உங்களுக்கு ஆண் குழந்தை இருக்கா? நீங்க முதல்ல சொல்லி தர்ற விஷயம் இதுவாத்தான் இருக்கணும்!!

Posted By: Aashika
Subscribe to Boldsky

பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளில் எல்லாம் குற்றம் சுமத்தப்படுவது பெண்கள் என்றால் இன்னொருபக்கம் ஆண் என்றாலே வில்லன் மாதிரியான மனோபாவம் இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு சேவை செய்பவள்,உனக்கு கீழ் தான் அவள் என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்தது, அவன் வாழ்ந்த சூழல் எல்லாமே

Tips To Develop Your Son As a Hero

அப்படித்தான் இருந்தது. வளர்ந்த பிறகு திடீரென பெண்ணை உனக்கு சமமாய் மதிக்க வேண்டும், அவளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். சிறுவயதிலேருந்தே ஆண் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதற்கான சூழலை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். ஆண் பெண் சமத்துவத்திற்கு ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொ டுக்க வேண்டியவை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன்றாய் விளையாடட்டும் :

ஒன்றாய் விளையாடட்டும் :

குழந்தை பருவத்தில் அவர்கள் கவனம் விளையாட்டில் தான் இருக்கும். ஆண் பெண் குழந்தைகளை ஒன்றாக விளையாட விடுங்கள்.

பெண் பிள்ளை வீட்டிற்குள்ளே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுக்களையும்,ஆண்பிள்ளையை ஓடியாடி விளையாடும் விளையாட்டுக்களையும் விளையாட ஊக்கப்படுத்தாதீர்கள்.

ஆண்குழந்தைகளுக்கும் பார்பி பொம்மை பிடிப்பதில்,அதை வைத்து விளையாடுவதில் தவறேதும் இல்லை.

அழ அனுமதியுங்கள் :

அழ அனுமதியுங்கள் :

ஆண் குழந்தைகள் குறிப்பிட்ட வயது வரை தான் அழ முடிகிறது. அதற்கு பிறகு அவன் மீது ஆண் என்ற முள் க்ரீடத்தைதூக்கி வைத்துவிடுகிறீர்கள் அவனும் அழ மறந்து விடுகிறான்.

நீ ஆண், ஆண் அழக்கூடாது என்று எச்சரிக்கைசெய்வதோ, ஆம்பளப்புள்ள எங்கயாவது அழுவாங்களா என்று கேட்டு கிண்டலடிப்பதோ செய்யாமல் அழஅனுமதியுங்கள்.

மனதில் ஏற்படும் சங்கடங்களை அழுகையின் மூலம் வெளிப்படுத்தாமல் இருப்பது பிற்காலத்தில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும்.

வீட்டில் சமமான வேலை வாங்குங்கள் :

வீட்டில் சமமான வேலை வாங்குங்கள் :

ஆண் குழந்தையோ பெண்குழந்தையோ வீட்டு வேலைகளை சமமாக கொடுங்கள். முன்னதாக ஆண்குழந்தைகளைகிட்சனுக்குள் அனுமதியுங்கள்.

வீடு கூட்டுவது,பாத்திரம் கழுவுவது எல்லாம் பெண்களுக்குத் தான் என்று ஒதுக்காமல்ஆண் குழந்தைகளையும் அந்த வேலைகளில் பங்கு பெற வையுங்கள்.

விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதியுங்கள் :

விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதியுங்கள் :

ஆண் குழந்தையின் விருப்பமறிந்து அந்தந்த பொருட்களை வாங்கி கொடுங்கள். பெண் குழந்தையென்றால் கிட்சன்செட்டும், ஆண் குழந்தை என்றால் ரிமோட் காரும் பரிசளிப்பதைப் போல நீங்களாகவே அவரது விருப்பங்களை தேர்ந்தெடுப்பதை கைவிடுங்கள்.

தன்னுடையே தேவையை நிறைவேற்ற பழகுங்கள் :

தன்னுடையே தேவையை நிறைவேற்ற பழகுங்கள் :

தன் அறையை சுத்தம் செய்வது, தான் சாப்பிட்ட தட்டுக்களை கழுவுவது போன்ற சின்ன சின்ன வேலைகளை ஆண்குழந்தைகளை செய்ய அனுமதியுங்கள். அதை பழக்கப்படுத்துங்கள்.

உதவி செய்ய வலியுறுத்துங்கள் :

உதவி செய்ய வலியுறுத்துங்கள் :

தனக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் உதவி செய்வதை உற்சாகப்படுத்துங்கள். அது வீட்டு வேலையாக இருந்தாலும் சரி,சமையல் வேலையாக இருந்தாலும் சரி இன்னொருவரின் கஷ்டத்தில் பங்கெடுப்பதால் அந்த சூழலை சமாளிக்க அவர்களுக்கு பழக்கமாகும்.

நட்பு பாராட்டுங்கள் :

நட்பு பாராட்டுங்கள் :

மிக முக்கியமாக பள்ளியில் பெண் தோழிகள் இருந்தால், அதை ஊக்கப்படுத்துங்கள். பெண் குழந்தைகளிடம்சேரக்கூடாது, பேசக்கூடாது என்று மிரட்டி வைக்காதீர்கள். அதே போல பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளிடம் பேச விடுங்கள் ஆண்-பெண் சமம் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் தூவுங்கள்.

விருப்பங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள் :

விருப்பங்களை ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள் :

இன்னொருவரின் மனம் அறிந்து செயல்படும் விதமாக, இன்னொருவரின் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுக்க கற்றுக்கொடுங்கள். சுயநலமாக தன்னைப் பற்றி மட்டும் சிந்திப்பதை தவிர்த்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் சிந்திக்க வழிவகையாக அமையும்.

கண்டியுங்கள் :

கண்டியுங்கள் :

பெண் குழந்தைகளை திட்டும் போதோ,அவர்களை மரியாதைக்குறைவாக நடத்தினாலோ கண்டியுங்கள்.

உன்னைப்போலவே தான் அவளும் என்பதை ஆண் குழந்தையிடம் புரிய வையுங்கள்.

தரக்குறைவாக பேசாதீர்கள் :

தரக்குறைவாக பேசாதீர்கள் :

ஆண் குழந்தை இருக்கும் போது பெண்கள் குறித்த கீழ்த்தரமான டயலாக்குகளை பேசுவது, அவர்களை விமர்சித்து திட்டுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். இப்படிச் செய்தால் அது ஆண்களின் மனதில் பெண்கள் மீதான மதிப்பை குறைத்திடும்.

ஆண்களை கொண்டாடுங்கள் :

ஆண்களை கொண்டாடுங்கள் :

ஆண் குழந்தை... என்று சொல்லி, சொல்லியே அவர்கள் மீது பொறுப்புகளை திணிக்காமல் அவர்களை கொண்டாடுங்கள். நீ ஆண் பலசாலி,தைரியசாலி என்று அவன் மீது பெரும் பொறுப்புகளை திணிப்பதை தவிருங்கள்.குழந்தை பருவத்தை ரசிக்கட்டும். கொண்டாட்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Develop Your Son As a Hero

Tips For who have a baby boy
Story first published: Saturday, July 22, 2017, 13:30 [IST]