Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
உங்க அம்மாவுக்கு எந்த நோயும் வராம ஆரோக்கியமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
நல்ல ஆரோக்கியத்திற்காக, உள்ளூர் உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். கலாச்சார மற்றும் உள்ளூர் சுவையுடன் உணவை சமைக்கவும். எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும்.
குடும்பம், வேலை மற்றும் குழந்தைகளை கவனிப்பது என பெண்களின் வாழ்க்கை மிகவும் பிஸியாக இருக்கும். மற்றவர்களை கவனித்துக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்வதில்லை. எப்போதும் தங்கள் ஆரோக்கியத்தில் அம்மாக்கள் சமரசம் செய்கிறார்கள். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சரியான ஆரோக்கியமான உணவுகளை உண்பது ஒவ்வொரு அம்மாக்களின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் கடந்து செல்லவும், உங்கள் மனநிலையை அதிகரிக்கவும், உங்களுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் உதவும்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப உங்கள் உணவை வடிவமைக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு சிறந்தது என்பது எப்போதும் மற்றொரு பெண்ணுக்கு சிறந்த தேர்வாக இருக்காது. நாள் முழுவதும் அம்மக்கள் நீங்கள் எப்படி உற்சாகமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஆரோக்கியமான உணவு தட்டு
ஆரோக்கியமான, திருப்திகரமான உணவை உண்பது, நாம் அம்மாக்கள் எதிர்கொள்ளும் தினசரி சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழியாகும். ஒவ்வொரு உணவின் போதும், உங்கள் தட்டில் பாதி பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும். உங்கள் தட்டில் கால் முதல் மூன்றில் ஒரு பங்கு புரதம், ஒரு பங்கு ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் என உங்கள் தட்டை ஆரோக்கியமான உணவுகளால் நிரப்ப வேண்டும். நாள் முழுவதும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவுக்கு இடையில் ஒவ்வொரு 2-4 மணிநேரத்திற்கு இடையில் சிற்றுண்டி சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை வரம்பிடவும்
பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நிறைந்த தின்பண்டங்கள், கூடுதல் உப்பு கொண்ட குக்கீகள் மற்றும் வெள்ளை மாவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற உணவுகள் அனைத்தும் வாழ்க்கை முறை நோய்களுக்கு பங்களிக்கின்றன.

உள்ளூர் உணவுகளை சாப்பிடுங்கள்
நல்ல ஆரோக்கியத்திற்காக, உள்ளூர் உணவு முறைகளைப் பின்பற்ற வேண்டும். கலாச்சார மற்றும் உள்ளூர் சுவையுடன் உணவை சமைக்கவும். எளிதில் கிடைக்கக்கூடிய உணவு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும். மேலும், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உங்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன.

கால்சியம் உட்கொள்ளல்
பெண்கள் கால்சியம் குறைபாட்டினால், நம்பமுடியாத அளவிற்கு எளிதில் பாதிக்கப்படுகிறார்கள். உங்கள் உடலுக்கு ஒவ்வொரு நாளும் தேவையான கால்சியம் கிடைக்காதபோது, அது உங்கள் எலும்புகளில் இருந்து எடுக்கும். இது உங்களை ஒட்டுமொத்தமாக பலவீனப்படுத்தும் மற்றும் எலும்பு தேய்மானத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இயற்கையான கால்சியம் ஆதாரங்களான பச்சை இலை காய்கறிகள், மீன், தானியங்கள், டோஃபு போன்ற உணவுகளை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நட்ஸ்கள் மற்றும் விதைகள்
உங்கள் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று நட்ஸ்களை சாப்பிடுவது. அவை உங்களுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்களின் சிறந்த ஆதாரம் மட்டுமல்ல, அவை உணவில் இணைக்க மிகவும் எளிமையானவை. உங்கள் ரொட்டி, காய்கறிகள் மற்றும் சாலட்களில், ஆளிவிதை, சூரியகாந்தி போன்ற விதைகள் மற்றும் நட்ஸ்களை சேர்க்கவும். மேலும், இது உங்கள் உடலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications