல பலன் கிடைக்கும்.

    நீர்ச்சத்து

    நீர்ச்சத்து

    சளி மற்றும் ப்ளூ தாக்குதல் சமயங்களில் குழந்தைகளுக்கு அதிகப்படியான நீர் ஆகாரத்தை சேர்த்து கொள்ளுங்கள். இவை தொண்டை வறண்டு போதல், மூக்கடைப்பு, சளி கெட்டுதல் போன்ற தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கும். பால், ஜூஸ், மற்றும் வெதுவெதுப்பான நீர், சூடான சாக்லேட் பானம், ஆப்பிள் சிடார் வினிகர், சிக்கன் சூப் போன்றவற்றை கொடுக்கலாம். நல்ல நிவாரணம் அளிக்கும்.

    முல்லியன் டீ

    முல்லியன் மூலிகையில் சளியை குணப்படுத்தும் பண்புகள் உள்ளன.

    தேவையான பொருட்கள்

    உலர்ந்த முல்லியன் மூலிகை

    வடிகட்டி

    சூடான நீர்

    செய்யும் முறை

    ஒரு பாத்திரத்தில் முல்லியன் மூலிகையை போட்டு கொள்ளவும்

    அதில் தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்

    பிறகு வடிகட்டியை கொண்டு நீரை வடிகட்டி கொள்ளவும்

    ஆறிய பிறகு குடிக்கவும்

    1 டீ ஸ்பூன் தேன் கூட தேவை என்றால் சேர்த்து கொள்ளலாம்.

    ஒரு நாளைக்கு 3 தடவை இந்த டீயை உங்கள் குழந்தை குடித்தாலே போதும் சளியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    எல்டர்பெர்ரி சிரப்

    எல்டர்பெர்ரி சிரப்

    எல்டர்பெர்ரி ஜலதோஷத்தால் ஏற்படுகின்ற தொண்டை புண், மூக்கடைப்பு போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து எதிர்காலத்தில் அடிக்கடி சலதோஷம் பிடிப்பதை குழந்தைகளிடம் தடுக்கிறது. இருமல் போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால் கருப்பு நிற எல்டர்பெர்ரியை மட்டும் பயன்படுத்துங்கள். மற்ற எல்டர்பெர்ரிகள் நச்சுக்களை ஏற்படுத்தக் கூடியது. மேலும் இதை பச்சையாக பயன்படுத்துவதை தவிருங்கள்.

    தேவையான பொருட்கள்

    உலர்ந்த எல்டர்பெர்ரி - 1/2 கப்

    தண்ணீர் - 3 கப்

    தேன் - 1 கப்

    ஒரு கடாய்

    வடிகட்டி.

    ஜார்

    செய்யும் முறை

    செய்யும் முறை

    தண்ணீர் மற்றும் பெர்ரியை சேர்த்து பாத்திரத்தில் வைத்து கொதிக்க விடவும்

    45 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீரை மட்டும் வடிகட்டி கொண்டு வடிகட்டி கொள்ளவும். வடிகட்டியில் நிற்கும் தண்ணீரை நன்றாக ஸ்பூனின் பின் பக்கத்தை கொண்டு நசுக்கி முழுவதுமாக வடிகட்டி கொள்ளவும். கொஞ்சம் தேன் சேர்த்து ஆற விடவும். நன்றாக கலக்கவும்

    ஒரு நாளைக்கு ஒரு டீ ஸ்பூன் என தினமும் குடித்து வந்தால் ஜலதோஷம் மாயமாய் பறந்து ஓடிடும். ஆனால் ஒரு வயதிற்கு குட்பட்ட குழந்தைக்கு தேனை பயன்படுத்தாதீர்கள். 3 மாதங்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த முறைகள் எல்லாம் எந்த வித பக்க விளைவுகளையும் உண்டு பண்ணாத இயற்கை முறைகள். இருப்பினும் உங்கள் குழந்தைக்கு நெடுநாட்களாக சளி தொல்லையோ அல்லது அடிக்கடி சளி பிடித்தாலோ உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Sure- shot Remedies for Baby Cold

Common cold affects babies worldwide. Adults have colds too, but babies are more at risk as their immunity isn’t fully developed yet. Naturally, the parents are worried. They will go to a pediatrician, and administer drugs to provide relief. We have to be careful about the remedies for baby cold that we choose. Lemon bath, steam bath, ginger tea, essential oils, cinnamon, apple cidar vinegar these are natural ways are best for congestion.
Desktop Bottom Promotion