கரு உருவாகாமல் தடுக்கும் ‘வஜைனா ரிங்’ பற்றித் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கையில் எது நடந்தாலுமே திட்டமிட்டு பயங்கர பிரயத்தனங்களோடு தான் நடத்தப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும் என்கிற திட்டம் சில நேரங்களில் சொதப்பினால் வாழ்க்கையே முடிந்தது எனுமளவுக்கு கொண்டு சென்று விடுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுவது, குழந்தை பெற்றுக்கொள்வது ஆகியவை இந்த முடிவுகளில் முதன்மையானது. தங்களுடைய வாழ்க்கை இன்னும் செட்டில் ஆகவேயில்லை அதற்கு பிறகு தான் குழந்தையென்று சொல்லி குழந்தை பிறப்பையே தள்ளிப்போட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த குழந்தை பிறப்பை தள்ளிப் போட நினைத்து தோற்றுப்போய் அன்றாடம் சிரமப்படுகிறவர்கள் அநேரம் பேர் வரை இருப்பார்கள்.கரு உருவாகி அதன் பின்னர் அதனைக் களைப்பது என்பது உடல் நலனுக்கும் பெரும் தீங்கு தரக்கூடிய விஷயம். அதனால் கரு உருவாகாமல் அதாவது பெர்த் கன்ட்ரோல் செய்யும் வழிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காம்பினேஷன் பில் :

காம்பினேஷன் பில் :

99 சதவீதம் இது சிறந்த பலனைக் கொடுக்கிறது.அதுவும் நீங்கள் இந்த மாத்திரைகளை தவறாது ஒரே நேரத்தில் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இது சில நேரங்களில் உங்களது மாதவிடாய் தேதியைக் கூட மாற்றக்கூடியது.

புகைப்பழக்கம் உள்ளவர்கள், முப்பத்தைந்து வயதிற்கு மேல் இருப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

இந்த மாத்திரையினால் தூண்டப்பெறும் ஈஸ்ட்ரோஜென் ரத்தம் உறைதலை ஏற்படுத்தக்கூடும்.இந்த மாத்திரை சாப்பிட்டதும் தலைவலி ஏற்பட்டாலோ அல்லது ஏற்கனவே உங்களுக்கு தலைவலி இருந்தாலோ இதனை தவிர்ப்பது நல்லது.

ப்ரோஜெஸ்டீன் :

ப்ரோஜெஸ்டீன் :

இதனை மினி பில் என்று அழைக்கிறார்கள். இதில் இருப்பது ப்ரோஜெஸ்டீன் மட்டுமே ஈஸ்ட்ரோஜென் இருக்காது. புகைப்பழக்கம் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதயம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் எல்லாம் பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஈஸ்ட்ரோஜென் இல்லாததால் ரத்த உறைவு ஏற்ப்பட்டுவிடுமோ என்ற பயம் தேவையில்லை.

முதல் குழந்தை :

முதல் குழந்தை :

எதிர்ப்பாராத விதமாக இரண்டாவது குழந்தை வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கு இந்த மாத்திரை பெஸ்ட் சாய்ஸ். ஆனாலும் மருத்துவ ஆலோசனைப்படி உங்களது உடல் தன்மைக்கு ஏற்ப மருந்து எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரை சாப்பிடுவதால் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால் அதற்கு எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது.

எக்ஸ்டண்டட் :

எக்ஸ்டண்டட் :

சைக்கிள் பில் என்று அழைக்கக்கூடிய இதனை எடுத்துக் கொள்வதால் கரு உருவாகமல் தடுக்கச் செய்திடும். அதோடு உங்களுக்கு மாதவிடாய் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தான் ஏற்படும்.

லிபரல் என்ற இந்த மாத்திரையை தொடர்ந்து எடுக்கும் வரை உங்களுக்கு மாதவிடாய் ஏற்படாது.

வஜைனா ரிங் :

வஜைனா ரிங் :

இந்த ரிங் ப்ளாஸ்டிக்கில் செய்யப்பட்டிருக்கும். இதனை வஜைனாவில் பொருத்திக் கொள்ள வேண்டும். காம்பினேஷன் பில் போலவே இது ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டீன் ஆகியவற்றை வெளியேற்றும். சுமார் மூன்று வாரங்கள் வரை வைத்திருந்துவிட்டு எடுத்துவிடலாம். பின்னர் ஒரு வாரத்தில் உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும்.

புகைப்பழக்கம் இருப்பவர்கள்,புற்றுநோய் தாக்கி சிகிச்சை மேற்கொண்டவர்கள், அல்லது தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் இதனைத் தவிர்த்தல் நலம்.

Image Courtesy

டையப்ராகம் :

டையப்ராகம் :

இது டோம் வடிவத்தில் இருக்கும். இதனை ரப்பரினால் தயாரித்திருப்பார்கள். இந்த டையப்ராகம் உங்களின் கருப்பை வாயை மூடிடும். இதனால் ஸ்பர்மை கருமுட்டைக்கு அனுப்பாமல் தடுத்திட முடியும்.

மருத்துவ ஆலோசனைப் படி, மருத்துவ உதவியுடன் மட்டுமே இதனை பொருத்திக் கொள்ள வேண்டும். அதீத உடல் எடை இருப்பவர்கள், டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நலம்.

Image Courtesy

ஐயுடி :

ஐயுடி :

இந்த முறை உங்களில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.சின்ன அறுவை சிகிச்சை மூலமாக இந்தக் கருவியை உங்களது கர்பப்பைக்குள் பொருத்துவார்கள். இதனால் ஸ்பர்ம் கருமுட்டையை நெருங்க முடியாது. சுமார் பத்தாண்டுகள் வரை இது செயலாற்றும்.

யாருக்கு பொருத்தலாம் :

யாருக்கு பொருத்தலாம் :

இந்தக் கருவியை பொருத்தப்பட்டால் கர்பப்பை விரிவடையும். இதனால் ஏற்கனவே குழந்தைப் பெற்றவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். இல்லையென்றால் இது அதீத வயிற்று வலியை உண்டாக்கிடும்.

இரண்டு வருடத்தில் அடுத்தக் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறேன் என்று நினைப்பவர்கள் இதனைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் இந்த முறை நீண்ட காலம் குழந்தை பிறப்பை தள்ளிப்போட நினைப்பவர்களுக்கானது.

பெண்களுக்கான காண்டம் :

பெண்களுக்கான காண்டம் :

பாலியுரதீன் அல்லது சாஃப்ட் பிளாஸ்டிக்கினால் இது செய்யப்பட்டிருக்கும். இதனை வஜைனாவின் ஆழத்தில் பொருத்திக் கொள்ள வேண்டும்.டையப்ராகம் போல இதுவும் கருப்பை வாயை அடைத்துவிடும்.

உறவில் ஈடுபடுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவிருந்தே நீங்கள் அணிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பேட்ச் :

பேட்ச் :

இதனை ஹார்மோன் ரிலீசிங் பேட்ச் என்று அழைக்கிறார்கள். இதனை உங்களது கை , வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் எங்கேனும் ஒரு வாரம் வரை ஒட்டியிருக்க வேண்டும்.

இந்த பேட்ச் அறுபது சதவீதத்திற்கும் அதிகமாக ஈஸ்ட்ரோஜனை வெளிப்படுத்தும். . இரத்த உறைவு பிரச்சனை இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

இம்ப்ளாண்ட் :

இம்ப்ளாண்ட் :

ஒரு தீக்குச்சி அளவு தான் இது இருக்கும். உங்கள் கைகளில் இதனை பொருத்திக் கொள்ள வேண்டும். சுமார் மூன்று வருடங்கள் வரையில் இது செயலாற்றும். நூறு சதவீதம் சிறந்த பலனைக் கொடுக்கக்கூடியது. உடல் பருமன் இருப்பவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது.

ஸ்டெர்லைசேசன் :

ஸ்டெர்லைசேசன் :

இது அறுவை சிகிச்சை முறை என்பதால் செய்வதற்கு முன்னால் நன்றாக யோசித்து முடிவெடுத்திடுங்கள். இதனைச் செய்வதால் உங்களின் ஃபெலோபியன் ட்யூப் அடைக்கப்படும்.

இதனால் கர்ப்படைய முடியாது. இந்த முறை பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு மிகவும் எளிதானது.

எமர்ஜென்ஸி :

எமர்ஜென்ஸி :

இது வழக்கமாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். உறவில் ஈடுப்பட்ட 72 மணி நேரங்களுக்குள் இந்த மாத்திரைகளை எடுக்க வேண்டும்.எல்லாருக்கும் சிறந்த பலனைத் தந்திடும் என்று சொல்ல முடியாது என்பதால் இதில் ரிஸ்க் அதிகம்.

இதைத் தவிர நீங்கள் காப்பர் டீ பயன்படுத்தலாம். இதுவும் நீண்ட காலம் குழந்தை பிறப்பை தள்ளிப் போட நினைப்பவர்களுக்கு மட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Birth Control methods

Types Of Birth Control methods
Story first published: Tuesday, January 2, 2018, 16:20 [IST]