Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உடன்பிறப்பை வரவேற்க முதல் குழந்தையை தயார் செய்ய சில டிப்ஸ்...
குடும்பத்திற்கு புதிய உறுப்பினர் ஒருவர் வருகை தந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் நல்ல செய்தி தான். எனினும், உங்களுக்கு இது இரண்டாவது குழந்தையாக இருக்கும் பட்சத்தில் முதல் குழந்தையை தன்னுடைய உடன்பிறப்பை வரவேற்க தயார் செய்வது நல்லது. உங்களுடைய செல்லக் குழந்தைக்கு நீங்களும், அவனுடைய அப்பாவும் மட்டுமே உலகம். இதுவரையிலும், உங்கள் அன்பு மற்றும் பரிவு அனைத்தையும் அனுபவித்து வந்தது அவள் தான். ஆனால், மேலும் ஒரு குழந்தை வரும் போது சூழ்நிலை இதே போல இருக்காது. வேறொருவர் உங்களுடைய நேரம் மற்றும் கவனத்தைப் பெறும் போது, அவள் சற்றே மாறுபட்டு நடந்து கொள்வாள்.
இது சகஜமானது தான் என்றாலும், இந்த விளைவுகளை எதிர்கொள்ள உங்கள் குழந்தையை தயார் செய்ய வேண்டியது அவசியம். கொண்டாட்டங்கள் அப்படியே இருக்கட்டும், ஆனால் கெட்ட விஷயங்கள் எதுவும் அதனால் நடந்து விடக் கூடாது. இதனால், அவள் புதுவரவை ஏற்றுக் கொண்டதையும் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடையலாம். மேலும், தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் உடன்பிறப்புகள் இருக்கும் உண்மையையும் அவள் அறிந்து கொள்ளலாம். உண்மையில், அவளுக்கு உடன்பிறப்பு என்றால் என்ன என்றே தெரியாது. புது உறுப்பினராக வருபவர் தன்னுடைய பெற்றோர்களின் நேரம் மற்றும் கவனத்தை எடுத்துக் கொள்வார் என்றும் அவளுக்குத் தெரியாது. நீங்கள் ஏன் முதல் குழந்தையை தன்னுடைய உடன்பிறப்பை வரவேற்க தயார் செய்ய வேண்டும் என்று உணர்ந்து கொள்வதற்கு, இந்த ஒரு காரணம் போதும். உங்களுடைய முதல் குழந்தையை, தன்னுடைய உடன்பிறப்பை வரவேற்கச் செய்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில குறிப்புகளை இங்கே நாங்கள் கொடுத்துள்ளோம். படித்துப் பயன் பெறுங்கள்.

எப்பொழுது சொல்ல வேண்டும்?
நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது, அந்த விஷயத்தை உங்களுடைய முதல் குழந்தையிடம் எப்பொழுது சொல்ல வேண்டும் மற்றும் எப்படி சொல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். உங்களுடைய கர்ப்ப காலத்தில் பாதியளவு முடியும் வரையிலும் காத்திருக்க வேண்டியது, நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் முன்னதாகவே இந்த விஷயத்தைச் சொல்லி விட்டால், 'குழந்தை இன்று வருவான அல்லது நாளையா?' என்பது போன்ற அவளுடைய கேள்விகளால் சோர்வடைந்து விடுவீர்கள். எனினும், உங்களுடைய காலை நேர சோர்வைப் பற்றி அவள் கேள்வி கேட்கத் தொடங்கினால், அந்நேரத்தில் புதிய உடன்பிறப்பைப் பற்றி சொல்லலாம். முதல் குழந்தையை புதிய குழந்தையை வரவேற்க தயார் செய்வதில் இது ஒரு சிறந்த வழியாகும்.
எப்படி சொல்ல வேண்டும்?
புது வரவைப் பற்றி சொல்ல சிறந்த வழியைக் கண்டறிய வேண்டியது அடுத்த முக்கியமான வேலையாகும். இதன் மூலம் அதிர்ச்சிகளை குறைத்திட முடியும். அவளாக அறிந்து கொள்ளும் வகையில் ஒரு புத்திசாலித்தனமான வழியை ஏற்படுத்துங்கள். புதிய உடன்பிறப்பு பற்றிய புத்தகங்களை நீங்களும், முதல் குழந்தையும் சேர்ந்து படிக்கத் துவங்குவதன் மூலமும், அவளை 2-வது குழந்தையை வரவேற்கத் தயாராக்க முடியும்.
முதல் குழந்தையை கொண்டாடுங்கள்
நீங்கள் செய்ய வேண்டிய முதன்மையான விஷயமாக இருப்பது உங்கள் முதல் குழந்தையை முழுமையாக ஏற்றுக் கொள்வது தான். அவளைக் கொண்டாடுங்கள், அவளுக்கான கவனத்தை சிறிதும் பிறழாமல் கொடுங்கள். முதல் குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த போது எடுத்த போட்டோவை காட்டி, 'இந்த போட்டோ நீ வயிற்றுக்குள் இருந்த போது எடுத்தது' என்று அவளிடம் சொல்லுங்கள். வரப்போவது என்ன என்பதை அவள் அறியச் செய்யுங்கள் மற்றும் உங்களுடைய அன்பு மற்றும் பாசத்தை அவளிடம் உறுதிப்படுத்துங்கள்.
முதல் குழந்தையின் பங்களிப்பும் அவசியம்
2-வது குழந்தைக்காக வீட்டைத் தயார் செய்யும் போது, முதல் குழந்தையையும் அதில் முழுவதுமாக ஈடுபடுத்துங்கள். அவளையும் அதில் ஒரு பகுதியாக உணரச் செய்யுங்கள். மேலும், அவளுடைய பொம்மைகளை பிரித்து வைத்து, அவற்றில் சிலவற்றை தன்னுடைய உடன்பிறப்புக்காக எடுத்து வைக்கச் செய்யவும். இந்த வகையில் அவள் சகோதரனை வரவேற்பாள்.
அவளுக்கு நீங்கள் தேவை!!
உங்கள் முதல் குழந்தைக்கு நீங்கள் தேவை, அவளுக்கு தேவைப்படும் ஒரே விஷயம் நீங்கள் மட்டும் தான். புதுவரவின் வருகையால், அவள் சற்றே பாதுகாப்பற்ற தன்மையை உணருவாள். எனவே, அவளை கவனிப்பதிலும், ஏற்றுக் கொள்வதிலும், கொண்டாடுவதிலும் குறை வைக்க வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும், முதல் குழந்தையுடன் தொடர்பு படுத்தவும். ஆவளிடம், நீ பிறந்த போது உன்னுடைய பாதம் மிகவும் சிறியதாக இருந்தது என்றும், நீ பிறந்த போது மிகவும் அழகாகவும், மென்மையாகவும் இருந்தாய் என்றும் குறிப்பிடுங்கள். முதல் குழந்தையானவள், 2-வது குழந்தையை வாரியணைத்துக் கொள்ளவும், தூக்கவும் அனுமதிக்கவும். இதன் மூலம் உங்களுடைய முதல் குழந்தை தன்னுடைய உடன்பிறப்பை வெகுவிரைவில் ஏற்றுக் கொள்வாள்.
மேலே கண்ட குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் முதல் குழந்தையை, தன்னுடைய உடன்பிறப்பை வரவேற்கத் தயார் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications