Latest Updates
-
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்!
வயசான உங்க அப்பா அம்மாவை... ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் எப்படி பாத்துக்கணும் தெரியுமா?
நீங்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது, உங்கள் பெற்றோர் உங்களை பாதுகாப்பாகவும் மிகவும் அன்பாகவும் கவனித்திருந்திருப்பார்கள். உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அவர்கள் பார்த்து பார்த்து செய்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு வயதாகும்போது நீங்கள் உங்கள் பெற்றோரை அதேபோல கவனித்துக்கொள்கிறீர்களா?
வயதான காலத்திலும் உங்கள் பெற்றோர், உங்களுக்கு ஆதரவாக எப்போதும் இருப்பார்கள். பிஸியான வாழ்க்கையில் பெரும்பாலான பிள்ளைகள் செய்யும் தவறு, பெற்றோருக்கு வயதாகிவிட்டதால், கூடுதல் ஆதரவும் கவனிப்பும் தேவைப்படும் என்பதை உணருவதில்லை. சில சமயங்களில், மற்ற கவலைகள் அதிக அழுத்தமாக உணர வைக்கின்றதால், பெற்றோரின் கவலைகளை நாம் மறந்து விடுகிறோம்.

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் பெற்றோரின் நல்வாழ்வை எப்போதும் அறிந்திருக்க வேண்டும். உங்கள் பெற்றோரை அவர்கள் உங்களுக்காகச் செய்ததைப் போலவே நீங்கள் அவர்களைக் கவனித்து கொள்ள விரும்பினால், இது உங்களுக்கானது. பெற்றோரின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கான வழிகளைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கான வழிகள்
உங்கள் பெற்றோருக்கு வயதாகும்போது, அவர்களுக்கு உங்கள் ஆதரவு கண்டிப்பாக தேவைப்படும். கணிசமான வழிகளில் அவர்களுக்கு உதவுவது உங்களுக்கு கடினமாக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கையில் சிறிய விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள ஆரம்பிக்கலாம். உங்கள் பெற்றோருக்காக சில பொறுப்புகளை நீங்கள் சுமக்க வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை
சத்தான உணவு சாப்பிடுவது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை தினமும் பின்பற்ற வைக்க வேண்டும். அதேபோல, அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது புகைபிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்.
வயதான காலத்தில் அவர்களின் உடல் பருமனை தடுக்க இந்த டிப்ஸ்களை அவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் வாழ்க்கையின் கடைசி நாட்களில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உங்கள் பெற்றோர் சிறப்பாகச் செயல்பட நீங்கள் ஊக்குவிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான முதுமையைப் பெற அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த தொடங்கலாம்.
வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளுங்கள்
உங்கள் பெற்றோர் எவ்வளவு ஆரோக்கியமாகத் தோன்றினாலும், எந்த அறிகுறியும் இல்லாமல் சில நோய்கள் அவர்களின் உடலில் தோன்ற வாய்ப்புள்ளது. மேலும், வயதாகும்போது, உடலில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களை இழக்க நேரிடலாம்.
எனவே, உங்கள் வயதான பெற்றோர் ஆரோக்கியமாக இருப்பதையும், ஏதேனும் உடல்நல சிக்கல்கள் இருந்தால், அதை முன்கூட்டியே கண்டறியப்படுவதையும் உறுதிசெய்யுங்கள். இதற்கு அவர்களின் மருத்துவர்களுடன் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வையுங்கள்.
மருந்துகளை எடுத்துக்கொள்ள உதவுங்கள்
நம் பெற்றோர்களுக்கு அதிக வயதாகும்போது, பல சமயங்களில் அவர்களின் நினைவாற்றல் குறையலாம். இதற்காக அவர்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டால், மருந்தின் அளவைக் கண்காணிப்பதற்கும், அவர்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதற்கும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இது நமக்கான முக்கிய பொறுப்பு.
உணர்ச்சிபூர்வமான ஆதரவைக் கொடுங்கள்
பெற்றோர்களுக்கு வயதாகும்போது, சில சமயங்களில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். மேலும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு அவர்களுக்கு எப்போதும் மிகவும் உதவியாக இருக்கும். அவர்களின் கவலைகளைக் கேட்டு, அவர்களுக்கு ஊக்கம் மற்றும் நேர்மறையான கருத்துக்களை வழங்க வேண்டும். ஏனெனில், பெற்றோர்களுக்கு வயதாகும்போது, அவர்கள் தனித்துவிடப்பட்டதாக நினைத்துக்கொள்ளலாம்.
சமூகமயமாக்கலை ஊக்குவிக்கவும்
பெற்றோர்கள் பொதுவாக தங்கள் வாழ்க்கையின் கடைசி சில வருடங்களை எந்த சிரமும் இல்லாமல் மகிழ்ச்சியாக கழிக்க பொறுப்புகளை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் சுதந்திரமாக மாறும்போது, அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். உங்கள் பெற்றோரை அவர்களின் நண்பர்களுடன் பழகவும், அவர்கள் ரசிக்கும் செயல்களில் பங்கேற்கவும் ஊக்கப்படுத்துங்கள்.
நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க சமூகமயமாக்கல் மிகவும் முக்கியமானது. மேலும், உங்கள் பெற்றோரின் மனதைக் கூர்மையாக வைத்திருக்க உதவும் மனரீதியாகத் தூண்டும் செயல்களில் அவர்களை ஈடுபட வையுங்கள். புதிர்கள், விளையாட்டுகள் அல்லது வாசிப்பு போன்றவற்றை நீங்கள் செய்ய வைக்கலாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வயதாகும்போது, உங்கள் பெற்றோர்களின் உடல் செயல்பாடும் மற்றும் கவனம் செலுத்துவது குறையத்தொடங்கும். இதனால், உங்கள் வீடு பாதுகாப்பாகவும், ஆபத்துகள் அற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். உங்கள் பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுவது எளிதல்ல. இருப்பினும், அது எப்போதும் மதிப்புக்குரியதாக இருக்கும். இது ஒரு நல்ல பிள்ளை மற்றும் மனிதனின் கடமையாகும்.



Click it and Unblock the Notifications














