Just In
- 4 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 11 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
- 13 hrs ago
மாம்பழ பூரி
- 16 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆஞ்சினா மார்பு வலி வரப்போகுதுனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- News
"நம்பிக்கையில்லங்க".. ஃபைல்களை 12 பேரிடம் தந்து சரி பார்த்த எடப்பாடி.. வந்ததே கோபம்! கசிந்த சீக்ரெட்
- Technology
Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!
- Automobiles
இந்த வீடியோவை நிச்சயம் நீங்க பாத்திருப்பீங்க! ஸ்கூட்டர் தானாக விழுந்ததற்கு பின்னால் இருக்கும் மர்மம் இதுதான்!
- Movies
ரோஜா சீரியலில் இருந்து விலகவில்லை... ரசிகர்கள் கோரிக்கையால் மனம் மாறிய சிபு சூரியன்
- Sports
சாவு பயத்தை காண்பித்த அயர்லாந்து.. கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் அசத்தல்.. இந்தியா த்ரில் வெற்றி
- Finance
வேலை நேரம், விடுமுறையில் என்ன மாற்றம் வரலாம்.. புதிய தொழிலாளர் சட்டம் சொல்வதென்ன?
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பெண்கள் மெனோபஸ்க்கு பிறகும் கலவியில் இன்பம் பெற முடியுமா? இதோ தெரிஞ்சிக்கங்க...
டெஸ்டோஸ்டீரான் என்றால் எல்லோருக்கும் ஆண்மை தன்மை தான் நினைவுக்கு வரும். இவ்வளவு காலமும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் ஆண்களோடு தொடர்புடையது என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம்.
த லான்செட் டயாபட்டீஸ் அண்ட் எண்டோகிரனாலஜி என்ற ஆய்விதழில் சமீபத்தில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களின் பாலியல் செயல்பாடுகளில் டெஸ்டோஸ்டீரானின் தாக்கம் குறித்த ஓர் ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது.

மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களின் பாலியல் வாழ்வு சிறக்க உதவுவதில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனின் தாக்கத்தை புரிந்து கொள்ளும் வகையில் டெஸ்டோஸ்டீரான் சிகிச்சை பெற்ற 8,480 பேரிடம் 36 பரிசோதனைகளை 12 வாரங்கள் செய்து 46 ஆய்வறிக்கைகளை தயாரித்த பின்னர் ஆராய்ச்சி குழுவினர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

பெண்களுக்கு பயன்தரும் டெஸ்டோஸ்டீரான்
டெஸ்டோஸ்டீரான் ஆண் ஹார்மோன், அது ஆண்களுக்கே பயனளிக்கும் என்று நீங்கள் நம்பினாலும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளின் முடிவுகள் வேறானதாய் உள்ளன. இந்த ஹார்மோன் பெண்களின் பாலியல் வேட்கை, பாலியல் உச்சக்கட்டம் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, தசை வலிமை, மனவோட்டம், வளர்சிதை மாற்ற செயல்பாடு மற்றும் சிந்தனை திறன், ஞாபக சக்தி மற்றும் தர்க்கரீதியான ஆற்றல் இவற்றையும் மேம்படுத்த உதவுகிறது.

ஹார்மோன்
கடந்த கால ஆராய்ச்சிகள் இந்த ஹார்மோன் பெண்களுக்கு நன்மை தரும் என்று சுட்டிக் காட்டியபோதும் பெண்களிடம் இது ஏற்படுத்தும் தாக்கத்தின் தடம் இல்லாமல் ஆண்களுக்கான டெஸ்டோஸ்டீரான் மருத்துவ முறைகளே உருவாக்கப்பட்டு வந்தன.
டெஸ்டோஸ்டீரான் சிகிச்சை பாலியல் செயல்பாட்டில் அளிக்கும் தாக்கத்தையும் இதயம், சிந்தனை மற்றும் தசை மண்டல ஆரோக்கியம் போன்ற ஏனைய நலம் குறித்தும் ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை தற்போதைய ஆராய்ச்சி குழுவினர் பரிசீலித்துள்ளனர். 1990 முதல் 2018 ஆண்டுவரையான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.

பெண்களின் மனவோட்டம்
பெண்களின் மனவோட்டம், லிப்பிடுகள் என்னும் உயிரிமூலக்கூறுகள், மார்பக அடர்த்தி, கூந்தல் வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் டெஸ்டோஸ்டீரான், பெண்களின் சிந்தனை, எலும்பின் அடர்த்தி, தசை வலிமை மற்றும் உடலில் தாதுக்களின் விகிதம் ஆகியவற்றில் எந்த நன்மையையும் தரவில்லை என்ற முடிவை ஆராய்ச்சியாளர்கள் எட்டியுள்ளனர்.

கூடுதல் நன்மை
மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்ட பெண்கள், ஒரு மாதத்தில் பாலுறவு கொள்ளும் வேளைகளை அதிகப்படுத்தியுள்ளதைக் காட்டிலும் கூடுதல் நன்மைகள் விளைந்துள்ளன என்று ஆஸ்திரேலியாவிலுள்ள மோனாஸ் பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் சூசன் டேவிஸ் கூறியுள்ளார்.
சில பெண்கள் தங்கள் பாலுறவு குறித்து அதிருப்தி தெரிவித்த நிலையில், உறவே இல்லை என்ற நிலை மற்றும் எப்போதாவது உறவு என்ற நிலையிலிருந்து மாதம் ஒருமுறை அல்லது இரண்டு முறை என்ற நிலையை சாத்தியப்படுத்தியிருப்பது தற்பெருமிதத்தை மேம்படுத்தி பாலியல் வாழ்வு குறித்த கவலையை குறைப்பதோடு முழுநோக்கில் உடல்நலத்தை மேம்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பக்க விளைவுகள் இல்லை
இந்த எல்லா தரவுகளை கருத்தில் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் சிகிச்சை காரணமாக எந்தப் பக்கவிளைவையும் உணரவில்லை என்பதோடு, தனி நபர்களின் இன்சுலின் அளவு, இரத்த அழுத்த அளவு, குளூக்கோஸ் அளவு மற்றும் மார்பக நலத்தில் எந்தப் பாதிப்புகளும் நிகழவில்லை என்றும் கருதுகின்றனர்.
டெஸ்டோஸ்டீரான் சிகிச்சை பெறும் பெண்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் மற்றும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் வரும் அபாயம் குறைவு என்று கூறியுள்ளனர்.
MOST READ: ஆண்கள் ஒரே இரவில் எத்தனைமுறை உறவு கொள்ள முடியும்?... எவ்வளவு நேரம் இடைவெளி?

கொலாஸ்ட்ரால் அளவு
ஆனாலும் சிகிச்சை பெறுவோருக்கு லிப்பிடுகள் என்னும் உயிரி மூலக்கூறு எண்ணிக்கையில் தாக்கம், எல்டிஎல் என்னும் தீங்கு தரும் கொலாஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், ஹெச்டிஎல் என்னும் நன்மை தரும் கொலாஸ்ட்ரால் அளவு குறைதல் போன்ற சிறிய பக்கவிளைவுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களிடையே டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நம்பகத்தன்மை வாய்ந்த உறுதியான முடிவுகளை அறிவிக்க இன்னும் பல மருத்துவ ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்று பேராசிரியர் டேவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.