For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் அறிந்திராத கர்ப்பமாக இருப்பதை உணர்த்தும் சில அசாதாரண அறிகுறிகள்!

சில அசாதாரண அறிகுறிகள் நீங்கள் தாய்மை அடைந்தததை உணர்த்தக் கூடியதாக இருக்கும். எல்லா பெண்களும் இத்தைகைய அசாதாரண அறிகுறிகளை உணர்வதில்லை. சில பெண்கள் மட்டுமே இத்தைகைய சூழலைக் கடந்து வருகின்றனர்.

|

பெண்களின் கர்ப்பத்திற்கான அறிகுறிகளில் சில மிகப் பொதுவானவை. வாந்தி, குமட்டல், உணவுத் தேடல் போன்றவை அவற்றுள் சில முக்கிய அறிகுறிகளாகும். இதனைப் பற்றி பலரும் அறிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. இருப்பினும், சில அசாதாரண அறிகுறிகள் நீங்கள் தாய்மை அடைந்தததை உணர்த்தக் கூடியதாக இருக்கும்.

Unusual Pregnancy Symptoms You Should be Aware of

எல்லா பெண்களும் இத்தைகைய அசாதாரண அறிகுறிகளை உணர்வதில்லை. சில பெண்கள் மட்டுமே இத்தைகைய சூழலைக் கடந்து வருகின்றனர். இத்தகைய அறிகுறிகள் குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.

MOST READ: கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் உங்களுக்குக் கொடுக்கும் புதுமையான மற்றும் அசாதாரண அறிகுறிகளைப் பற்றி இங்கே நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் அடங்காமை

சிறுநீர் அடங்காமை

கர்ப்ப காலத்தில், சில பெண்கள் சிரிக்கும் போது சிறுநீரைப் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில நேரங்களில், ஒரு நடைப்பயிற்சியின் போது, அவர்கள் சிறுநீர்ப்பையில் அழுத்தம் மற்றும் சிறுநீர் கழிக்க ஒரு கட்டுப்பாடற்ற தூண்டுதலை உணர்கிறார்கள். உங்கள் கருவறைக்குள் உங்கள் குழந்தையால் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கெகல் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்கள் இடுப்பு தசைகளை ஓரளவு வரை கட்டுப்படுத்தலாம்.

செரிமான வாயு அல்லது வாய்வு தொல்லை

செரிமான வாயு அல்லது வாய்வு தொல்லை

ரிலாக்ஸின் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோனின் சுரப்பு காரணமாக கர்ப்பிணி பெண்கள் இந்த சங்கடமான அறிகுறிகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, ரிலாக்ஸின் வயிற்று தசைகள் மற்றும் தசைநார்களைத் தளர்த்தும். மற்றொன்று உங்கள் குடல் தசைகளை தளர்த்தும். இதனால் செரிமானம் மெதுவாக நடைபெறுகிறது மற்றும் வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. வாயுவிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் லேசான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல்

பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல்

கர்ப்ப காலத்தில் உங்கள் உடலில் ஹார்மோன் சுரப்பில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அசாதாரண அளவு வெள்ளைப்படுதல் ஏற்படும் வாய்ப்பு உருவாகிறது. இந்த ஹார்மோன் சீர்குலைவு மற்றும் திரவத்தை வெளியேற்றுவது உங்களுக்கு எந்த தொற்றுநோயும் வராமல் தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

இது கர்ப்பத்தின் அசாதாரண அறிகுறிகளில் ஒன்றாகும். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் தூக்கத்தில் சிக்கலுக்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். எனவே, நீங்கள் நன்றாகத் தூங்க சில நிதானமான பயிற்சிகள், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட வேண்டும். படுக்கைக்கு முன் ஒரு சூடான குளியல் பெறுவதும் நல்ல தூக்கத்தை வரவழைக்கும். இவை எதுவும் பலன் தராத நிலையில், நீங்கள் மருந்துகளின் உதவியையும் எடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unusual Pregnancy Symptoms You Should be Aware of

Here are some unusual pregnancy symptoms you should be aware of. Read on...
Desktop Bottom Promotion