Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
தத்தெடுக்கும் குழந்தைகளை சரியாக கையாள்வதற்கான சில டிப்ஸ்...
உலகத்திலேயே கடினமான வேலை உங்கள் குழந்தைகளை பராமரித்துக் கொள்வது என்றால், அதை விட கடினமான வேலையும் இருக்கத் தான் செய்கிறது. அது தான் தத்தெடுக்கும் குழந்தைகளை (கணவன் அல்லது மனைவியின் முன்னாள் துணைக்கு பிறந்த குழந்தைகள்) கவனித்துக் கொள்வது; மிகவும் சவாலான விஷயமாகும். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்யும் போது அவர்கள் குடும்பத்தில் சந்திக்கும் பொதுவான பிரச்சனை தான் தத்தெடுக்கும் பெற்றோர் என்ற கறை/வடு. உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை வெற்றிகரமாக பார்த்துக் கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அப்படி செய்தால் அது வெகுமதி பெற வேண்டிய சவாலாக விளங்கும். உங்கள் புதிய வாழ்க்கை துணையுடன் உள்ள அந்யோனியத்தை அதிகரிப்பதை விட அவர்களின் குழந்தைகளுடன் உங்கள் உறவை வளர்ப்பது தான் கடினமான ஒன்றாகும்.
குடும்ப சந்தோஷத்திற்கும் நீண்ட கால அன்பிற்கும் மிக முக்கிய காரணியாக விளங்குவது அந்த குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் ஏற்படுத்தும் நேர்மறையான உறவே. பல சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்களோ அதை பொறுத்து தான் உங்கள் வெற்றியே அடங்கியுள்ளது. தன்னம்பிக்கையுடன் நேர்மறையான மனநிலையோடு உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை அணுகுங்கள். அவர்களின் மீது அன்பையும் பாசத்தையும் பொழியுங்கள். அவர்களுக்கு சரியான ஆதரவாக நீங்கள் விளங்கினால் உங்களிடம் அவர்கள் நெருக்கத்தை உண்டாக்குவார்கள்.

சிறிய அளவில் திட்டமிடுதலும் தயார்படுத்துதலும் இருந்தாலே போதுமானது; உங்கள் புதிய குடும்பத்துடன் உங்கள் உறவு வெற்றிகரமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாக விளங்கும். தத்தெடுக்கும் பிள்ளைகளை கையாளுவதற்கு உங்களுக்காக நாங்கள் சில டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளோம். அவைகளை பின்பற்றினால் உங்கள் புதிய சுடும்பம் உங்களை நினைத்து பெருமை படும்.
அதிக நேரம் செலவிடுதல்
தத்தெடுக்கும் பிள்ளைகள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதனால் அவர்களுடன் உரையாட உங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும்.உங்கள் உறவின் தரத்தை மேம்படுத்த இது முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளின் உலகத்திற்கு நுழைய நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். அவர்களின் விருப்பு வெறுப்பு ஆகியவைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை கவனிப்பதற்கு உங்கள் இயல்பை மாற்றி கொள்வது வேலைக்காகது. நீங்கள் நீங்களாகவே இருக்கும் தைரியத்தை வரவைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதையும் அன்பும் பல மடங்கு உயரும். அவர்களை கவர்வதற்காக அதிக சிரத்தை எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; மிகவும் முக்கியமான டிப்ஸ் இது. அவர்களை கவனித்துக் கொள்வதில் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி முறையை கையாள முயற்சி செய்யாதீர்கள்.
மனம் விட்டு பேசுங்கள்
மனம் விட்டு பேசுதல் என்பது உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை கையாளுவதற்கான மற்றொரு முக்கியமான வழிமுறையாகும். அப்படி செய்வதால் அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் குறைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தெரிந்து கொண்டு அதனை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் நீங்கள் இறங்கலாம். உங்கள் மனப்பான்மை மற்றும் செயல்களில் வெளிப்படையாக இருப்பது அவர்களை பார்த்துக் கொள்வதில் அவசியமான ஒன்றாகும்.
வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்
குடும்ப பிணைப்பை ஆழமாக வைத்திட நீங்கள் தான் முன் வர வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடமிருந்து அன்பும் பாசமும் உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு தேவைப்படும் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். அதனால் உங்கள் அன்பை அவர்களிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள். உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளை கையாள முக்கிய டிப்ஸ்களில் ஒன்றாக இருப்பது அவர்களிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்துவது.
எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் ஒரு தத்தெடுக்கும் தந்தை/தாய் எனும் போது உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் உங்களிடம் ஒட்டி உறவாட சில காலம் எடுக்கும். அதனால் உங்கள் புது வாழ்கையை நிறைய எதிர்பார்ப்புகளோடு ஆரம்பித்தால், உங்கள் குழந்தைகளிடமிருந்து வரும் எதிர்மறையான மனப்பான்மை உங்களுக்கு மனக்கஷ்டத்தை உண்டாக்கும். தத்தெடுக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் போது எதிர்பார்ப்புகளை பெரிதளவில் குறைத்துக் கொள்வது நல்லது.
அவர்கள் வயதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளின் வயதை மனதில் வைத்துக் கொண்டு அவர்களிடம் உங்கள் அணுகுமுறையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளும் உங்களின் தத்தெடுக்கும் குழந்தைகளும் பல வித வயது வித்தியாசத்தில் இருக்கலாம். அதனால் உங்கள் தத்தெடுக்கும் குழந்தைகளின் வயதிற்கேற்ப அவர்களிடம் அணுகி உரையாடுங்கள். அவர்களை கையாள இதுவும் முக்கியமான டிப்ஸாக விளங்குகிறது.
தொழில் வல்லுநர் வழங்கும் ஆலோசனையை நாடிடுங்கள்
யாரோ பெற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் அல்லது தாயாக இருப்பதென்பது கடினமானது மட்டுமல்லாமல் சவாலானதாகவும் விளங்கும். அதனால் அவர்களை கவனிப்பதற்கு முன்பு யாரேனும் தொழில் வல்லுனரிடம் ஆலோசனை (கவுன்செலிங்) பெற்றுக் கொள்ளலாம். இது உங்கள் உழைப்பின் தரத்தை அதிகரிக்கும். மூன்றாம் நபரின் அபிப்பிராயத்தை பெறுவதும் கூட தத்தெடுக்கும் பிள்ளைகளை கவனித்துக் கொள்வதில் முக்கியமான டிப்ஸாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications