தலைசிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்களா? அதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

இந்த உலகத்தில் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தது யார் என கேட்டால், அம்மா என்று தான் சொல்வோம். நமது அம்மாவை போல அன்பு, கருணை, பாசத்துடன் நம்மை யாராலும் கவனித்துக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியாது என்பது உண்மை. குழந்தை பருவம், இளமை பருவம் எல்லாம் தாண்டி, நீங்களும் ஒரு தாயாக போகிறீர்களா? அப்படி என்றால் ஒரு சிறந்த தாயாக இருக்க உங்களிடம் என்னென்ன குணாதிசயங்கள் எல்லாம் இருக்க வேண்டும் என்று இந்த பகுதியில் காணலாம்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. பொருமை

1. பொருமை

தாயாக இருக்க முதலில் பொருமை மிகவும் அவசியம். இதை நாம் நமது அம்மாவிடத்தில் உணர்ந்திருக்க கூடும். நாம் எத்தனை தவறுகளை செய்தாலும் அவர் பொருமையாக நம்மை வழிநடத்துவார். அதே பொருமை உங்களிடத்திலும் இருக்க வேண்டும். குழந்தைகள் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கும், பால், தண்ணீர் ஆகியவற்றை கொட்டி விட்டு உங்களுக்கு வேலை கொடுக்கும். இது போன்ற சமயங்களில் நீங்கள் பொருமையாக செயல்பட வேண்டியது அவசியம்.

2. கேட்கும் திறன்

2. கேட்கும் திறன்

குழந்தைகள் தங்களது பெற்றோரிடம் தான் அதிகமாக தங்களது விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்கிறார்கள். ஏன் நாம் கூட அவ்வாறு தான் இருந்திருப்போம், இருக்கிறோம். உங்கள் குழந்தைகளுக்கு எந்த வயதாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க பழகிக்கொள்ளுங்கள். அவர்கள் கூறும் விஷயங்களுக்கு உங்களால் முடிந்த அளவு ஆலோசனை கூறுங்கள். அவர்களை ஊக்குவியுங்கள்.

3. புரிந்து கொள்ளுதல்

3. புரிந்து கொள்ளுதல்

உங்கள் குழந்தைகள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் வெறுமனே கேட்பதில் பயனில்லை. எனவே உங்களது குழந்தைகளின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் பேச்சில் உள்ள கவலை, சோகம், மகிழ்ச்சி போன்றவற்றை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் தங்களது பள்ளி, கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி கூறினால், அதை உங்களது குழந்தையின் நிலையிலிருந்து யோசித்து புரிந்து செயல்படுங்கள்.

4. நிலைப்புத்தன்மை

4. நிலைப்புத்தன்மை

குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். அடிக்கடி உங்களது திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மாற்றிக்கொள்ளுதல் கூடாது. இரண்டாவது குழந்தை பிறந்தால் முதல் குழந்தையின் மீதான அன்பு குறைதல் என்பதும் கூடாது. என்றும் ஒரே மனநிலையுடன் செயல்பட பழகிக்கொள்ளுங்கள்.

5. செயல்படுகளை புரிந்து கொள்ளுங்கள்

5. செயல்படுகளை புரிந்து கொள்ளுங்கள்

குழந்தைகள் அழுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குழந்தைகளால் அவற்றை வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. எனவே நீங்கள் தான் குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும். டயப்பர் மாற்ற வேண்டுமாக இருக்கலாம், பசியாக இருக்கலாம், ஏதேனும் பூச்சிகள் கடித்திருக்கலாம் குழந்தைகள் அழுவதற்கு என்ன காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். பிறந்த குழந்தைகள் மட்டுமல்ல சில வளர்ந்த குழந்தைகளுக்கு கூட தனது அழுகைக்கான காரணம் தெரியாது.

6. அன்பை வெளிப்படுத்துதல்

6. அன்பை வெளிப்படுத்துதல்

தாயின் அன்பை விட பெரிதாக ஒரு குழந்தைக்கு வேறு எதுவும் கிடைத்துவிட முடியாது. மேலே குறிப்பிட்டுள்ளவைகளை செய்வதை காட்டிலும் குழந்தைகள் மீது அன்பு செலுத்துவது முக்கியமானது. உங்களால் முடிந்த அளவு அன்பை உங்கள் குழந்தைகள் மீது செலுத்துங்கள். அது உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் பாதுக்காப்பு உணர்வையும் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to be a Great Parents

How to be a Great Parents
Story first published: Friday, June 30, 2017, 14:00 [IST]