பொண்ணுங்க பிறப்புறுப்பிலேயே பரு வந்தா என்ன அர்த்தம் தெரியுமா? இனியாவது சீரியஸா எடுத்துக்கங்க

பெண்களுக்கு இவர்களுடைய பிறப்புறுப்பில் உண்டாகுமு் புற்றுநோய் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பது பற்றிய கட்டுரை தான் இது. அதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி இந்த பகுதியில் விளக்கமாக

இந்த பிறப்புறுப்பு கேன்சர் என்பது பெண்களுக்கு வரும் புற்றுநோய் ஆகும். இது வுல்வல் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. பெண்களின் பிறப்புறுப்பை தாக்கி உயிருக்கு உலை வைக்கும் அரிதான புற்றுநோய் இது. வுல்வா என்பது சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும் மற்றும் யோனி பகுதிக்கும் இடையே காணப்படும் ஒரு வகை சருமம்.

Vulvar Cancer

இதில் யோனியின் உட்புற வெளிப்புற பகுதியும், க்ளிக்டோரிஸ், யோனி திறப்பு போன்றவை அடங்கும். இந்த புற்றுநோய் பெரும்பாலும் வெஜினாவின் வெளிப்புற வாய் பகுதியில் பரவக் கூடியது. 0.6 % வளரக் கூடியதாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்புறுப்பு கேன்சர்

பிறப்புறுப்பு கேன்சர்

அதே மாதிரி இந்த புற்று நோய் ஆரம்பமான இடத்திலேயே நிற்பதில்லை. அப்படியே வளர்ந்து மற்ற பகுதிகளையும் தாக்க கூடியது. இந்த புற்றுநோய் செல்கள் மெதுவாக தன் வேலையை தொடங்கினாலும் வுல்வரின் உள் வாயில் ஆரம்பித்து வுல்வா வை சுற்றியுள்ள சருமம் முழுவதையும் பரவி விடும். பார்ப்பதற்கு கட்டி போன்றோ அல்லது புண்ணாக அரிப்புடன் காணப்படும்.

இதன் அறிகுறிகளை வைத்து இதனை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அப்படி சிகிச்சை அளிக்க தாமதமாகி விட்டால் அசாதாரண செல்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறி விடும்.

வகைகள்

வகைகள்

இந்த புற்றுநோய் 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது.

க்யூமாஸ் செல் கால்சினோமா

இது முதலில் சரும செல்களை பாதிக்க கூடியது. இதில் 90% புற்று நோய் செல்கள் உயிரணு செல்களாக இருக்கிறது. இது யோனி பகுதியில் உள்ள வெளிப்புற சருமத்தை பாதிக்கிறது. ஆனால் என்ன பல வருடங்கள் ஆகியும் இதன் அறிகுறிகள் தெரிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். இது பாப்பிலோமாவைரஸ் உடன் தொடர்புடையது. இது பெரும்பாலும் இளம் பெண்களை தாக்க கூடியது.

வுல்வர் மெலோனாமா

10% வுல்வர் கேன்சர் வுல்வர் மெலோனாமா வகையைச் சார்ந்ததாக கூறுகின்றனர். இந்த வகை கேன்சரில் அந்த பகுதியில் உள்ள சருமத்தின் நிறம் மாறுதல் அடைகிறது. இது பெரும்பாலும் 50-80 வயதை பெண்களுக்கு ஏற்படுகிறது. இது இளம் பெண்களையும் தாக்க கூடியது. இதை மூன்று வகைகளாக பிரிக்கலாம். மேலோட்டமான பரவல், நொதிலர் மற்றும் அட்ரல் லெண்டிஜினஸ் மெலனோமா. மெலனோமா உடலின் பிற பாகங்களுக்கு பரவுவதால் அதிக ஆபத்து நேர வாய்ப்புள்ளது.

சர்கோமா

எலும்பு, இணைப்பு திசு செல்கள் போன்றவற்றில் வரக் கூடியது. சர்கோமா பெரும்பாலும் வீரியமிக்கவை. இந்த வகை கேன்சர் எந்த வயதிலும் வரக் கூடியது. ஏன் குழந்தை பருவத்தில் கூட வருகின்ற அபாயம் இருக்கிறது.

வெரிகொஸ் கார்சினோமா

இது க்யூமாஸ் செல் கால்சினோமாவின் ஒரு வகை ஆகும். இது பார்ப்பதற்கு மரு போன்று ஆரம்பித்து படிப்படியாக வளரக் கூடியது.

அடெனோகார்சினோமா

இது பெண் பிறப்பிறுப்பில் உள்ள சுரப்பிகளில் வரும் புற்றுநோயாகும். இது அரிதாக தாக்க கூடியது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

இந்த புற்றுநோய் ஆரம்பித்த காலத்தில் அரிப்பு, கட்டி அப்புறம் இரத்தம் கசிவு போன்றவை ஏற்படும்.

மரு வளர்ந்து கொண்டே போகுதல்

வெஜினாவில் அதிக இரத்த போக்கு

வலி மற்றும் எரிச்சல்

உடலுறுவின் போது வலி ஏற்படுதல்

வலியுடன் சிறுநீர் கழித்தல்

வுல்வர் பகுதியில் அதிக அரிப்பு

அதிக வலி உணர்திறன்

தோலின் நிறம் மாறுதல் (மெலோனாமா)

அல்சரேசன்

தடினமான சருமம்

விளைவுகள்

விளைவுகள்

புற்றுநோய் வளர ஆரம்பித்து விட்டால் புற்று நோய் செல்களை கட்டுப்படுத்த முடியாது. மரபணு பிறழ்ச்சி ஏற்படும் போது செல்கள் பிரிந்து புற்றுநோய் செல்கள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. இந்த புற்றுநோய் செல்கள் மற்ற பாகங்களிலும் பரவக் கூடியது.

புற்றுநோய் செல்கள் பரவும் விதம்

புற்றுநோய் செல்கள் பரவும் விதம்

இந்த புற்றுநோய் செல்கள் நமது உடம்பில் இரண்டு வழிகளில் பரவுகின்றன. ஒன்று இரத்தத்தின் வழியாக அல்லது லிம்ப் சிஸ்டம் வழியாக பரவுகிறது. இது நமது உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அழித்து விடுகிறது.

காரணிகள்

காரணிகள்

கீழ்க்கண்ட காரணிகள் வுல்வா புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது.

வயது

70 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பெரும்பாலும் இந்த நோயால் பாதிப்படைகின்றனர்.

வுல்வேர் இன்ராபீடிதீயல் நியோபிளாசியா (விஐஎன்)

இந்த வுல்வேர் எபீதீலிய செல்கள் குறைந்த அளவு புற்றுநோய் செல்களை கொண்டிருக்கும். இதுவே உட்புற சருமத்தை கொண்ட (விஐஎன்) பெண்களுக்கு அதிகளவில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மனித பாப்பிலோமாவைரஸ் (HPV)

இந்த வைரஸ் தாக்கம் கொண்ட பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகளவில் உள்ளது. லிஹென் பிளானஸ் மெலனோமா போன்ற பாலியல் நோய்களைக் குணப்படுத்தக்கூடிய தோல் நோயைக் கொண்டிருப்பது,

மெலோனாமா

உடலுறவு வழியாக பரவும் வைரஸ்

புகைப் பிடித்தல்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

ஹூயூமன் இம்பினியூ டிவிசன்ஸி வைரஸ்

சிஸ்டமிக் லூபஸ் எரிடாமெட்டோசஸ்

சொரியாஸிஸ்

பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி

புற்று நோயின் ஆரம்ப நிலை

பிறப்புறுப்பு மருக்கள்

கண்டறிதல்

கண்டறிதல்

தினசரி உங்கள் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் போன்றவற்றை கண்காணித்து வாருங்கள். எதாவது கட்டிகள் போன்ற அமைப்பு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கோல்போஸ்கோபி

இது ஒரு ஸ்பெஷல் பெரிதாக்கும் கருவி. இதன் மூலம் வுல்வா புற்றுநோய் கட்டிகள் எங்கு உள்ளது என்பதை எளிதாக கண்டறிந்து விடலாம்.

சிஸ்டோஸ்கோபி

இந்த முறை மூலம் சிறுநீரக உறுப்பை பரிசோதித்து கேன்சர் எந்தளவுக்கு பரவியுள்ளது என்பதை கண்டறிந்து விடலாம்.

ப்ரக்டோஸ் கோபி

மலக்குடல் ஆய்வு மேற்கொண்டு அதன் சுவர்களில் புற்றுநோய் செல்கள் எந்தளவு பரவியுள்ளது என்பதை கண்டறியலாம்.

ஸ்கேன்

மேலும் எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே மூலம் இந்த புற்றுநோய் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் வேறு எங்கும் பரவியுள்ளதா என்பதையும் கண்டறியலாம்.

வுல்வர் கேன்சர் படிநிலை

வுல்வர் கேன்சர் படிநிலை

மேற்கண்ட பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் இந்த புற்றுநோயை கண்டறிந்து அதன் படி நிலையை நாம் கண்டறியலாம். இந்த படிநிலைகள் மூலம் புற்றுநோயின் தீவிரத்தை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்கேற்றவாறு சிகிச்சையும் அவர்களால் அளிக்க முடியும்.

இந்த கட்டிகள் வந்த இடம், பரவிய இடம், நிணநீர் முடிச்சுகள், கட்டிகளின் வடிவம், அளவு, கட்டிகளின் எண்ணிக்கை போன்றவற்றை கொண்டு இவற்றை வகைப்படுத்தலாம்.

படிநிலை 0

இது சீக்கிரமாகவே பரவக்கூடிய நிலை. இது வுல்வா சருமத்தில் ஏற்படும் நிலை.

படிநிலை 1

யோனி திறப்பு மற்றும் முன்தோல் இடையே தோல் பகுதி) வரை பரவும் . இதன் அளவு 2 சென்டிமீட்டர் வரை செல்கிறது.

படிநிலை 2

இந்த நிலையில் புற்றுநோய் வுல்வா நிலையில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவுகிறது. யூரித்ரா, வெஜினா மற்றும் ஆசனவாய் வரை பரவி இருக்கும்.

படிநிலை 3

இந்த நிலையில் புற்றுநோய் நிணநீர் மண்டலங்களுக்கு பரவுகிறது.

படிநிலை 4ஏ

இந்த நிலையில் நிணநீர் மண்டலங்கள் மற்றும் யூரித்ராவின் மேற்பகுதி வரை பரவி இருக்கும். சிறுநீர்ப்பை, மலவாய், இடுப்பு எலும்பு வரை பரவி விடும்.

படிநிலை 4பி

இந்த நிலையில் நிணநீர் மண்டலங்கள் வழியாக மற்ற உறுப்புகள் வரை பரவியிருக்கும்.

சிகச்சைகள்

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதில் புற்றுநோய் கட்டிகளை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எந்தவித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆரம்ப நிலையிலேயே கட்டிகளை நீக்கி விட்டால் நல்லது. இல்லையென்றால் இந்த கட்டிகள் மலக்குடல் வரை பரவி விடும்.

லேசர் அறுவை சிகிச்சை

லேசர் கதிரியக்கம் மூலம் புற்றுநோய் கட்டிகள் மற்றும் அருகில் சுற்றியுள்ள பகுதிகளைக் கூட நீக்கி விடலாம்.

ஸ்கின்னிங் வுவ்வக்டோமி

இந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் புற்றுநோய் சருமத்தின் மேல் தோலை நீக்கி விடுகிறார்கள்.

கதிரியக்க வுல்வக்டோமி

இந்த அறுவை சிகிச்சையில் முழு வுல்வா பகுதியையும் (பெண்குறிமூலம், யோனி வாய்ப்பகுதி, யோனியின் ஆரம்ப பகுதி மற்றும் அருகிலுள்ள நிணநீர் மண்டலங்கள் உட்பட) அகற்றும் தீவிர சிகிச்சை ஆகும்.

கதிரியக்க தெரபி

இந்த தெரபியில் கதிரியக்கம் மூலம் கட்டியை சுருங்கச் செய்து பிறகு அறுவை சிகிச்சை கொண்டு நீக்குகின்றனர். இதற்கு அதிக சக்தி வாய்ந்த கதிரியக்கம், எக்ஸ்ரே, புரோட்டான்ஸ் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கின்றனர். இதன் மூலம் எளிதாக உயிரை காப்பாற்றி விடலாம்.

கீமோதெரபி

இந்த தெரபி மூலம் கெமிக்கல் மருந்துகளை செலுத்தி புற்றுநோய் கட்டிகளை பரவ விடாமல் தடுத்து புற்றுநோயை தடுக்கின்றனர். இது உடல் உறுப்புகள் முழுவதும் பரவிய நிலையில் கூட சிகச்சை அளிக்க இது உதவுகிறது.

பயோலாஜிக்கல் தெரபி

இது இம்பினோதெரபி மூலம் செய்யப்படுகிறது. இதன் மூலம் நமது உடலே புற்றுநோயை எதிர்த்து போரிடும் வலிமையை பெறும்.

தடுக்கும் நடவடிக்கைகள்

தடுக்கும் நடவடிக்கைகள்

பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ள வேண்டும்.

அதிகப்படியான பேருடன் உடலுறுவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

ஹெச்பிவி தடுப்பூசி கூட போட்டுக் கொள்ளலாம்.

கர்ப்ப பை வாய் பரிசோதனை செய்வது நல்லது.

புகைப்பிடிக்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 5, 2019, 15:55 [IST]
Desktop Bottom Promotion