Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
குழந்தையை தத்தெடுக்க வேண்டுமா? இந்த 10 காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!!
தம்பதியர் குழந்தையின்மையின் காரணமாக தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு சில மறுக்க முடியாத காரணங்கள் இதோ!
பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், திருமணமாகி நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களும் இத்தகைய தத்தெடுப்பு முறையை பின்பற்றி ஒரு பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வருவார்கள். சமூக சேவை நிறுவனங்கள் அல்லது ஆசிரமங்கள் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகளை இவர்கள் தத்தெடுப்பார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் இது முற்றிலும் மாறுபட்ட காரியமாக உள்ளது. அதாவது மக்களின் பார்வை முற்றிலும் மாறியுள்ளது.
இப்பொழுதெல்லாம் தத்தெடுக்கும் தம்பதியர்கள் அனைவரும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் அல்ல. அனாதை குழந்தைகளுக்கு வாழ்க்கை கொடுக்கும் வண்ணம் சமூகத்திற்கு நன்மை செய்வதும், தங்கள் இயற்கை குழந்தைக்கு ஒரு நல்ல சகோதரர் அல்லது சகோதரியை தேடுவதும் அல்லது குடும்பத்தில் மற்றொரு நபரை சேர்த்துக் கொள்வதும் போன்ற காரணங்காளல் அவர்கள் தத்தெடுத்துக் கொள்கின்றனர்.

குழந்தைகளிடம் உள்ள உண்மையான அன்பு
வழக்கமாக நடைமுறையில் இல்லாவிட்டாலும், சில தம்பதியர்கள் குழந்தைகளின் மேல் உள்ள அளவில்லாத அன்பின் காரணமாக அவர்களை தத்தெடுக்க விரும்புகின்றனர். அது அவர்களின் தலைமுறையாக அல்லது வயிற்றுப் பிள்ளையாக இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இதில் வருத்தம் இருப்பதில்லை.

ஒரே மாதிரி குழந்தைகளை அதிகம் கொண்டவர்கள்
தம்பதியர்கள் தங்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தால், அடுத்த குழந்தையாவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே போல, இரண்டு பெண் பிள்ளை உள்ளவர்கள் அடுத்தது ஆணாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இயற்கையாக பிள்ளை பெறும் போது நாம் விரும்பிய பாலினம் நமக்கு கிடைக்காமல் போகலாம். அப்படி இருக்கும் போது தத்தெடுப்பதால் இந்த குறையை சுலபமாக மாற்றி விடலாம். இதன் மூலம் தம்பதியர்கள், அவர்களுக்கு தேவையான பாலினத்தில் குழந்தைகளை தேர்ந்தெடுக்க முடிகின்றது. சில நேரங்களில் தம்பதியர் பாலினத்தை கருத்தில் கொள்ளாமல் எந்த குழந்தையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கின்றனர் மற்றும் சிலர் ஒரே பாலினத்தில் இரு குழந்தைகளைக் கூட தத்தெடுத்துக் கொண்டு தங்கள் குடும்பத்தை அத்துடன் முடித்துக் கொள்கின்றனர்.

ஒரு குழந்தை கொண்ட பெற்றோர்கள்
ஒரே குழந்தை தனித்த குழந்தையாம்! இது உண்மைதான். சில தாயாரால் கர்ப்ப காலத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அப்படிப்பட்ட சமயத்தில் தங்களின் ஒரே குழந்தை தனித்து இருப்பது நல்லது கிடையாது என்று உணரும் பெற்றோர்கள் மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்கின்றனர். ஒரு குழந்தையை தத்தெடுத்து அதை வளர்த்து தங்கள் குடும்பத்தை எளிய முறையில் முழுமை அடைய செய்கின்றனர்.

தனி நபராக பெற்றவரின் அனுபவத்தை அடைவது
மிஸ் யூனிவர்ஸாக திகழ்ந்த சுஸ்மிதா சென், ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார். அவர் தனி நபராக இருந்து இதை செய்துள்ளார். அவர் இதை குறித்து கூறியபடி 'இந்த பெண் குழந்தைக்கு ஒரு தாய் தேவை மற்றும் எனக்கு ஒரு பிள்ளை தேவை'. இதை விட எளிதான மற்றும் மிகவும் அழகான உறவு எதுவும் இருக்க முடியாது. இப்படி பிரபலமானவர்கள் மட்டுமல்ல, பெற்றோராகும் இன்பத்தை அனுபவிக்க விரும்பும் எவரும் இப்படி தனித்திருந்தே ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல்
இந்த உலகத்திற்கு மேலும் குழந்தைகள் தேவைப்பட மாட்டார்கள் என்ற கண்ணோட்டம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் வீடு மற்றும் குடும்பமில்லாத குழந்தைகளை இந்த பெருகி வரும் மக்கள் தொகை உள்ள உலதிலிருந்தே எடுத்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றவர்கள். ஆகையால் தத்தெடுக்க முனைகின்றனர். இது ஒரு மிகச் சிறந்த முடிவாகும். இதை போல் சமுதாயத்திற்கு எவராலும் நன்மை செய்ய முடியாது.

மரபணு மற்றும் தாலிசீமியா கோளாறுகள்
மரபணு கோளாறு மற்றும் தாலிசீமியா நோய் போன்றவற்றால் அவஸ்தைப்படும் தம்பதியர்கள் இப்படிப்பட்ட குணப்படுத்த முடியாத நோய்கள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். குழந்தையை தத்தெடுக்க முயற்சிக்கலாம்.

பிரசவ வலி இல்லாமல் குழந்தை பெறும் பாக்கியம்
மிகுந்த சோம்பலின் காரணமாக குழந்தையை தத்தெடுத்துக் கொள்வதும் நடக்கிறது. இதை கேட்பதற்கு சிரிப்பாகத்தான் இருக்கும். பிள்ளைகளை பெறும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் இருக்கும் போது நாம் ஏன் தத்தெடுக்க வேண்டும்? இது பொதுவான கேள்வி தான். ஆனால் சில பெண்கள் இந்த வலி, வேதனை ஆகியவற்றை தவிர்ப்பதற்காக தத்தெடுக்கின்றனர். இதனால் குழந்தை பிறந்த பின் உடல் எடை கூடுவது, அழகு குறைவது ஆகிய பிரச்னைகளும் ஏற்படுவதில்லை என்பது அவர்களுக்கு வசதியாகி விடுகிறது. ஆகையால் வலியே இல்லாமல் குழந்தையை சொந்தமாக்கிக் கொண்டு விட முடியும்.

வேலையின் நிமித்தம் குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் தத்தெடுத்தல்
சில தம்பதியர்கள் குழந்தையை பெற்று கொள்வதற்கான நேரம், சக்தி மற்றும் அந்த காலத்தை இதற்கென்று செலவிட முடிவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு தத்தெடுத்தல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். அவர்கள்; முக்கியமாக பெண்கள் வேலை நிமித்தம் கர்ப்ப காலத்தை அதற்கேற்ப சந்திக்க முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள் வேறு வழியின்றி தத்தெடுக்கின்றனர்.

நண்பர் அல்லது உறவினருக்கு உதவுவது
ஒவ்வொருவருக்கும் தத்தெடுப்பதற்கு ஒரு காரணம் உண்டு. சிலர் தங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு உதவி செய்ய இப்படி செய்கின்றனர். அவர்களின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக அல்லது பொருளாதார நிலையின் நிமி;த்தம் அவர்களுடன் இருப்பவர்கள் நண்பர்களின் குழந்தையை தத்தெடுத்துக் கொள்கின்றனர். சில தம்பதியருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அப்படி இருக்கும் போது இரு குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாதவர்கள் ஒரு குழந்தையை தத்துக் கொடுக்க முடிவு செய்கின்றனர். மற்றும் குழந்தை இல்லாதவர்களும் இரட்டை குழந்தைகளின் ஒரு குழந்தையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கின்றனர்.

சிறிது வளர்ந்த குழந்தையை தத்தெடுப்பது
சிலர் மிக சிறிய குழந்தையை தத்தெடுத்தால் அதற்கு நீண்ட நேரம் செலவு செய்வது, இரவு கண் விழிப்பது மற்றும் சராசரி குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்ய விரும்பாதவர்கள் அல்லது அதற்கென்று நேரம் செலவு செய்ய முடியாதவர்கள் சிறிது வளர்ந்த பிள்ளையை தேர்ந்தெடுத்து தங்கள் குழந்தையாக வளர்க்கின்றனர்.



Click it and Unblock the Notifications