For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் காதுகளை செவிடாக்கும் கிகரெட் புகை

By Mayura Akilan
|

புகைப்பிடிப்பதால் புற்று நோய், ரத்தம் சம்பந்தமான நோய், இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் பிறர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு காது செவிடாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகம் அறிவியல் துறை மாணவர்களின் உதவியுடன் சிகரெட் புகையால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த புதிய ஆய்வை மேற்கொண்டது. அதில் 12 முதல் 19 வயது வரையிலானவர்கள் ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்தன.

சுவாசிப்பதால் ஆபத்து

சிகரெட் பிடிப்பவர்களை விட அந்த புகையை சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்தது.

சுவாசிக்கப்படும் சிகரெட் புகை, மூக்கு மற்றும் வாய் வழியாக சென்று காதின் உட்பகுதியில் அமைந்துள்ள ஒலியை கிரகிக்கும் மெல்லிய உறுப்பை சேதப்படுத்துகிறது. இதனால் ஒலியை வாங்கும் திறன் அந்த உறுப்பு இழப்பதால் செவிட்டு தன்மை உண்டாகிறது. மேலும் அடுத்தவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் சக்தி குறைவதுடன் படிப்பில் நாட்டம் இல்லாமை, அடங்காத்தன்மை போன்ற குறைபாடுகள் பள்ளி குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெரியவர்கள் மற்றும் பெற்றோர், குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு சிகரெட் பிடிக்க வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

English summary

Smoking affects children's ear | குழந்தைகளின் காதுகளை செவிடாக்கும் கிகரெட் புகை

Smoking not only give bad impact to our lung. However, it also affects our ears, and can cause ear infections called otitis media. Where there will be thickening the mucus in the nose that becomes home to bacteria. The bacterias are then turned into an infection that showed symptoms of fever, fluid in the ear, and ear pain after a few days.
Story first published: Monday, August 15, 2011, 14:35 [IST]
Desktop Bottom Promotion