Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
கர்ப்பம் தரிக்க பெரியவர்கள் சொல்லும் இந்த கட்டுக்கதைகளை நம்பாதீங்க... சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஷாலினி...
நீங்களும், உங்கள் துணையும் குழந்தைக்காக முயற்சிக்கிறீர்களா? கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கவும் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தவும் அல்லது நீங்கள் இருவரும் கருத்தரிக்க தகுதியானவர்கள் என்பதை அறிந்து கொள்ளவும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பல முட்டாள்தனமான அறிவுரைகளை கூறி இருப்பார்கள்.
உங்களுக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் சில விஞ்ஞானரீதியாக உண்மையாக இருக்கலாம். ஆனால், அவற்றில் பல மூடநம்பிக்கையாகவும் மற்றும் கற்பனையாக உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். பிரபல மகப்பேறு மருத்துவர் ஷாலினி கருத்தரித்தல் பற்றிய சில கட்டுக்கதைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கால்களை உயர்த்துவது
உடலுறவில் ஈடுபட்டு முடித்தவுடன் 20 - 30 நிமிடங்கள் கால்களை உயர்த்தி வைத்திருப்பது, கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பலரின் கருத்து. ஈர்ப்பு விசையின் காரணமாக விந்து கருமுட்டையை சென்றடையும் என்பதே இதன் பின்னணியில் இருக்கும் காரணம். அறிவியல்பூர்வமாக, ஒவ்வொரு துளி விந்திலும், போதுமான அளவு உயிரணுக்கள் நிறைந்திருக்கின்றன. அவை கருமுட்டையை சென்றடைவது உயிரியல்ரீதியாக திட்டமிடப்பட்டிருப்பதால் அதன் இலக்கை அடைவதற்கு ஈர்ப்பு விசை தேவைப்படாது. இதனால், கால்களை உயர்த்துவது எந்த பலனையும் தராது.
தத்தெடுப்பது
ஒரு குழந்தையை தத்தெடுத்தால், கருத்தரிக்கலாம் என்பது பெரும்பாலான பெண்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், பல பெண்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்த பிறகும் கருத்தரிக்க இயலாமல் இருக்கிறார்கள். ஒரு குழந்தையை தத்தெடுத்த பின் சில பெண்கள் கருத்தரிப்பது என்பது எதேர்ச்சையான ஒரு நிகழ்வு. கருத்தரிப்பிற்கும், தத்தெடுப்பிற்கும் எந்தவித அறிவியல்பூர்வமான தொடர்பும் இல்லை.
பெண்கள் மட்டுமே காரணம்
கருத்தரிக்காமல் இருப்பது பெண்களின் பிரச்சனையாக மட்டுமே நம்பப்படுகிறது. பெண்களின் உடலில் இருக்கும் பிரச்சனையின் காரணமாகவே, கருத்தரிக்க முடிவதில்லை என்னும் கருத்தும் பரவலாக காணப்படுகிறது. மலட்டு தன்மை என்பது ஆண்களிடமும் இருக்கலாம். ஆண்கள் உடலில் இருக்கும் பிரச்சனைகளும் கருத்தரிக்க இயலாமைக்கு காரணமாக இருக்கலாம். பெண்களை மட்டுமே குற்றம் சாட்டாமல் தம்பதிகள் இருவரும் முயற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே நல்ல பலனை தரும்.
அதிக உடலுறவு
தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்து. பெண்களின் மாதாவிடாய் முடிந்த பின்னான ஒரு சில நாட்களில் மட்டுமே, விந்தணு கருமுட்டையினுள் நுழைந்து கருத்தரிக்க இயலும். தினமும் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிப்பதில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது,
இருமல் மருந்து
இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள், விந்தணு கருமுட்டையை விரைவாக அடைய உதவி எளிதாக கருத்தரிக்க செய்வதாக நம்பப்படுகிறது. இருமல் மருந்தில் இருக்கும் மூலப்பொருட்கள் கருப்பை வாயை திறக்க செய்து, விந்தணு கருமுட்டையை எளிதாக அடைய உதவுதாக நம்பப்படுகிறது. இதற்கு அறிவியல்பூர்வமான சான்றுகள் எதுவுமில்லை.
இரண்டாவது கர்ப்பம் தரிப்பது எளிது
பொதுவாகவே முதல் முறை கருத்தரித்துவிட்டால், இரண்டாவது முறை கருத்தரிப்பது எளிதான ஒன்று என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. பல இடங்களில் பெண்கள் இரண்டாவது முறை கருத்தரிப்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்களால் மட்டுமே, இரண்டாவது முறை எளிதாக கருத்தரிக்க முடிகிறது.



Click it and Unblock the Notifications
