ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த 65 வயது பாட்டி!

Posted By:
Subscribe to Boldsky

அன்னாக்ரெட் ரவுனிங்க், இவர் ஒரு ஜெர்மன் ஆசிரியர். இவர் நான்கு குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்து மருத்துவர்களை ஆச்சரியப்படுதியுள்ளார். இவருக்கு இந்த பிரசவத்தில் மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இவருக்கு ஏற்கெனவே முந்தைய கணவர்களுக்கு பிறந்த 13 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு குட்டி சுட்டீஸ் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் பிறந்துள்ளனர்.

Cover Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அன்னாக்ரெட் ரவுனிங்க்!

குடும்பத்தினர் அதிருப்தி!

குடும்பத்தினர் அதிருப்தி!

அன்னாக்ரெட் ரவுனிங்க் ஐவிஎஃப் சிகிச்சை மூலம் கருத்தரிக்க முடிவு செய்த போது இவரது குடும்பத்தினர் சுயநலமாக அன்னாக்ரெட் ரவுனிங்க் முடிவெடுக்கிறார் என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அவர்கள் குழந்தைகளை பராமரிக்க உதவ முடியாது என்றும் கூறினார்.

பத்து வயதான அன்னாக்ரெட் ரவுனிங்க்-ன் இளைய மகள் தான், தான் விளையாட தம்பி - தங்கைகள் வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்.

குறை பிரசவம்!

குறை பிரசவம்!

அன்னாக்ரெட் ரவுனிங்க்-கு சிசேரியன் செய்யப்பட்டு ஆறரை மாதத்திலேயே நான்கு குழந்தைகளும் குறை பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டனர். நான்கு குழந்தைகளும் எடை குறைவாக தான் இருந்தனர். இன்குபெஷன்-ல் ஒருவாரம் வைக்கப்பட்டனர். குழந்தைகள் வியக்கும் வகையில் வளர்ச்சி அடைந்ததால் இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்கள் மறுப்பு!

மருத்துவர்கள் மறுப்பு!

இவரது வயதை சுட்டிக்காட்டி பல மருத்துவர்கள் இவர் ஐவிஎஃப் முறையில் கருத்தரிக்க மறுப்பு தெரிவித்தனர். பிறகு அன்னாக்ரெட் ரவுனிங்க் ஜெர்மனியில் இருந்து பயணித்து, உக்ரைன் சென்று அங்குள்ள மருத்துவர்கள் உதவியில் குழந்தை பெற்றுள்ளார்.

கவலை இல்லை!

கவலை இல்லை!

மற்றவர் விமர்சனங்களை தள்ளி வைத்து, 65 வயதில் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்து சாதனை தாயாக திகழ்கிறார் அன்னாக்ரெட் ரவுனிங்க். குழந்தைகள் மீது அதிக அக்கறை மற்றும் அன்பு செலுத்தி வருகிறார் அன்னாக்ரெட் ரவுனிங்க்.

இதில் எனக்கு எந்த சுயநலமும், ஈகோவும் கிடையாது. எனக்கு குழந்தைகள் பிடிக்கும் அவ்வளவு தான். எனது மற்ற பிள்ளைகளை போன்று தான் இவர்களையும் பார்க்கிறேன் என கூறுகிறார் அன்னாக்ரெட் ரவுனிங்க்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

You Will Not Believe Who Are The Parents Of Quadruplets

You Will Not Believe Who Are The Parents Of Quadruplets
Please Wait while comments are loading...
Subscribe Newsletter