Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
குட்டீஸ்க்கு ஜீரணக்கோளாறா? ஆரஞ்சு ஜூஸ் கொடுங்க!

உண்ட உணவு ஜீரணமாகாமல் வயிறு மந்தமாக இருந்தால் சரியாகும் வரை திட உணவு கொடுக்கவேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்தைத் தீர்க்க சீரணப்பாதையை சுத்தம் செய்தலே சரியான தீர்வு.
முதலில் குழந்தைகளுக்கு பழச்சாறுகள் மட்டுமே கொடுக்க வேண்டும், ஆரஞ்சு சாற்றை வென்னீரில் 50 : 50 என்ற விகிதத்தில் முதலில் கொடுக்கலாம்.
சீரணமாகாத உணவுகளை உடனே வெளியேற்றும் குணம் பழங்களுக்கு மட்டுமே உண்டு. சீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் சிறந்த பழம் எலுமிச்சை பழம். எலுமிச்சையில் உள்ள அமிலச்சத்து ஜீரணப்பாதையை சரியாக்கும்.
திராட்சைப் பழம் அஜீரணக்கோளாறுக்கு ஏற்றது. உடனடியாக பலனளிக்கும். வயிறு வலி இருந்தாலும் உடனடியாக சரியாகும். அதேபோல் அன்னாசிபழச்சாற்றினை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது டானிக் போல செயல்பட்டு உடனடி பலன் தரும். பழங்கள், பழச்சாறுகள் உணவு முறையை மேலும் 2 நாட்களுக்கு கொடுத்து வந்தபிறகு, சீரணமாகக் கூடிய லேசாக வேகவைத்த காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவற்றை கொடுக்கலாம்.
அஜீரணக்கோளாறு ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு உணவு அருந்தும்போது தண்ணீர் குடிக்கத் தரக்கூடாது. சாப்பிடும் முன் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அல்லது சாப்பாட்டிற்குப் பிறகு 1 மணி நேரம் கழித்து தண்ணீர் கொடுக்கலாம்
பசிக்காமல் சாப்பிடக் கொடுக்கக் கூடாது. அதேபோல் வயிறு முட்ட சாப்பிடத் தரக்கூடாது. சாப்பிடும் போது அவசரமாக விழுங்காமல் உணவை நன்றாக மென்று விழுங்கச் சொல்லவேண்டும்.
இந்த நடைமுறைகளை பின்பற்றினால் குழந்தைகளின் ஜீரணக்கோளாறுகளை சரியாக்கலாம்.



Click it and Unblock the Notifications
