Latest Updates
-
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளதால் நவம்பர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் -
5 முட்டை இருந்தா இந்த ஆப்கானி முட்டை மசாலாவை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடற டேஸ்ட்ல இருக்கும் -
ஆயுத பூஜைக்கு இப்படி சுண்டல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வெளிப்படையானவர்களாக இருப்பார்களாம் - இவங்க வாயில பொய் வரது ரொம்ப கஷ்டம்
சுகப்பிரசவத்தை விரும்பும் பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த எளிய உடற்பயிற்சியை அவசியம் செய்யணுமாம்...மறந்துறாதீங்க
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி அவசியம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் உடற்பயிற்சி செய்யும் போது எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் உள்ளன, ஏனெனில் அவர்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தைக்கும் பொருந்தாத விஷயங்களைச் செய்யக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் அதிக உடல் உழைப்பு தேவைப்படும் அல்லது அதிக எடை தூக்குதல் அல்லது மிகவும் கடினமான உடற்பயிற்சியை தவிர்ப்பது முக்கியம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், யோகாவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்யக்கூடிய பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான உடற்பயிற்சி எதுவென்றால் அது நடைப்பயிற்சிதான். சுறுசுறுப்பாக இருக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நடைபயிற்சி ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் இது குறைந்த தாக்கம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சி போன்றது.

நடைபயிற்சி உங்கள் உடலை கஷ்டப்படுத்தாது மற்றும் கருவுற்ற மூன்று மாதங்களில் அதை எளிதாக செய்யலாம். நடைப்பயிற்சியில் இருக்கும் மற்றுமொரு நன்மை இது பேசுவதற்கு அனுமதிக்கிறது. எனவே, ஒரு பெண் உடற்பயிற்சி செய்யும் போது, அவரால் பேச முடியும் மற்றும் நன்றாக மூச்சு விடலாம். எனவே அவர்கள் வசதியாக உணரும்வரை அவர்கள் நடக்கலாம். அதுமட்டுமின்றி நடைபயிற்சி பல நன்மைகளையும் கொண்டுள்ளது, அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
* நடைபயிற்சி உங்கள் இதய தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியமானதாகும்.
* நடைபயிற்சி உங்கள் ஸ்டாமினாவை மேம்படுத்துகிறது மற்றும் கர்ப்பம் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருந்தால், அது சுகப்பிரசவத்திற்கு உதவியாக இருக்கும். இது தவிர, இது உங்கள் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும். குறிப்பாக கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, எடை அதிகரிப்பது வழக்காமான ஒன்று, இதனை தவிர்க்க நடைப்பயிற்சி உதவும். ஒவ்வொரு வேளை உணவிற்கு பிறகும் நடைபயிற்சி செல்வது அதிகரித்த கலோரிகளை எரித்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
* இது உணவு செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் சாப்பிட்ட பிறகு ஏற்படும் வீக்கம் மற்றும் முழுமையான உணர்வைத் தடுக்கிறது.
* நடைபயிற்சி மலச்சிக்கலை தடுக்கிறது. எனவே இது நல்ல குடல் இயக்கத்திற்கு உதவுகிறது, ஏனெனில் மலச்சிக்கல் கர்ப்ப காலத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகும், எனவே நீங்கள் தினமும் நடக்கும் போது உணவு இயக்கம் கீழ்நோக்கி மேம்படும்.
* உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மனநிலையை உயர்த்தும் ஆற்றல் கொண்டவை, எனவே இது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது, இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பாஸிட்டிவாக உணரலாம், மேலும் இது உங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
* நடைபயிற்சி உடலை பிரசவத்துக்கு தயாராக்குகிறது. எனவே கர்ப்ப காலம் முழுவதும் தொடர்ந்து நடப்பவர்களுக்கு நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், இதன்மூலம் உங்கள் உடல், தசைகள் பிரசவத்திற்குத் தயாராகின்றன. இது உங்கள் இடுப்பு தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் உங்கள் உடலை பிரசவத்திற்கு தயார்படுத்துகிறது.
* கர்ப்ப காலத்தில் நீங்கள் எந்த உடற்பயிற்சியையும் செய்யும்போது, நீங்கள் அதை மேற்பார்வையின் கீழ் செய்ய வேண்டும். எனவே மருத்துவரிடம் அனுமதி பெற்ற பின்னரே நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கர்ப்ப காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய சிறந்த மற்றும் அனுமதிக்கக்கூடிய உடற்பயிற்சியாக நடைபயிற்சி.இருக்கிறது.



Click it and Unblock the Notifications


