Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
கர்ப்பிணி்கள் தினமும் வால்நட் சாப்பிடணுமாம்.. ஏன் தெரியுமா?
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் எந்த வகையான உணவை உட்கொண்டாலும், அதன் நன்மை தீமைகள் கண்டிப்பாக வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். அதனால் எப்போதுமே அவர்கள் கவனமாக இருப்பது நல்லது.. கர்ப்பிணிப் பெண்கள் வழக்கமான உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக இந்த சத்துக்கள் வளரும் குழந்தைக்கும் கிடைக்கும். அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் இரட்டை சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்று அவர்களுக்கும், மற்றொன்று வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சத்தான உணவை கொடுத்து வளர்க்க வேண்டும்..

கர்ப்ப காலத்தில் பொதுவாகவே தாய்க்கு இரத்த எண்ணிக்கை குறையும். ஆனால் கிறைய விடக்கூடாது.. அதற்கு ஏற்ப விட்டமின் மற்றும் ஊட்டடத்துக்கள் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.. தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் ஏராளமாக உள்ளன. அதில் வால்நட் மிக முக்கியமான உணவு.. இது ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும்.. ஏனெனில் அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. அதனால் இந்த வால்நட்ஸ் குழந்தைக்கும் தாய்க்கும் மிகவும் அவசியம். இந்தக் கட்டுரையில் கர்ப்பிணிப் பெண்கள் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
1. அக்ரூட் பருப்பில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. மூளை சக்தியை மேம்படுத்துகிறது. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் பொட்டாசியம், செலினியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு மற்றும் துத்தநாகம் இதில் அதிகமாக உள்ளன.
2. கர்ப்ப காலத்தில் அக்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. உடலில் நல்ல கொழுப்பை அதிகரித்து இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. அதனால் கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக் கொளவது நல்லது..
3. அக்ரூட் பருப்பில் உள்ள தாமிரம் கருவின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், ஆல்பா லினோலிக் அமிலம், குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் அவை நன்றாக வளரவும் உதவுகிறது.
4. மேலும் இது தாய்மார்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.. கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சிறிய நோய்களை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அக்ரூட் பருப்புகள் சிறந்தவை. அக்ரூட் பருப்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ, ஃபோலிபீனால்கள், காப்பர் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன...
5. வீக்கத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.. இந்த வால்நட்ஸ் உட்புற வீக்கத்தையும் குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது குழந்தைக்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கிறது, இதனால் தாயின் உடலில் இருந்து குழந்தைக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
6. மேலும் கர்ப்பிணி பெண்கள் அக்ரூட் சாப்பிடுவதால் அதிகமாக பசியை தூண்டிவிடாது.. பருப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ருசித்து வயிற்றை திருப்தியுடன் நிரப்புவது மட்டுமின்றி, எடை அதிகரிப்பையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் பசி வேதனையை தடுக்கிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயைத் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் , கர்ப்ப காலத்தில் கூட வால்நட்ஸை மிதமாக உட்கொள்ள வேண்டும்.. அதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷமாக மாறக்கூடும்.. அதனால் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எதை சாப்பிட்டாலும் அலவாக சாப்பிடுவது அல்லது பிரித்து பிரித்து சாப்பிடுவது நல்லது..
7. கர்ப்ப காலத்தில் வால்நட் சாப்பிடுவது நன்றாக தூங்க உதவும். காரணம், வால்நட்ஸ் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இது நல்ல தூக்கத்தை வர வைக்கும்..



Click it and Unblock the Notifications