Latest Updates
-
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க.. -
அவரைக்காய் வாங்குனா சாம்பார் வைக்காம இந்த மாதிரி கூட்டு செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
வெயிலுக்கு வாழைத்தண்டை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், உடல் சூடும் குறையும்.. -
அரசியலில் பெரிய தலைவராக வரும் அதிர்ஷ்டமும், தகுதியும் உள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
உடலுறவு பொசிஷன் குழந்தையின் பாலினத்தை பாதிக்குமா? கர்ப்பகால மூடநம்பிக்கைகளை விளக்குகிறார் மருத்துவர் ஐஸ்வர்யா!
இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாடாக விளங்குகிறது. அதேசமயம் இந்தியாவில் எண்ணற்ற மூடநம்பிக்கைளும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்த நம்பிக்கைகள் இன்று நமக்கு அபத்தமானது போல் தோன்றலாம், ஆனால் அதைவிட மோசமானது என்னவென்றால், இன்றும் இவற்றை நம்புபவர்கள் இருக்கிறார்கள். கர்ப்ப காலமானது மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டிய நேரமாகும்.
இந்த சமயத்தில் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. இந்த பதிவில் கர்ப்ப காலத்தில் நம்பக்கூடாத மூடநம்பிக்கைகள் என்னென்ன என்று பிரபல மகப்பேறு மருத்துவர் ஐஸ்வர்யா நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

பப்பாளி சாப்பிட்டால் கருகலையும்
இது பழங்காலம் முதலே நம்பப்பட்டு வரும் ஒரு தவறான நம்பிக்கையாகும். பல தமிழ் திரைப்படங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறிய உண்மையுள்ளது ஆனால் அதிகளவில் மூடநம்பிக்கைதான் உள்ளது. பப்பாளியில் லேடக்ஸ் உள்ளது.
இது ஹார்மோன்களை தூண்டி வலியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், பப்பாளியில் குழந்தையின் முழுவளர்ச்சியயையும் பாதிக்கக்கூடிய அளவிற்கு பப்பாளியில் லேடக்ஸ் இல்லை. உங்களுக்கு பப்பாளி மிகவும் பிடிக்குமென்றால் நன்கு பழுத்த பழங்களை மட்டும் சாப்பிடுங்கள். அதில் மிகக்குறைந்த அளவே லேடக்ஸ் உள்ளது எனவே இதனை உண்பதால் எந்த பாதிப்பும் இல்லை.
உடலுறவு நிலைகள் குழந்தையின் பாலினத்தை பாதிக்கும்
இதனை புத்தியுள்ள யாரும் நம்ப மாட்டார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதனை நம்புபவர்கள் பலர் உள்ளனர். வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிய ஆர்வமுள்ள சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அதிலும் குழந்தை ஆணாக பிறக்க வேண்டுமென வேண்டுபவர்களே அதிகம்.
உடலுறவு பொசிஷன்கள் ஒருபோதும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்க இயலாது. உடலுறவின் போது X அல்லது Y குரோமோசோம்களை வெளியிடுவது ஆண்தான். எனவே குழந்தையின் பாலினத்தை குறைகூறுபவர்கள் ஆணையே குற்றம்சாட்ட வேண்டும். உடலுறவு நிலையை அல்ல.
குங்குமப்பூ குழந்தையை சிவப்பாக்கும்
பாலினத்தை தொடர்ந்து இந்தியாவில் பெற்றோர்களிடம் நிலவும் மற்றொரு மூடநம்பிக்கை குழந்தையின் நிறம் பற்றியதாகும். குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டுமென்றால் கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். குங்குமப்பூவால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் இது குழந்தையின் நிறத்தை மாற்றாது.
சந்திர கிரகணத்தின் போது தாய்மார்கள் வெளியே செல்லக்கூடாது
இந்த நம்பிக்கை ஒருவித பயத்தாலும் சந்திர கிரகணத்தை பற்றி முழுமையாக தெரியாததாலும் நிலவி வருகிறது. சந்திர கிரகணத்தின் போது வெளியே சென்றால் குழந்தை குறைபாட்டுடன் பிறக்கும் என்று நம்பப்படுகிறது. இது நன்றாக ஓய்வு எடுக்க பயன்படுமே தவிர இதனால் வேறு ஒன்றும் நிகழபோவதில்லை. பலகோடி கிலோமீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் நிலா இன்னும் பிறக்காத உங்கள் குழந்தையை ஒன்றும் செய்ய இயலாது.
குழந்தை பிறப்பதற்குமுன் அவர்களுக்கு எதுவும் வாங்கக்கூடாது
இது பெரும்பாலும் அனைவரும் சொல்லக்கூடிய ஒன்றுதான். இது குழந்தையின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தபோது கூறப்பட்டது. குழந்தைக்கு ஆசையாக பொருட்கள் வாங்கி வைத்து அதன்பிறகு குழந்தை இறந்தால் அது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமையும். இதை தவிர்க்கவே அறிவுறுத்தபட்டிருக்கலாம்.
ஆனால், காலத்திக்கேற்றவாறு நாம் புரிந்துகொள்ளவேண்டும். குழந்தை பிறந்த பின் அவர்களுக்கு தேவையான அனைத்தும் வாங்குவதென்பது இயலாத ஒன்று. அவ்வாறு செய்தால் நீங்கள் பொறுப்பற்ற பெற்றோர்களாக ஆகிவிடுவீர்கள். எனவே உங்கள் குழந்தையை பூமிக்கு வரவேற்க அனைத்து பொருட்களுடன் தயாராய் இருங்கள்.



Click it and Unblock the Notifications












