Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Exclusive: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மலச்சிக்கல்.. அசால்ட்டா இருக்காதீங்க... எச்சரிக்கும் டாக்டர்...
Constipation In Children: மலச்சிக்கல் பிரச்சனையானது பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக வயதானவர்கள் இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். ஆனால் தற்போது இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதுவும் 2 வயது குழந்தைகளிடையே மலச்சிக்கல் பிரச்சனை அதிகரித்து வரும் போக்கை காண்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மலச்சிக்கல் ஒரு செரிமான பிரச்சனையாக இருந்தாலும், இந்த மலச்சிக்கல் பிரச்சனையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுவும் குழந்தைகள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டால், உடனே அதைக் கவனிக்க வேண்டும். இப்போது குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு எது காரணமாக இருக்கலாம், அதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து வாசவி மருத்துவமனையின் ஆலோசகர் குழந்தை மருத்துவரும், நியோனாட்டாலஜிஸ்டுமான டாக்டர் அசோக் எம்.வி தமிழ் போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

குழந்தைகளிடையே மலச்சிக்கல் ஏற்பட காரணங்கள்
தற்போது குழந்தைகளிடையே மலச்சிக்கல் ஏற்பட ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், குப்பை உணவு, ரொட்டி, பிஸ்கட் மற்றும் ரஸ்க்குகளை அதிகமாக உட்கொள்வது ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. மேலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இல்லாததும், போதுமான அளவு திரவ உட்கொள்ளல் இல்லாததும் ஒரு முக்கிய காரணியாகும். பல குழந்தைகள் சமநிலையற்ற உணவுகளை உட்கொண்டு வருகின்றனர். இதுவும் குழந்தை மலச்சிக்கலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று டாக்டர் அசோக் கூறினார்.
பருவ காலங்கள் காரணமாக இருக்குமா?
தற்போது குழந்தைகளிடையே மலச்சிக்கல் அதிகரிக்க பருவ காலங்கள் காரணமாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் மலச்சிக்கலுக்கும் பருவகாலங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் கோடைகாலத்தில் பல குழந்தைகள் சரியாக நீர்க்குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் வழக்குகள் அதிகரிக்கின்றன.
மேலும் குழந்தைகளிடையே உட்கார்ந்த வாழ்க்கை முறை இந்த பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளது. அதோடு பல குழந்தைகள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுகிறார்கள், எந்நேரமும் சாப்பிடுகிறார்கள், டிவி அல்லது மொபைல் திரைகளைப் பார்க்கிறார்கள், எனவே உட்கார்ந்த வாழ்க்கை முறை மலச்சிக்கலின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது.
இது தவிர அதிகளவில் பால் குடிப்பது மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதும் குழந்தைகளிடையே மலச்சிக்கல் ஏற்பட காரணமாகின்றன. இந்த மலச்சிக்கல் காரணமாக பல குழந்தைகள் வயிற்று வலி, பசியின்மை, வயிற்று அசௌகரியம், இறுக்கமான மலம் மற்றும் ஒழுங்கற்ற குடலியக்கம், அதாவது 3-4 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது போன்றவற்றை அனுபவிக்கின்றனர் என்ற மருத்துவர் கூறுகிறார்.
மலச்சிக்கலை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மலச்சிக்கலால் குழந்தைகள் அவதிப்படும் போது, பெற்றோர்கள் முதலில் அவர்களின் உணவுப் பழக்கங்களை கவனித்து, அதை சரிசெய்ய வேண்டும் என்று டாக்டர் அசோக் கூறுகிறார். அதுவும் குழந்தைகளுக்கு நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும், நீரை அதிகம் குடிக்க வைக்க வேண்டும் மற்றும் அவர்களை நன்கு ஓடியாடி விளையாட வைக்க வேண்டும். இவ்வளவு மாற்றங்களைச் செய்தும் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காணாவிட்டால், உடனே குழந்தைநல மருத்துவரை அணுக வேண்டும் என்றும் டாக்டர் அசோக் கூறினார்.
குழந்தைகளின் மலச்சிக்கலை ஏன் புறக்கணிக்கக்கூடாது?
மலச்சிக்கல் பிரச்சனையானது உணவுகளின் மூலமும், அடிப்படை சிகிச்சைகளின் மூலமும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தால், அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் குறிக்கலாம் என்று டாக்டர் அசோக் கூறினார். அதுவும் குழந்தைகளுக்கு நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும், அடிக்கடி வயிற்று வலியை ஏற்படுத்தும் மற்றும் சாதாரண செயல்பாடுகளை சீர்குலைக்கும்.
இளம் குழந்தைகள் தாங்கள் சந்திக்கும் அசௌகரியத்தைப் பற்றி வெளியே சொல்லத் தெரியாது. இந்நிலையில் பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளின் சிரமத்தைப் புரிந்து, அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு, சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதுவும் பெற்றோர்கள் சிறுநீர் தொற்று, இரைப்பை குடல் பிரச்சினைகள் அல்லது ஹைப்போ தைராய்டிசம் போன்ற அடிப்படை நிலைமைகளை பரிசோதனை செய்யும் மருத்துவர்களை அணுக வேண்டும்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழக்கமாக ஒரே நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் பயிற்சியை அளிக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் அசோக் கூறினார். மலச்சிக்கலைப் புறக்கணிப்பது நீண்டகால சிக்கல்களுக்கு வழிவகுக்கும், ஆனால் சரியான நேரத்தில் தலையீடு செய்தால், அதை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் டாக்டர் அசோக் கூறினார்.



Click it and Unblock the Notifications