Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆட்டிஸம் பாதித்த குழந்தையின் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய விஷயங்கள்!
ஒவ்வொரு குழந்தையும் தெய்வத்திற்கு ஒப்பானதே. மழலை மாறாத மொட்டுக்களின் புன்சிரிப்பில் நாம் இறைவனைக் காணலாம். எனவே, குழந்தையை கவனமுடன் வளர்ப்பது என்பது இறைப்பணிக்கு ஒப்பாக கருதப்படுகின்றது. ஆகவே ஒவ்வொரு பெற்றோரும் தயக்கமின்றி கூறலாம், "நான் இந்த உலகத்திலேயே மிகவும் புனிதமான மற்றும் கடினமான பணியை செய்கின்றேன்" என்று.
அதிலும் ஆட்டிஸம் பாதித்த குழந்தையை கவனித்துக் கொள்வது என்பது எல்லா பெற்றோருக்கும் மிகவும் கடினமானதே. ஆட்டிஸம் பாதித்த குழந்தையின் பெற்றோர்களாகிய உங்களுக்கு, உங்கள் குழந்தையின் சவால்களை சமாளிக்க உதவும் பல்வேறு வழிகள் உள்ளன.
2 வயதில் காணப்படும் 'மதி இறுக்கம்' என்னும் ஆட்டிசத்தின் குணாதிசயங்கள்!!!
ஆட்டிஸம் பாதித்த குழந்தையை நீங்கள் கவனித்து வரும் பொழுது, நீங்கள் மனதாலும் உடலாலும் வலுவாக இருப்பது மிகவும் அவசியம். இது உங்கள் குழந்தைக்கு, நீங்கள் உங்களின் சிறந்ததையே கொடுக்க உதவுவதோடு உங்களுடைய குழந்தையுடனான உங்களின் பிணைப்பை வலிமையாக்கும்.
நாங்கள் இங்கே உங்களுக்கு ஒரு ஆட்டிஸம் பாதித்த குழந்தையை சமாளிக்க உதவும் ஐந்து முக்கிய வழிகளை வழங்குகின்றோம்.

ஆட்டிஸம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
நீங்கள் ஆட்டிஸத்தின் அறிகுறிகள் முதல் அதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள் வரை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் அதைப் பற்றி தெரிந்து நன்றாகத் தெரிந்து கொள்வது, நீங்கள் உங்கள் குழந்தையை நன்கு பார்த்துக் கொள்ள உதவும்.

ஆட்டிஸம் ஆதரவு குழுக்களில் இணையலாம்
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளின் பெற்றோர்களுடன் நீங்கள் இணைந்திருங்கள். இது ஆட்டிஸம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மற்றும் ஆலோசனைகளைப் பெற மிகவும் உதவியாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து உங்களின் கடினமான காலக்கட்டத்தை கடந்து வர முயற்சி செய்யுங்கள்.

சிகிச்சை
எல்லோருக்கும் பொதுவான சிகிச்சை என்று எதுவுமில்லை என்பதை மனதில் நிறுத்தி, உங்கள் குழந்தை சீரான இடைவெளியில் சிகிச்சை பெறுகிறார் என்பதை உறுதி செய்யுங்கள். உங்கள் பிள்ளையின் அறிகுறி மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சைகளை தேர்வு செய்யுங்கள். பொதுவாக, ஆட்டிஸத்திற்கு நடத்தை சிகிச்சை, பேச்சு மொழி சிகிச்சை, நாடகம் சார்ந்த சிகிச்சை, உடல் சிகிச்சை, தொழில் சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து சிகிச்சை போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

மெளனமே பாஷையாக
உங்களின் குழந்தையால் பேச இயலாவிட்டால், அவர்களுடன் உரையாட சொற்கள் அல்லாத வழிகளை கண்டுபிடியுங்கள். இந்த சொற்கள் இல்லாமல் பேசும் முறையில், குழந்தைகள் படங்களை சுட்டிக்காட்டுவதன் மூலம் தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்த முடியும். இது பேச இயலாத ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளிடம் நல்ல பலன்களைத் தருகின்றது.

உங்கள் குழந்தையின் மீது அன்பு செலுத்துங்கள்
ஆட்டிஸம் பாதித்த குழந்தை வெளிப்படையான அவமரியாதைக்கு தகுதியானவர் என்று அர்த்தம் இல்லை. அன்போடும் மரியாதையோடும் குழந்தையை கையாளுங்கள். ஒவ்வொரு நாளையும் சிறந்த நாளாக உங்களுடைய குழந்தைக்கு கொடுத்திடுங்கள். உங்கள் குழந்தை நீங்கள் அவரை நேசிப்பதை உணர வேண்டும். மேலும் அவர்கள் தானும் ஒரு முழுமையான மற்றும் பயனுள்ள நபர் போல் உணர்ந்து வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications