Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இரண்டு குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவேளை விடுவது நல்லது?
இரண்டு குழந்தைகளுக்கு மத்தியில் இவ்வளவு இடைவேளை தான் இருக்க வேண்டும் என்பது இல்லவே இல்லை. இதனால், தாய் அல்லது சேய்க்கு எந்த பாதிப்பும் உடல் / ஆரோக்கியம் ரீதியில் பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஆனால், பெற்றோர் மனநிலை, குழந்தை நலன் போன்றவற்றில் சில சிரமங்கள் உண்டாகும்.
மிக குறைந்த இடைவேளையில் குழந்தை பெற்றுக் கொண்டால் இருவரையும் வளர்ப்பது, அவர்களுக்கான செலவுகள் போன்றவை அதிகமாக இருக்கும். இது வீட்டு பொருளாதாரம், தம்பதிகளின் மன அழுத்தம் போன்றவற்றை பாதிக்கும்.
எனவே, இரு குழந்தைகளுக்கு மத்தியில் எவ்வளவு இடைவேளை இருந்தால், எப்படி இருக்கும் என்பது குறித்து இனிக் காணலாம்...

12 -18 மாதங்கள்
12 -18 மாதங்கள் இடைவேளையில் நீங்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதால், இருவர் மத்தியில் ஓர் சண்டையிடம் சுபாவம் அடிக்கடி எழும் வாய்ப்புகள் அதிகம். நீயா, நானா என்பது போல கடித்துக் கொள்வார்கள். ஏனெனில், இரு குழந்தைகளின் பக்குவமும் ஒரே அளவில் இருக்கும். வளரும் போதும் கூட இது இப்படியே தான் நீடிக்கும்.

12 -18 மாதங்கள்
அப்பா, அம்மா தன் மீது தான் அதிக பாசம் காண்பிக்க வேண்டும் என அடம் பிடிப்பார்கள். ஏதாவது பொருள் வாங்க வேண்டுமானாலும் கூட தான் விரும்பும் / தேர்ந்தெடுக்கும் பொருளை தான் வாங்க வேண்டும் என சண்டையிடுவார்கள்.

12 -18 மாதங்கள்
ஓராண்டு இடைவேளையில் குழந்தை பெற்றுக் கொள்வதில், தாய் பால் ஊட்டுவதில் கூட சற்று சிரமம் இருக்கும். உடை உடுத்திவிடுவது, உணவு ஊட்டுவது, உறங்க வைப்பது என அனைத்திலும் சிரமம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

இரண்டு ஆண்டுகள்!
இவர்களுக்குள் இருக்கும் ஓர் நல்ல விஷயம் என்னவெனில், பதின் வயதுகளில் நுழைந்த பிறகு இருவரும் நண்பர்களை போல பழக ஆரம்பித்துவிடுவார்கள். வெளியே போவதில் இருந்து, விளையாடுவது என அனைத்திலும் ஒற்றுமை இருக்கும்.

இரண்டு ஆண்டுகள்!
இரண்டு ஆண்டுகள் இடைவேளை விடுவது இரண்டு குழந்தைகளின் நலனுக்கும் நல்லது என அறிவுரைக்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு குறைந்த இடைவேளை எனில், இருவரையும் வளர்ப்பதில் சிரமம் இருக்கும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல்!
மூன்று அல்லது அதற்கு மேல் என்ற இடைவேளை மிகவும் சிறந்தது. வளர்ப்பதில் இருந்து, அக்கறை எடுத்துக் கொள்வது வரை என அனைத்திற்கும் நேரம் கிடைக்கும். இருவரில் ஒருவர் பள்ளிக்கு செல்ல துவங்கியிருப்பார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல்!
மேலும், மூன்று வருடங்களுக்கு மேல் என்ற இடைவேளையில், மூத்த குழந்தை இளைய குழந்தை மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்பவராக இருப்பார். இதனால் கூடுதல் அக்கறை, செல்லம் என இரண்டாவது குழந்தை ஓர் சிறந்த சூழலில் வளரும் வாய்ப்பு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
