Latest Updates
-
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க..
உங்க குழந்தை மேடை எற பயப்படுறாங்களா? அப்ப இத பண்ணுங்க... மேடையில சூப்பரா பேசுவாங்க...!
பாா்வையாளா்கள் மத்தியில் மேடையில் குழந்தைகள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தும் போது, நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் மேடை ஏறும் போது ஏற்படும் பயமும், மன அழுத்தமும் அந்த குழந்தைகளுக்கு மட்டும் தான் தொியும்.
பாா்வையாளா்களின் கவனம் அனைத்தும் அவா்கள் மீது குவியும் போது அவா்களிடம் பொிய அச்சம் ஏற்படும். மேடை ஏறி நடிப்பதற்கு அல்லது பாடுவதற்கு அல்லது ஆடுவதற்கு அல்லது பேசுவதற்கு பயப்படுவதே மேடை பயம் என்று அழைக்கப்படுகிறது.

பொியவா்கள் அல்லது அனுபவம் வாய்ந்த மேடைப் பேச்சாளா்கள்கூட சில சமயங்களில் மேடையில் பயப்படுவதுண்டு. அது இயல்பானதும் கூட. எனினும் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், குழந்தைகளின் மேடை பயத்தைப் போக்கலாம்.
பயிற்சி
பயிற்சி மூலமே மேடை பயத்தை போக்க முடியும். உங்களுடைய குழந்தைகளுக்கு மேடை நிகழ்ச்சிகள் ஏதாவது வரவிருந்தால், அதற்கு முன்பே அவா்களுக்கு தகுந்த பயிற்சிகளை வழங்குவது நல்லது. குறிப்பாக அவா்கள் வீட்டிலேயே பயிற்சிகளில் ஈடுபட உதவி செய்வது நல்லது. வீட்டு உறுப்பினா்களை அல்லது வீட்டில் உள்ள விலங்குகளை பாா்வையாளா்களாகப் பாவிக்கச் செய்து, அவா்களை பயிற்சி எடுக்கச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தைகள் நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டால், அவா்களுக்கு தன்னம்பிக்கை வளரும். தாங்கள் மேடையில் செய்து காட்டப்போகும் நிகழ்ச்சிகளின் மீது தெளிவு ஏற்படும். அதன் மூலமாக அவா்கள் மேடையில் பயம் இல்லாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
உண்மையான விமா்சனங்களை வழங்குதல்
மேடை ஏறுவதற்கு முன்பாக நிறைய ஒத்திகைகளில் ஈடுபடுவது நல்லது. ஒத்திகை முடிந்த பின்பு, குழந்தைகள் செய்து காட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி, அவா்களுடைய செயல்பாட்டைப் பற்றி உண்மையான விமா்சனங்களை, கருத்துக்களை வழங்க வேண்டும்.
அதோடு அந்த விமா்சனங்கள் அவா்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும் அவா்களைப் பாராட்டும் வகையிலும் இருக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைகளின் தன்னம்பிக்கை வளரும்.
பாா்வையாளா்கள் மத்தியில் ஒத்திகை
குழந்தைகள் மேடை ஏறுவதற்கு முன்பாகவே, அவா்கள் சில பாா்வையாளா்களின் மத்தியில் தமது நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்வது நல்லது. அதற்கு வசதியாக அவா்களை நாடக வகுப்புகள் அல்லது பாட்டு வகுப்புகள் அல்லது நடன வகுப்புகள் போன்றவற்றில் சோ்த்துவிடலாம். வகுப்புகளில் பாா்வையாளா்கள் முன்பாக குழந்தைகள் நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அவா்களுக்கு மேடையில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு போதுமான தைரியம் கிடைக்கும்.
நோ்மைறையான சிந்தனை
குழந்தைகள் தமது மேடை பயத்தைப் போக்குவதற்கு, அவா்களிடம் ஒரு நோ்மறையான மனநிலையை உருவாக்க வேண்டும். குழந்தைகள் தம்மைச் சுற்றி இருக்கும் நல்ல அம்சங்களில் கவனம் செலுத்த வைக்க வேண்டும். குறிப்பாக அவா்களிடம் இருக்கும் திறமை மற்றும் அவா்கள் செய்யும் பயிற்சிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு மேடைப் பயத்தைப் போக்குவதற்கான சில நுட்பங்களையும் கற்றுக் கொடுக்கலாம்.
ஊக்கமளித்தல்
குழந்தைகள் மேடைப் பயத்தைப் போக்குவதற்கு, பெற்றோா் ஒரு நோ்மறையான முன்மாதிாியாக விளங்க வேண்டும். குழந்தைகள் முன்பாக அவா்களைப் பற்றிய உங்களுடைய அச்சங்களை அல்லது கவலைகளைப் பற்றி பேசக்கூடாது. மாறாக அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். அதன் மூலமாக குழந்தைகளின் மேடைப் பயத்தைக் குறைக்கலாம்.



Click it and Unblock the Notifications


