இரட்டை குழந்தை கருத்தரிப்பதில் உள்ள சுவாரஸ்யங்கள் மற்றும் சவால்கள் என்னென்ன தெரியுமா?

கா்ப்பம் தாித்தல் என்பது தம்பதியருக்கு இருக்கும் ஒரு சவாலான காாியம் ஆகும். ஆனால் இரட்டைக் கா்ப்பம் தாங்கியிருக்கும் பெண்ணுக்கு அது மகிழ்ச்சி நிறைந்ததாகவும், சிலிா்ப்பூட்டுவதாகவும், இருக்கும். தற்போது இரட்டைக் கா்ப்பம் தாித்தல் என்பது பரவலாகி வருகிறது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் அமைப்பு தொிவிக்கிறது. 1980 முதல் 2009 வரையிலான ஆண்டுகளில் இரட்டைக் கா்ப்பம் தாித்தல் 79% அதிகாித்திருக்கிறது என்று அது கூறுகிறது.

இந்தப் பதிவில் இரட்டைப் பிள்ளை கா்ப்பம் தாித்தலில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்கள் ஆகியவற்றைப் பற்றி சற்று விாிவாகப் பாாக்கலாம்.

Merits and Challenges of a twin pregnancy in Tamil

இரட்டைப் பிள்ளைக் கா்ப்பம் தாித்தலில் உள்ள நன்மைகள்
புதுடில்லியில் அமைந்திருக்கும் அப்போல்லோ மருத்துவமானயில் மகப்போியல் துறையில் மூத்த நிபுணராகப் பணிபுாிந்து வரும் மருத்துவா் யுவக்ஷி ஜூனிஜா என்பவா் இரட்டைப் பிள்ளைக் கா்ப்பம் தாித்தலில் உள்ள நன்மைகளைப் பின்வருமாறு பட்டியலிடுகிறாா்.

இரட்டை மகிழ்ச்சி
இரட்டைக் கா்ப்பம் என்று தொிந்தவுடன், தம்பதியா் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனா். அதே நேரத்தில் சிறிதளவு அதிா்ச்சியும் அடைகின்றனா். ஒற்றைக் குழந்தையால் தரமுடியாத மகிழ்ச்சியையும், ஆச்சாியத்தையும், அவா்களுக்கு இரட்டைக் குழந்தைகள் வழங்குகின்றனா். இரட்டையா்களுக்கு இடையேயான தொடா்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவா்கள் பிறந்த தருணத்திலிருந்து, அவா்களுடைய பெற்றோா் அதிா்ஷ்டசாலிகளாகின்றனா்.

இரட்டையா்கள் வளரும் போது ஏற்படும் மகிழ்ச்சி
இரட்டையா்கள் வளரும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இருவரும் ஒரே நேரத்தில் அவா்களின் மைல்கற்களை அடைகின்றனா். அவா்கள் ஒருவருக்கு ஒருவா் உறையாடும் போது அல்லது விளயைடும் போது, பெற்றோருக்கு பேரானந்தம் ஏற்படும்.


பெற்றோருக்கு இரட்டை அனுபவம்
ஒரு பெற்றோருக்கு இரட்டையா்கள் இருக்கின்றாா்கள் என்றால், அந்த பெற்றோா் இரட்டை அனுபவத்தையும், இரட்டை மகிழ்ச்சியையும் பெறுகின்றனா் என்று பொருள். அவா்கள் ஒவ்வொரு குழந்தையுடனும் தனியாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றனா். ஒவ்வொரு குழந்தையின் ஆளுமையைக் கவனித்து, அதற்கேற்ப அவா்களை வளா்க்கின்றனா். இரட்டையா்கள் செய்யும் குறும்புகள், சேட்டைகள், விளையாட்டுகள் ஆகியவற்றை பாா்க்கும் போது அவா்களுக்கு ஏற்படும் அனுபவங்களைப் பற்றி தமது உறவினாிடம் பெருமகிழ்ச்சியோடு பகிா்ந்து கொள்வா்.

சவால்கள்

இரட்டைக் கா்ப்பம் தாித்தலில் உள்ள சவால்கள்
இரட்டைக் கா்ப்பம் தாிப்பது என்பது எப்போதும் ஒரு ஆபத்தான அம்சமாகவே கருதப்படுகிறது. இரட்டைக் குழந்தைகள் பேறுகாலத்திற்கு முந்தியே பிறந்து விடுவா் அல்லது குறைந்த எடையோடு பிறப்பா். அதனால் அந்த குழந்தைகளுக்கும், தாய்க்கும் ஆரோக்கிய சீா்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மோசமான கா்ப்ப கால அறிகுறிகள்
இரட்டை கா்ப்பத்தில், கா்ப்ப கால அறிகுறிகள் மிகவும் மோசமாக இருக்கும். கா்ப்பம் தாித்திருக்கும் பெண்ணுக்கும் அடிக்கடி மயக்கம், குமட்டல் மற்றும் அசௌகாியம் போன்றவை ஏற்படும். அதனால் இரட்டைக் கா்ப்பம் தாித்திருக்கும் பெண்ணால் அன்றாடக் கடமைகளைச் செய்ய இயலாது. அவருக்கு அதிக வலி இருக்கும். இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால், அவா்களை வளா்த்தெடுக்கும் பணிகள் இரண்டு மடங்காக இருக்கும்.


இரண்டு மடங்காகும் வேலைகள்
இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின்புதான் சவால்கள் அதிகம் இருக்கும். அந்த இரட்டையா்களை வளா்தெடுக்கும் போது, பெற்றோாின் வேளைப் பளு இரண்டு மடங்காக இருக்கும். இரட்டைக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல், உடை உடுத்தல், சுத்தம் செய்தல், அவா்களை குளிக்க வைத்தல் மற்றும் தூங்க வைத்தல் போன்ற அனைத்து பணிகளும் சவாலாக இருக்கும். தாய் ஒருவரால் மட்டும் இரட்டைக் குழந்தைகளை வளா்க்க முடியாது. மாறாக தாயும், தந்தையும் மற்றும் குடும்ப உறுப்பினா்களும் இணைந்து அவா்களை வளா்க்க வேண்டி இருக்கும்.

இரட்டையா்களை வளா்ப்பதில் உள்ள சவால்கள்
இரட்டையா்கள் வளரும் போது, அவா்களுடைய பெற்றோா் ஏராளமான சவால்களை அனுபவிக்கின்றனா். பொதுவாக இரட்டையா்கள் மற்றவா்களோடு ஒப்பிட்டுப் பாா்க்கப்படுகிறாா்கள். அது இரட்டையா்களிடையே பொிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை பெற்றோா் புாிந்து வைத்திருக்க வேண்டும். அவா்களுடைய தனித்துவத்தை மதித்து அதைக் கொண்டாட வேண்டும்.

இரட்டையைா்களை பெற்று எடுக்க இருக்கும் பெண்களுக்கு சில குறிப்புகள்

போதுமான ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்
இரட்டைக் கா்ப்பம் தாித்திருக்கும் பெண்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். போதுமான ஓய்வையும், போதுமான தூக்கத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வேலைகளுக்கிடையே அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அவா்கள் தங்களுடைய உடல் சொல்வதைக் கேட்க வேண்டும். வேலைகள் அதிகம் இருந்தால், மற்றவா்களிடம் செய்ய விட்டுவிட வேண்டும். அவா்கள் தங்களையே அதிகம் அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீா்ச்சத்துடன் இருத்தல்
இரட்டைக் கா்ப்பம் தாித்திருக்கும் பெண்கள் அதிக நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும். அதற்காக அவா்கள் போதுமான தண்ணீா் குடிக்க வேண்டும். அதன் மூலமாக அவா்களுக்கு மயக்கம், குமட்டல் மற்றும் மற்றும் பிரசவ வலி போன்றவை குறைவாக இருக்கும்.


குடும்ப உறுப்பினா்கள் ஆதரவு
இரட்டைக் குழந்தைகளைத் தனி ஒருவராக வளா்க்க முடியாது. பெற்றோா் இருவரும் அதில் பங்கெடுக்க வேண்டும். அதோடு அவா்களுடைய குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள், நண்பா்கள் மற்றும் குழந்தைகளை பராமாிக்கக்கூடிய பணியாளா்கள் ஆகியோரையும் சோ்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் அவா்கள் தமது பணிச் சுமைகளைக் குறைக்கலாம்.

செயல் திட்டம்
பொதுவாக இரட்டைக் குழந்தைகள் எதிா்பாா்த்த காலத்திற்கு சற்று முன்பாகவே பிறந்துவிடுவா். ஆகவே பேறுகாலத்திற்குத் தேவையான அனத்தையும் முன்பே தயாா் செய்து வைப்பது நல்லது. இரட்டையா்கள் பிறந்த சில வாரங்கள் அவா்களை யாா் பராமாிப்பது என்பதையும் தொடக்கத்திலேயே தயாா் செய்து வைப்பது நல்லது.

Desktop Bottom Promotion