Just In
- 2 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 5 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 5 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 9 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Finance
சரிவில் தொழில் துறை உற்பத்தி..! தேங்கிக் கிடக்கும் பொருளாதாரம்..!
- News
உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Movies
"பேப்பர் பாய்" பூஜை போட்டாச்சு.. படப்பிடிப்பு ஆரம்பம்
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கர்ப்ப காலத்தில் ஏன் இங்க அரிச்சா என்ன அர்த்தம்?... எப்படி சரி பண்ணலாம்...
கர்ப்ப காலம் என்பது நிறைகள் குறைகள் நிறைந்த சந்தோஷமான தருணமாகும். இந்த மாதிரியான காலங்களில் ஒரு பெண் நிறைய உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். அதில் மிக முக்கியமான விஷயம் தான் இந்த அரிப்பு தொல்லை.
வயிற்றில் வளரும் குழந்தையால் அதிகமான இரத்த ஓட்டம் மற்றும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றத்தால் இது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடும். குழந்தையை சுமக்கும் அதே சமயத்தில் இது போன்ற அரிப்புகளையும் பெண்கள் தாங்க வேண்டிய நிலை உள்ளது. கவலையை விடுங்க. கருவுற்ற பெண்கள் இந்த அரிப்பு பிரச்சினையிலிருந்து விடுபட இந்த எளிய வீட்டு முறைகளை கையாண்டலே போதும்.

விளைவுகள்
கர்ப்ப காலத்தில் அரிப்பு கீழ்க்கண்ட காரணங்களால் ஏற்படுகிறது.
சருமத்தில் அதிகமான இரத்த ஓட்டம் செல்லுவதால்
தோல் விரிவடைவதால்
கர்ப்ப கால தழும்புகள் அதிகரிப்பதால்
ஹார்மோன் மாற்றம்
வயிற்றில் தழும்புகள் மற்றும் சரும தடிப்புகள் உண்டாவதால்
சரும வடுக்கள் உடம்பு முழுவதும் தோன்றுதல்
கட்டுப்பாடற்ற தீவிர அரிப்பு இன்ஹெஹ்பேடிக் கொலோஸ்டாசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது கல்லீரல் பாதிப்பை குறிக்கிறது.
எனவே இந்த மாதிரியான பிரச்சினையிலிருந்து தப்பிக்க சில எளிய வீட்டு டிப்ஸ்களை கையாளுங்கள்.

ஓட்ஸ் பாத்
தேவையான பொருட்கள்
1 கப் ஓட்ஸ்
தண்ணீர்
செய்முறை
ஒரு டப் நிறைய நீரில் ஓட்ஸ்யை கலந்து கொள்ளவும். 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதே நேரத்தில் ஒரு துணியில் கொஞ்சம் ஓட்ஸ்யை கட்டி தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். பிறகு அந்த தண்ணீரில் குளியுங்கள்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை தினசரி செய்து வரவும்
வேலை செய்யும் விதம்
ஓட்ஸில் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ப்யூரிட்டிக் பொருட்கள் உள்ளன. இவை உங்கள் சருமத்தில் உள்ள அரிப்பை போக்கி நிவாரணம் அளிக்கும்.

தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்
சுத்தமான தேங்காய் எண்ணெய்
செய்முறை
பாதிக்கப்பட்ட சருமத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை உங்கள் உள்ளங்கைகளில் எடுத்து தடவுங்கள்
இதை இரவு முழுவதும் அல்லது 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
ஒரு நாளைக்கு ஒரு முறை என பயன்படுத்தி வாருங்கள்.
வேலை செய்யும் விதம்
இதில் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இதிலுள்ள ஈரப்பதம் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி அரிப்பை போக்குகிறது. செரோசிஸ் போன்றவற்றை சரி செய்கிறது.

கற்றாழை ஜெல்
தேவையான பொருட்கள்
போதுமான அளவு கற்றாழை ஜெல்
செய்முறை
பாதிக்கப்பட்ட சருமத்தில் கற்றாழை ஜெல்லை தடவுங்கள்
இதை 20-30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு தண்ணீரில் கழுவி ஒரு துண்டை கொண்டு நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை தினமும் 2-3 தடவை செய்ய வேண்டும்.
வேலை செய்யும் விதம்
சரும தொற்றுகள் மற்றும் சரும பிரச்சினைகளை போக்க பழங்காலம் தொட்டே பயன்படுத்தி வந்தது தான் இந்த கற்றாழை. இதில் பைட்டோ பொருட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை இருப்பதால் அரிப்புக்கு மருந்தாக செயல்படுகிறது.

பேக்கிங் சோடா குளியல்
தேவையான பொருட்கள்
1 கப் பேக்கிங் சோடா
தண்ணீர்
செய்முறை
ஒரு டப் தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து கொள்ளவும்
அதில் 20-30 நிமிடங்கள் உங்கள் உடலை ஊற வைக்கவும்
பிறகு துண்டை கொண்டு உலர்த்தி கொள்ளவும்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
தினமும் ஒரு முறை செய்யவும்
வேலை செய்யும் விதம்
பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலைன் தன்மை நமது சருமத்தின் pH அளவை சமநிலையாக்குகிறது. எனவே இது அரிப்பை போக்குகிறது.
எஸன்ஷியல் ஆயில்

ரோஸ் செரனியம் ஆயில்
தேவையான பொருட்கள்
12 சொட்டுகள் ரோஸ் செரனியம் ஆயில்
30 ml தேங்காய் எண்ணெய்
செய்முறை
12 சொட்டுகள் ரோஸ் செரனியம் ஆயில் மற்றும் 30 மில்லி தேங்காய் எண்ணெய் இவற்றை கலந்து கொள்ளவும்.
நன்றாக கலந்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும்
அப்படியே 30-60 நிமிடங்கள் விட்டு விட்டு பிறகு தண்ணீரில் அலசுங்கள்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை ஒரு நாளைக்கு 1-2 முறை செய்யவும்
வேலை செய்யும் விதம்
இதிலுள்ள ஆன்டி அழற்சி பொருள் சருமத்தில் ஏற்படும் அரிப்பிற்கு எதிராக செயல்படுகிறது.

ஜூனிபெர் ஆயில்
தேவையான பொருட்கள்
12 சொட்டுகள் ஜூனிபெர் ஆயில்
30 மில்லி தேங்காய் எண்ணெய்
செய்முறை
12 சொட்டுகள் ஜூனிபெர் ஆயில் மற்றும் 30 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்
பாதிக்கப்பட்ட சருமத்தில் இதை தடவிக் கொள்ளவும்
30-60 நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவவும்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
தினமும் 1-2 தடவை செய்யவும்
வேலை செய்யும் விதம்
இதிலுள்ள சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பொருள் சருமத்தில் உள்ள அரிப்பை போக்குவதோடு அழற்சி மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.

ஐஸ் ஒத்தடம்
தேவையான பொருட்கள்
ஐஸ் கட்டிகள்
பயன்படுத்தும் முறை
பாதிக்கப்பட்ட இடத்தில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கவும்
5 நிமிடங்கள் அப்படியே வைத்து இருந்து பிறகு சில நிமிடங்கள் கழித்து 3 முறை மறுபடியும் செய்யவும்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
ஒரு நாளைக்கு 3 தடவை செய்யவும்
வேலை செய்யும் விதம்
ஐஸ் கட்டியின் குளு குளு தன்மை அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைத்து நல்ல ரிலாக்ஸ் கொடுக்கும்.

லெமன் ஜூஸ்
தேவையான பொருட்கள்
1 லெமன்
1/4 கப் தண்ணீர்
காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு லெமனை நன்றாக பிழிந்து அதில் 1/4 பங்கு அளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும்.
20-30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு தண்ணீரில் கழுவவும்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் என இதை செய்யவும்.
வேலை செய்யும் விதம்
இந்த லெமன் ஜூஸில் சிட்ரிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இதன் அமிலத்தன்மை நமது சருமத்தின் pH அளவை சரி செய்கிறது. எனவே இவை அரிப்பு மற்றும் அழற்சியை போக்குகிறது.

டான்டெலியன் ரூட்
தேவையான பொருட்கள்
1-2 டேபிள் ஸ்பூன் டான்டெலியன் ரூட் சாறு
1 கப் தண்ணீர்
காட்டன் பஞ்சு
செய்முறை
ஒரு கப் தண்ணீரில் 1-2 டேபிள் ஸ்பூன் டான்டெலியன் சாறை கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் இதை ஊற்றி சூடுபடுத்தவும்.
5நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து பிறகு வடிகட்டி கொள்ளவும்
பிறகு ஆறியதும் இதில் காட்டன் பஞ்சை நனைத்து கொள்ளுங்கள்
அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை தினமும் 2-3 முறை செய்யவும்.
வேலை செய்யும் விதம்
டான்டெலியன் ரூட் ஒரு அல்கலைன் தன்மை வாய்ந்தது. இவை அழற்சியை போக்கி சருமத்தின் pH அளவை சமமாக வைக்கிறது. டான்டெலியன் ரூட்டில் உள்ள கரோட்டினாய்டு ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கும்.

கடலை மாவு பேஸ்ட்
தேவையான பொருட்கள்
1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
யோகார்ட் (தேவையான அளவு)
பயன்படுத்தும் முறை
யோகார்ட் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
மிதமான பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலவ விடவும்
பிறகு 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை தினமும் ஒரு முறை என பயன்படுத்தி வரவும்.
வேலை செய்யும் விதம்
கடலை மாவு சரும அழற்சி மற்றும் அரிப்பு போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை இந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுபட உதவும்.

ஜூனிபெர் பெரி லோசன்
தேவையான பொருட்கள்
ஜூனிபெர் பெரி லோசன் (தேவையான அளவு)
பயன்படுத்தும் முறை
பாதிக்கப்பட்ட சருமத்தில் இந்த லோசனை தடவவும்
பின்பற்ற வேண்டிய நாட்கள்
இதை தினமும் 1-2 தடவை செய்யவும்
வேலை செய்யும் விதம்
இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் அரிப்பை போக்குகிறது.

கேலோமைன் லோசன்
தேவையான பொருட்கள்
கேலோமைன் லோசன் (தேவையான அளவு)
பயன்படுத்தும் முறை
கொஞ்சம் இந்த லோசனை கையில் எடுத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் நன்கு தடவ வேண்டும்.
பின்பற்ற வேண்டிய நாட்கள்
ஒரு நாளைக்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
வேலை செய்யும் விதம்
இதில் ஜிங்க் ஆக்ஸைடு மற்றும் பெர்ரிக் ஆக்ஸைடு உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பு பாதிப்பை போக்குகிறது. இந்த வீட்டு முறைகளோடு கீழ்க்காணும் டிப்ஸ்களை யும் பின்பற்றி வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

செய்ய வேண்டியவை
உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் போதிய ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். நறுமணம் இல்லாத சோப்பு மற்றும் லோசன்களை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் சரும பிரச்சினையை தீவிரமாக்கி விடும். சூடான நீரில் குளிப்பதை தவிருங்கள். இது சருமத்தை வறட்சியாக்கி இன்னும் நிலைமை மோசமாக்கி விடும்.
சோப்பு மற்றும் சாம்பு உடம்பில் தங்காமல் நன்றாக தேய்த்து குளியுங்கள்.
மென்மையான துண்டை கொண்டு உலர்த்துங்கள். காற்றோட்டமான லேசான ஆடைகளை அணியுங்கள். தேய்த்து குளிக்க ஸ்பான்ச்யை அதிகமாக பயன்படுத்தாதீர்கள்.
துணிகளை துவைக்க கொஞ்சமாக டிடர்ஜெண்ட் பயன்படுத்துங்கள். சூரிய ஒளியில் வெளியே செல்லுவதை தவிருங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்
ஈரமான துணிகளை ரெம்ப நேரம் அணியாதீர்கள். இது பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும்.
செயற்கை குளுரூட்டும் அறையில் நீண்ட நேரம் இருக்காதீர்கள். இது உங்கள் சருமத்தை மேலும் வறட்சியாக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி வாருங்கள். கண்டிப்பாக கர்ப்ப கால அரிப்பு பிரச்சினையிலிருந்து நல்ல பலன் கிடைக்கும்.